Saturday, 20 April 2019

வளர்ந்த சிறுமி

திருவிழா வீதியில்
நடக்கிறேன்
நடைபாதை
முழுக்க
பொம்மைகளும்
விதவிதமான
சொப்புப்பாத்திரங்களும்
இறைந்துக்கிடக்கின்றன
பொருளற்ற
அம்மையிடம்
சொப்புக்களைக்
கேட்டு அடம்பிடித்து
அழுதச்சிறுமி
நினைவின் வழி
வருகிறாள்
இப்போது
கையில் காசுடன்
அதே மையலுடன்
பொம்மைகளை
வேடிக்கைப்பார்த்து
வாங்கும் செயலற்று
வளர்ந்த சிறுமியாய்
வீதியைக் கடக்கிறேன்!



Image may contain: food

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...