பயிற்சிக் களம்
பாழ்பட்டுக் கிடக்கிறது
பயிற்சி முடிந்தபின்பு
அமுதின் சுவை
கசந்து கிடக்கிறது
நாவைக் கடந்தபின்பு
வாய்ப்பிளப்பின் ஈரம்
வறண்டு கிடக்கிறது
தாகம் தீர்ந்தபின்பு
ஏறிக் குதித்த பாலம்
பிளவுண்டு கிடக்கிறது
தூரம் கடந்தபின்பு
நெகிழ்ந்துக் குழைந்த நிலம்
இறுகிக் கிடக்கிறது
ஈரம் உறிஞ்சிய பின்பு
அனிச்சையாய் மலர்ந்த
மலர்கள் பறிக்கப்பட்டு
கிளைகள் முறிக்கபட்டப்
பின்னரும் - வேரில்
இன்னும் ஈரமிருக்கிறது!