Thursday 16 May 2019

கண்ணாடி_பிம்பங்கள்


அவளுக்கு என்னிடம்
ஆழ்ந்த நட்பு, நம்பிக்கை, காதல்
இதில் எது வேண்டுமோ
நிரப்பிக்கொள்ளலாம்

எப்போதும் எனக்காக
காதுகளைக்கொடுப்பாள்
நான் எப்போதாவதுதான்
அழைப்பேன்
எப்போதும் காண நினைப்பாள்
ஏதேதோ கதைகளைச் சொல்லி
பயணப்பட்டு வருவாள்
நான் வெட்டியாய் ஊர்ச்சுற்றினாலும்
அவளைக்காண தலைப்படுவதில்லை

பிறந்தநாள் என்றும்
வெற்றிகளுக்கு பாராட்டு என்றும்
அன்பாய் பரிசுகள் தருவாள்
அவள் கேட்டும்கூட எதையும்
நான் கிள்ளியும் தந்ததில்லை
என் குடும்பத்தோடு உறவாடுவாள்
எல்லோரின் நலத்தையும் நாடுவாள்
அவளை நலமா என்று
ஒருநாளும் நான் கேட்டதில்லை

எந்நேரமும் பிரியத்தோடு பேசுவாள்
ம்ம் என்ற என் ஒலியில்
ஒருவேளையில் கூட
பரிவே இருந்ததில்லை
எனக்காக வேலைகளை
தள்ளிவைப்பாள்
வேலை இருந்தாலும்
இல்லையென்றாலும்
நான் அவளை அரவணைத்ததில்லை

எப்போதும் சிறுதுளி அன்பையே
வேண்டுவாள்
காயங்களைத் தவிர வேறு எதையும்
நான் தந்ததில்லை
எப்படி என் நடத்தை இருந்தாலும்
எதையும் எளிதில் மறந்துவிடுவாள்
அவளின் சிறு சுணக்கத்தைக்கூட
பெரும் வன்மமென்று
நான் பெயரிடாத நாளில்லை

நிறைந்தக் கல்வியில்
நிறைக்குடமாய் அமைதியாய் இருப்பாள்
என் அனுபவ அறிவின் பெருமிதத்தில்
எதையும் கேட்க மறுத்து
நான் அவளை அவமதிக்காத நாளேயில்லை
ஆசையோடு ஒருநாள்
பார்க்கவேண்டும் என்றாள்
உலகப்பயணமென்று கதைச்சொல்லி
உள்ளூர் சந்தையின் உலா போதையில்
வழக்கம் போல் அழைப்பை ஏற்கவில்லை

எது எப்படி இருந்தாலும்
எனக்கு அவள் மீது அன்புண்டென்று
என் பயணங்களின் வழியில்
போனால் போகிறதென்று
அவளிடம் உரைப்பேன்
அந்தச்சிறுத்துளி பொய்யை
அவள் மெய்யென நினைத்து
மெய்சிலிர்த்துப்போவாள்
அதனால் என்ன
எந்தப்பொய்களும் இந்தச் சுயநல
வாழ்க்கையில் என்னை சுட்டதில்லை

வாழ்தல் ஒருமுறையென்று
எல்லோருக்குமாய் வாழ்ந்தவள்
“நான் இல்லாமல் போகும்போது
நீ கொஞ்சமேனும் மாறுவாயா?”
என்றாள்
“இரங்கற்பா எழுதி அதையும்
கரைத்துவிடுவேன்,
விபத்தோ இயற்கை மரணமாகவோ
அது இருக்கட்டும்,
எழுதுவது எளிதாக இருக்குமென்று”
நகர்ந்தேன் மனதில் கருணையில்லை!

நீங்கள் முகஞ்சுளிப்பது தெரிகிறது
கொஞ்சம் கண்ணாடியின் முன்
நின்றுப்பாருங்கள் நான் தெரிவேன்
உங்களுக்குள்!!!

#கண்ணாடி_பிம்பங்கள்


No photo description available.

Nothing worth

At the end, there is nothing worth to worry in the marathon life!

Image may contain: text

நிவாரணம் எனும் விலை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் எது நடந்தாலும், அரசுக்கு தெரிந்தது எல்லாம் “நிவாரணம்” மற்றும் “விசாரணைக்கமிஷன்” (இது நடக்கும் வேகத்துக்கு, இதெல்லாம் “உலகிலேயே மெதுவான விசாரணை” என்று கின்னஸ் புத்தகத்தில் வந்திருக்க வேண்டும்). “எங்கப்பா எனக்கு நிறைய சொத்து சேத்து வச்சிட்டு போயிருக்கார், அதனால நான் இஷ்டத்துக்கு செலவு செய்வேன்” என்பது போல, “இந்த ஜனங்ககிட்ட நிறைய வரிப்பிடுங்குறோம், சாராயத்தாலும் நிறைய வருது, எவன் செத்தா என்ன, நிவாரணம் கொடுத்தா போச்சு” என்ற ரீதியில் இயங்குகிறார்கள்! 

சென்னையில் எல்லா வகையிலும் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் அலட்சியத்தால் கட்டிடம் இடிந்து பல உயிர்கள் போனது, பலரின் வீடு என்ற கனவு சிதைந்து, கடனாளியானார்கள், நீர் மேலாண்மையின் அலட்சியத்தில் எப்போதும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர், அலட்சியான நிர்வாகத்தால் பல்வேறு விபத்துகள் சாலையில், கட்டிடங்களின் வரைமுறை கோளாறுகளில் ஏரிகளும் குளங்களும் மாயமாய் மறைந்துக்கொண்டிருக்கிறது, தீ விபத்துகள், பள்ளிச்சார்ந்த விபத்துகள் என்று எதிலும் ஏதோ முதலாளிகளின் மெத்தனமும் அதற்கு அரசு அதிகாரிகளின் ஆதரவும் நிச்சயம் இருக்கும், “சாலையில் விளம்பரப்பலகைகளை வைக்கக்கூடாது என்று உங்களுக்கு நாங்கள் எத்தனை முறை சொல்வது?” என்று உயர்நீதிமன்றம் கண்டிக்கும் அளவுக்கு அரசின் இயக்கம் இருக்கிறது!

சமீபத்தில் அரசுத்துறையில் இருக்கும் நண்பர், மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், விலங்குகளைப்பற்றி யோசித்துப்பார் என்று அதில் நடக்கும் ஊழல்களை சுட்டிக்காட்டினார், இப்போது நடந்திருக்கும் எச்ஐவி இரத்தம் ஏற்றியக்கொடுமை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது, வராதது இன்னும் எத்தனை என்பதை பாதிக்கப்பட்டவர்களைத் தவிர யார் அறிவார்?
“தவறுக்கு அடிப்படைக் காரணிகளான லஞ்சத்தையும், தகுதியற்ற அதிகாரிகளையும், அலுவலர்களையும், நேர்மையற்ற நிர்வாகத்தையும் சீர்செய்யாதவரை இதற்கெல்லாம் தீர்வில்லை!” அதுவரை இதுபோன்ற அதிர்ச்சிகளை தாங்கிக்கொள்ள பழகவேண்டும்!

மதியாத வரம்

கிடைக்கும்வரை
காத்திருக்கும் தவம்
கிடைத்தபின் மதியாத வரம்
அன்பு

வளர்ப்பையும் தரத்தையும்

உரசுகிற தீக்குச்சிகளை
எதற்கு உபயோகிக்கிறோம்
என்பதில் இருக்கும் தெளிவு
வாயைத் திறந்து கொட்டும்
வார்த்தைகளிலும் இருக்கவேண்டும்!
இரண்டுமே வெளிச்சம் தரலாம்
அல்லது மொத்தமாய் எரித்துச்
சாம்பலுமாக்கலாம்
உடன் அந்தச்செயல்
நம் வளர்ப்பையும் தரத்தையும் கூட
வெளிச்சம் காட்டலாம்!


Image may contain: text

வேகச் சாரலில்

"கடவுளே, நிறைய டிராபிக் ஜாம் ஆகணும்!"
"ஹலோ பல்லவன் அங்கிள் பிரிட்ஜ்ல இன்னும் மெதுவா போங்க!"
"ஹலோ ஆட்டோ சைடு கொடுக்காதீங்க!"
"கடவுளே கடவுளே எங்க வீட்டு வாசல்ல கேட் மூடியிருக்கணுமா!"
இதெல்லாம் நடன வகுப்பில் இருந்து என் சின்ன சில்வண்டை பைக்கில் அழைத்து வரும் போது, மழைச்சாரல் துவங்கியிருந்த மாலைவேளையில் நனைய அவள் பலமாய் வேண்டியது, அம்மாவுக்கு மழை பரவசம், மழைக்கு மகள் மீது பரவசம், வேகச் சாரலில் நனைத்துச்சென்றது❤️

மரமாக உனக்காக நான்

“எல்லாம் தருகிறது
எதையும் கேட்கவில்லை
அல்லது
எதையோ கேட்டு
இலைகள் ஓயாமல்
சலசலத்தும்
ஒன்றும் புரியவில்லை”
இந்த மரம் போலவே
நானிருக்க பணிக்கிறாய்
உன்னுடன் பயணிக்கிறேன்
ஓயாமல் சலசலக்கிறேன்
உணர்ந்துக்கொள்ளும்
கருணையில்லா
அந்தச் சுயநலப்படகுக்கு
மரமாகி மரித்தாலும்
துடுப்புத்தந்துவிடும்
அவசியத்தில்
ஒவ்வொரு வெட்டிலும்
துளிர்த்து கிளர்ந்தெழும்
மரமாக
சில கிளைகளுடன்
வாழ்ந்திருக்கிறேன்
உனக்காக நான்!


No photo description available.

பொதுநல_வழக்குகள்

தமிழ்நாடு முழுக்க பேனர்கள் வைக்கத்தடை, டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு! நேற்று இந்த வழக்குத்தொடர்பான செய்தியில், எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் அதிகாரிகள் மெத்தனமாய் செயல்படுவதற்கும் கண்டனம் தெரிவித்து இருந்தனர், இன்னொரு வழக்கில் கிட்டதட்ட 86 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருந்தே ஒரே காரணத்துக்காக முடித்துவைக்கப்பட்டதையும் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது, இப்படி நாட்டில் குப்பைகள் தேங்குவதில் இருந்து, சாலைகளின் கட்டமைப்புத் தொடங்கி குழந்தைகள் கடத்தல் வரை, வழக்குகள் வழக்குகள் அத்தனை #பொதுநல_வழக்குகள்!

இத்தனை முக்கிய வழக்குகளில் இரண்டை மட்டும் எடுத்துக்கொள்வோம், சாலை ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்ட பொதுநல வழக்குகள், மற்றும் குழந்தைகள் கடத்தல்!
டிராபிக் ராமசாமி என்ற ஒற்றை மனிதரின் பங்களிப்பும் எஞ்சியிருக்கும் நேர்மையான அதிகாரிகளாலும், நீதிமன்றங்களாலுமே இன்றைக்கு சில சாலைகள் சாலைகளாக இருக்கிறது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, லெட்டர் பேட் கட்சி, என்று எத்தக்கட்சியாய் இருந்தாலும் நடைபாதைகள், மரங்கள், குடியிருப்புகள், பொது வாகனங்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் அத்தனை பேனர்கள் - விளம்பரப்பதாகைகள், அத்தனையையும் வைத்துவிட்டு, போக்குவரத்தை நிறுத்திவிட்டு, இந்தக் கட்சிகளின் வாகனங்கள் பறந்துவிடும், ஆனால் அதன் பின், போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கிக்கொள்வார்கள், விபத்துகள் நேரிடும், விபத்தின் வழக்குகள் விபத்தாக முடித்துவைக்கப்படுமேயன்றி, ஒருநாளும் மோசமான சாலைகளுக்காக, நேர்மையற்ற கட்டமைப்புகளுக்காக இந்த அரசையோ அதிகாரிகளையோ தண்டித்ததேயில்லை!

ஒரு சாதரண இளைஞன் தலையில் தலைக்கவசம் அணியாமல் சாலையில் பறப்பதற்கும், பல வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, சாலையில் சட்டத்தைப்பற்றிய பயமும் விழிப்புணர்வும், பொதுநலச்சிந்தனையும் இல்லாமல் நாள்தோறும் விபத்துகளை ஏற்படுத்துவதற்கு எது காரணம், நடைபாதைகள் முழுக்க பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் தங்கள் கடைகளை விரிவுபடுத்தியும், நடைபாதைகளை, சாலையோரங்களை நிரந்தர கடைகளாகவும், ஒழுங்கற்ற வாகன நிறுத்தங்களாகவும் மாற்றியதற்கு யார் காரணம்? தீ விபத்துகள் நேர்ந்தால் தப்பிக்க வசதியின்றி இயங்கும் பள்ளிகளும், கல்வி நிலையங்களும், அலுவலகங்களும் இன்று ஏராளம், அனுமதியின்றி முறையான தரச்சான்றுகள் இன்றி சாலையில் விரையும் வாகனங்கள் ஏராளம், அதனால் உயிர்பலிகளும் ஏராளம்!

ஒரு டிராபிக் ராமசாமியும் ஒரு உயர்நீதிமன்றமும் இதற்கெல்லாம் தீர்வு காண முடியாது, மக்கள் சுயநலம் மிகுந்து பெருத்துவிட்டார்கள், தங்கள் உயிரையோ பிற உயிர்களைப்பற்றியோ அவர்களுக்கு கவலையில்லை, வதவதவென இருக்கும் ஆக்கிரமிப்புகள் பற்றியும் தங்களால் ஏற்படும் சிரமங்களை அதைத்தொடர்ந்து ஏற்படும் விபத்துகளைப்பற்றியோ வியாபாரிகளுக்கு கவலையில்லை, பேருந்தில் உயிரோடு வைத்து எரித்தாலும் சில பல வருடங்களில் வெளியே வந்துவிடலாம், பணமோ கட்சியோ இருக்கிறது காப்பாற்ற!

இதற்கென தற்காலிக தீர்வுகள் என்பது, நீதிமன்றங்களும் டிராபிக் ராமசாமிகளும் மட்டும்தான், நிரந்தர தீர்வு வேண்டுமென்றால், அமைச்சர்களுக்கும், கட்சிகளுக்கும் கட்டுப்படாத அதிகாரம் மிக்க அமைப்பு ஒன்று வேண்டும், இனி எந்த வாகனங்களிலும் கட்சிக்கொடிகளே இருக்கக்கூடாது என்றும், ஆம்புலன்ஸை தவிர்த்து யாருடைய வாகனங்களுக்காகவும், அது ஆள்பவரே என்றாலும் போக்குவரத்து நிறுத்தப்படக்கூடாது என்றும் சட்டம் இயற்றி அதை அமல்படுத்த வேண்டும், நாடு முழுக்க கண்காணிப்பு கருவிகள் நிறுவ வேண்டும், போக்குவரத்து நிறுத்தப்படாது என்றால் மட்டுமே இந்த கட்சிகளுக்கு கண்மூடித்தனமாக அனுமதித்த ஆக்கிரமிப்புகள் புரியும், சாலையில் சிக்கி, விபத்துகள் நேரிடும் போதே கட்டமைப்பின் கோளாறுகள் புரியும், சுங்கக்கட்டணங்கள் இவர்களும் செலுத்தவேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தால் மட்டுமே அதன் கொள்ளைகள் புரியும் (ஒரு பகுதி வருமானம் இங்கேயும் போகும் என்பதால் இதை எளிதாக கடந்துவிடலாம்) இவர்கள் பெருத்த சுயநலவாதிகள் என்பதால் அவர்களுக்காக சாலைகளையும் கட்டமைப்புகளையும் சீரமைப்பார்கள்!

இது போலவே குழந்தைகள் கடத்தலும், இந்தச் சாலை விதிமுறைகளையும், வாகன கண்காணிப்பையும், நேர்மையான அமைப்பையும், தலையீடற்ற அதிகாரத்தையும் செயல்படுத்தினால், கடத்தல்களை கண்காணிக்கவும் தடுக்கவும் முடியும், நாள்தோறும் வடக்கில் இருந்து தெற்கிற்கு நகர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் மனிதர்களை கண்காணித்து கட்டுப்படுத்தி, சாலையில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுப்பவர்களை மீட்டெடுத்து குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு வலுவான சட்டத்தையும் அமல்படுத்தும் வரை இதுவும் தொடரும், எத்தனையோ சிக்னல்களில் குழந்தைகள் பிச்சையெடுக்கும், சாலைகளை மட்டும்தான் பார்க்கும் போக்குவரத்துத்துறை, மாற்றப்படி அவர்களுக்கு, அவர்களை அப்புறப்படுத்தும், குழந்தைகளை மீட்டெடுக்கும் அதிகாரம் இல்லை, இல்லாமல் இருக்கலாம் அல்லது குற்றத்தில் மறைமுக பங்கும் இருக்கலாம், கண்முன்னே நிகழும் குற்றங்களுக்கு நாமும் ஒரு மறைமுக சாட்சிதானே?

ஓட்டுப்போட்டு ஆட்சி அதிகாரத்தை ஒரு சாராரிடம் கொடுத்துவிட்டு, நாட்டில் குப்பையை அகற்றுவதில் இருந்து, காற்று மாசை ஏற்படுத்தும் ஆலைகள் முடக்குவது வரை நீதிமன்றங்களையே நாட வேண்டியிருக்கிறது, வழக்குகள் மூலமே நாட்டில் மாற்றம் நடக்குமென்றால், தகுதியற்ற ஆட்சியாளர்களை, இந்த வழக்குகளின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் கொண்டு மக்களே கலைக்கும் அதிகாரத்தை கொடுக்கும் ஒரு சட்டம் வேண்டும், அதுவரை பொதுநல வழக்குகளும் நீதிமன்றங்களுமே துணை! 😓
#Public_Litigation #Judiciary #Traffic_Ramasamy #டிராபிக்_ராமசாமி

மெல்லிய மனங்கள்!


இறைந்துக்கிடந்த
பூக்களை மிதித்துவிடாதபடி
தோளில் சுமைக்கொண்ட
ஒருவன்
தள்ளி நடக்கின்றான்
அழுத்தும் சுமையில்
முதுகு வளைந்தாலும்
இயன்ற அளவில்
பாதையோர பூக்களை
ஓரம் குவித்து
மெதுவே நகர்கிறான்
கைவீசி கொழுப்பைக்
கரைக்க
எதிரே நடந்துவந்தவன்
வானம் நோக்கிய
கர்வப் பார்வையில்
காலில் மிதிப்பட்ட
பூக்களின் வலியை
உணரவில்லை
“சார் ஓரம் வாங்க!”
என்ற சுமைத்தாங்கியின்
பரிதவிப்பின் குரலுக்கு
“நான்சென்ஸ்
இந்தக் குப்பைக்காக
நான் ஓரம் வரணுமா?”
என்று பூக்களை
ஓங்கி உதைத்துச்
சிதைக்கிறான்
இருவேறு துருவங்களை
கண்டு சலித்தப் பூக்கள்
“எப்போதும் அவரவர்களுக்கு
அவரவர் நியாயம்
சிதைவதென்னவோ
பூக்களை போல
மெல்லிய மனங்கள்தானேயென்று”
சிரித்துக்கொண்டே
பூமியில் சிதைந்து மடிந்தன!❤️

#மெல்லிய_மனங்கள்!



Image may contain: plant, tree, flower, outdoor and nature

Positivity

Being positive is not a thought but an act!

https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/48383592_2615341298481308_6564050517645852672_n.jpg?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=ee39d9e1a21f10962bc4fa407da11602&oe=5D731ADD

சாரல்_மழை

கொஞ்சம் கரைக்கிறது
இறுக்கத்தை
சிறிது ஆற்றுகிறது
புழுக்கத்தை
மெதுவாய் வீசி
சட்டென்று சோவென
பெய்யும் வேளையில்
மனம் முழுக்க
ஏகாந்தத்தை
நிரப்புகிறது
#சாரல்_மழை! ❤️



Image may contain: outdoor and nature

கார்ப்பரேட்டுகள் ராஜ்ஜியம்

முதலில் கிழக்கிந்திய கம்பெனி
பின் பிரிட்டிஷ் ராஜ்ஜியம்
சமீபத்தில் மோடி அரசாங்கம்
இப்போதும் எப்போதும் குஜராத்
கார்ப்பரேட்டுகள் ராஜ்ஜியம்
1947 ஆகஸ்ட் 15 இல் கிடைத்தது
2014 மே 26 இல் தொலைந்து போனது
மதியாத சுதந்திரம்!


No photo description available.

வாழ்ந்திரு

மரணத்திற்கும்
வாழ்க்கைக்குமான
இடைவெளி
சில மணித்துளிகள்தான்
இந்த இரவின்
நீள்பொழுதில்
அந்த சில மணித்துளிகளின்
பல பக்கங்களை
நீயேன் என் குருதிக்கொண்டு
வரைகிறாய்
என்று யோசிக்கிறேன்
அலையலையாய்
எழும் நேசத்தையும்
பகிரத்தலைப்படும்
உணர்வுகளையும்
அங்குசம் கொண்டு
அடக்கி சிறைப்படுத்துகிறேன்
கட்டுண்ட படகாய்
எண்ணங்கள் தளும்ப
ஓர் ஆழ்ந்த தனிமைக்குள்
புதைந்துப்போகிறேன்
மௌனத்தின் வேர் அறிந்தவன்
என்று நீ ஆனந்தமாய்
பிரசங்கம் செய்ய
ஒரு வெற்றுப்பார்வையில்
உன்னை நிரப்பிக்கொண்டு
நீ எப்போதும் மதியாத
அந்த அன்புடன்
தொலைந்துப்போகிறேன்
அன்பே இனியாவது
முகமூடிகள் அகற்றி
நீ நீயாக #வாழ்ந்திரு!



Image may contain: 1 person

நாட்டிய அரங்கேற்ற நிகழ்வு

இந்த வருடத்தில் ஒருநாள் பழைய அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்த சகோதரி உஷா, தன் மகளுக்கு நாட்டிய அரங்கேற்றம், மே மாதம் வைத்திருக்கிறேன், அந்த நாளில் சிறிது நேரம் ஒதுக்க முடியுமா என்று கேட்டார், நாடகம், நாட்டியம், பாடல்கள் என்று எல்லாவற்றிலும் இயல்பிலேயே இருக்கும் ஆர்வத்தாலும், உஷாவுக்காகவும், அரைநாள் விடுமுறை எடுத்தால் என்ன தோன்றியதாலும் சரி என்றேன், திடுதிடுப்பென்று “இல்லை, நீங்கள்தான் முக்கிய விருந்தினர், அதுதான் நிச்சயம் வரமேண்டுமென்று கேட்கிறேன்” என்று ஒரு ஆனந்த அதிர்ச்சியைத் தந்து, விடாப்பிடியாய் என் பட்டங்களை பெயருக்கு பின்னே வரிசைக்கட்டி அழகான இந்த அழைப்பிதழை அச்சிட்டு குடும்பச் சகிதமாய் வீட்டிற்கு வந்து அழைத்தார், முறையாய் நாட்டியம் பயின்றவர்கள், ஆசிரியர்கள் என்று அந்தக் கலைத்துறைச் சார்ந்த மேதைகளுடன், நான் எப்படி மேடையில் என்று தயங்கிய போது, “அமுதா உங்க மனசு எனக்குத்தெரியும், நீங்க வந்து மனசார செய்யும் வாழ்த்து எனக்கு வேணும், அதுக்குத்தான் கூப்பிடறேன், என் மகளுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும்” என்ற போது, மனதைப்படித்து, நேசிக்கும் மனிதர்கள் போகும் இடமெல்லாம் கிடைப்பதொரு வரமென்று உணர்ந்தேன்!

உஷாவின் கனவும், அயராத உழைப்பின், அவர் மகள் “ரம்யாவின்” நடனத்தில் தெரிந்தது, அம்மாவைப்போலவே அழகான பெண் குழந்தை, அம்மாவைப்போலவே தன்மையும் மென்மையான அணுகுமுறையும், அந்த மாலை வேளையில் ரம்யாவின் பெயருக்கேற்ப அந்த மாலைப்பொழுது ரம்யமாய் ஆனது, நாட்டிய மேதைகள் நிறைந்திருந்த சபையில், அற்புதமாய் ஆடிய அந்தக்குழந்தையின் நடனத்திற்கு பாராட்டுக்களையும், திறமை மேன்மேலும் வளர்ந்து ஒளிவிட வாழ்த்துகளையும் சொல்லி விடைப்பெற்றேன்!

இத்தனை மாதங்கள் கடந்து இத்தனை தாமதமாய் எழுதுவதற்கு காரணம், வழக்கமான வேலைப்பளூ என்பதை விட, மனம் நிறைய அன்பிருந்தாலும், நடன ஆளுமைகளின் மேடையில், வெறும் ரசிகையாய் அமர்ந்திருந்த தயக்கமே காரணம், இந்த வருடம் முடியப்போகும் இந்தக்கடைசி மாதத்தில், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் வெளிப்படுத்தாமல் வைத்திருக்காதே என்று மனம் இடித்துரைத்ததின் வெளிப்பாடே இது!
உஷா, உன்னுடைய உழைப்பும் கனவும், இந்த வாழ்க்கைப்பாதையை உனக்கு வரமாக மாற்றட்டும், ரம்யாவிற்கு எப்போதும் சிறந்தவைகளே கிட்டட்டும்! God bless!

Image may contain: 2 people, text

பூமி

ஆழப் புதைந்தவைகளை
தோண்டியெடுத்து
விலைமதிப்பற்ற உலோகங்கள்
என்று கொண்டாடி
கண்ணெதிரே நிறைந்திருந்த
பசுமையையும்
உயிர்களையும்
நாளை பற்றிய சிந்நனையின்றி
கொன்று தீர்த்த
மனிதர்களையெண்ணி
அவ்வப்போது
புலம்பி வெடிக்கிறது
பூமி!

மீண்டும் மீண்டும்
வருகிறது கடலலைகள்
பற்றிக்கொள்ளாமல்
தாங்கி நிற்கிறது
பூமி

காயங்களை
தாங்கி நிற்கும்
மனிதர்களை போல
தன்னைக் குடையும்
மரக்கைகளை
வெட்டிச்சாய்க்கும்
மனிதர்களை
தாங்கி நிற்கிறது
பூமி

எத்தனை வேண்டுமெனாலும்
ஆடிக்கொள்
இறுதியில் என்னிடம்தான்
என்கிறது
பூமி

காதலோடு
மொழியும் மழையை
மரங்களில் வேர்களில்
பதுக்கிக்கொள்கிறது
பூமி

சாய்ந்த மரங்களும்
உதிர்ந்த வன உயிர்களும்
மண்ணில் உரமாக,
சிதையில் விழும்
மனிதர்களை
என்ன செய்வதென்று
திகைக்கிறது
பூமி

வருகிறார்கள்
போகிறார்கள்
முளைக்கிறார்கள்
மடிகிறார்கள்
எல்லாவற்றையும்
தின்று விடுகிறது
#பூமி

பொறுமையாய்
இருக்கிறது
என்கிறார்கள்
உண்மையில்
இயங்கிக்கொண்டேயிருக்கிறது
தனியாக
இந்தப் பூமி!



Image may contain: sky

காயத்தின் வடுக்கள்

சில வார்த்தைகள் மனதின் ஆழம் வரை தைத்துவிடுகிறது, என்ன முயன்றாலும் அதிலிருந்து வெளியேற முடிவதில்லை, அப்போதெல்லாம் நிற்க நேரமின்றி உழைக்கவும், காயத்தை உறவாகக் கருதவும் கற்றுக்கொண்டால் காயத்தின் வடுக்கள் எல்லாம் அனுபவத்தின் விழுப்புண்களாகிவிடும்! ❤️

முதுமையடைகிறார்கள்

எப்போதும் பிறர் வயதுக்குறித்து
கேள்விக்கேட்டு ஆராய்பவர்களும்,
தம் வயதை
யோசித்துக்கொண்டே இருப்பவர்களும்,
விரைவில் முதுமையடைகிறார்கள்!

No photo description available.

புற்றுநோய்

ஒரு சேனலில் நடிகை ஒருவர் “பல வண்ண நிறங்களிலான இந்த உணவுப்பண்டங்கள் புற்றுநோய்களுக்கான காரணிகள்” என்று உணர்ச்சிவசமாய் நடிக்கிறார், பின் மற்றொரு சேனலில் விளம்பர படத்தில் இதைக்குடித்தால்தான் ஆரோக்கியம் நிலைக்கும் என்று வேறு ஒரு வேடம் பூணுகிறார், “தமிழர்களின் நலம்” பேசி ஜல்லிக்கட்டு அரசியல் பேசிய நடிகர், கோக்கையோ பெப்ஸியையோ குடிக்க கோக்குமாக்காக பறக்கிறார், இப்படியே இன்னொரு தளபதி நடிகரும் ஒரு படத்தில் மூச்சிரைக்க கார்ப்பரேட் அரசியல் பேசி, இன்னொரு கார்ப்பரேட் விளம்பரத்தில் தண்ணீர் உறிஞ்சும் முதலைகளுக்கு சாதகமாக சாகசம் செய்கிறார்!
இந்த நடிப்புக்கு சற்றும் சளைத்ததில்லை நம் அரசியல்வாதிகளின் நாடகங்கள், எல்லோரின் வங்கிக்கணக்கிலும் பதினைந்து லட்சம் என்ற பொய் அரசியல், 2020 க்குள் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் வீடு என்று ஆட்சித்தொடர பொய்களை அணிவகுக்கிறது!

எப்படி இருந்தாலும், மரபணு வழியால், புகையிலையால், சுற்றுப்புறச்சூழ்நிலையால், மாறுப்பட்ட உணவு பழக்கத்தால், குப்பைகளை வயிற்றுக்கு திணிக்கும் கலாச்சாரத்தால், சாராயத்தால், போதை மருந்துகளால், உடல் உழைப்ப இல்லாமையால், சுகாதாரமின்மையால், அணுக்கதிர்களால் என்று நாள்தோறும் புற்றுநோய் நோயாளிகள் பெருகிக்கொண்டே போகிறார்கள், இந்திய புற்றுநோய் ஆராய்ச்சிக்கழகத்தின் கூற்றுப்படி, நாள்தோறும் 1300 பேர் இந்தியாவில் புற்றுநோயால் இறக்கிறார்கள், இந்த நிலையில்தான் தாமிர ஆலைகளையும், அணுவுலைகளையும், கப்பல் கழிவுகளையும் மருத்துவக்கழிவுகளையும் தமிழகத்தில் கொட்டுகிறார்கள், மக்களுக்காக போராட வேண்டியவர்கள், இதற்கெல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு மாற்றி மாற்றி கல்லா கட்டுவதையே வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு விட்டார்கள்!

மக்களும்கூட வாழ்க்கைமுறையை புற்றுநோய் நோக்கியே நகர்த்திக்கொண்டு போகிறார்கள், மாறிவரும் சூழ்நிலையில் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்ற உண்மையை எடுத்துச்சொல்லத்தான் யாருமில்லை, புற்றுநோய் பாதித்தப்பிறகே சில விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பிரபலமானவர்களிடம் இருந்து வருகிறது!

எது எப்படியோ, எந்த விளம்பரங்களிலும், யாருடைய நடிப்பிலும் மோசம் போகாமல் மூளையை ஆரோக்கியமாய் உபயோகித்து நலமுடன் வாழ வாழ்த்துகள்!

நீங்கள் தற்கொலைச் செய்துக்கொள்ளலாம்!

போன வாரத்தில் ஒருநாள் ஓஎம்ஆர் சாலையில் போய்க்கொண்டிருந்தபோது, சாலையின் ஓரத்தில் பைக் விழுந்துக்கிடந்தது, போக்குவரத்துத்துறையும், கும்பலும் கூடியிருக்க, வெள்ளைச்சட்டையில் ஒருவர் தரையில் கிடந்தார், விழுந்த நிலையைப்பார்த்தப்போது அனேகமாய் இறந்திருப்பார் என்றே தோன்றியது, நேற்றும் அதே சாலையின் ஓரத்தில் நின்றிருந்த நாயை வேகமாய் வந்த பைக் மோத, நாயும் அந்த இடத்திலேயே மரணம்!
ஓஎம்ஆர் வழியே வரும் போது டைடல் பார்க்கின் முந்தைய சிக்னலில் சரியான சிக்னலில் முன்னே சென்ற பேருந்தையும் பைக்கையும், சாலையின் இடதுபுறத்திசையில் இருந்தே குறுக்கே பாய்ந்த பைக் மோத, மோதிய வேகத்தில் இரண்டு பைக்குகளும் பேருந்தில் சாய, நல்லவேளையாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட, ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது!

விபத்துகள் தாண்டி சாலைவிதிகளின் மீதான மெத்தனத்தை காண நீங்கள் சென்னையில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். மயிலாப்பூரில் இருந்து மந்தைவெளி செல்லும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றி பல வருடங்கள் ஆகிறது, எனினும் நேர் எதிரே வரும் வாகனங்கள் அதிகம், அதே போல் இசபெல்லா மருத்துவமனையின் சாலையும் ஒருவழிப்பாதையில், தவறான பாதையில் நேர் எதிரே வருபவர்கள் கொஞ்சம் கூட சளைக்காமல் ஹாரன் அடிப்பார்கள், உங்களை முறைப்பார்கள், இது என் அப்பன் வீட்டுச்சாலை என்றே பறப்பார்கள்!

அப்படியே அடையார் தொட்டு, மத்திய கைலாஷ் திரும்பினால், திரும்பும் போது, வேகமாக நேர் எதிரே வாகனங்கள் திரும்பும், அந்தச் சாலையைத் தடுத்து, மத்திய கைலாஷின் மறுபுறம் இருந்து வரும் வாகனங்கள் யு டர்ன் எடுத்து மீண்டும் மத்தியக்கைலாஷ் செல்ல இரும்பு தடுப்பு அமைத்திருப்பார்கள், அதில் வலது, இடது திரும்பாதீர்கள் என்று போக்குவரத்து எச்சரிக்கை இருக்கும், மக்கள் அதை வலது இடது திரும்பவே உபயோகிப்பார்கள்!

இதற்கிடையில் “மெத்தப்படித்த” ஐடி ஊழியர்கள் 90 சதவீதம் பேர் பாமரர்களோடு அந்தச்சாலைகளில் நடைமேம்பாலத்தைத் தவிர்த்து, ஸீப்ரா க்ராஸிங்கை தவிர்த்து நினைத்த இடத்தில் எகிறிக்குதித்து வாகன ஓட்டிகளுக்கு பீதியைக் கிளப்புவார்கள்!

சமீபத்தில் இந்திய இரயில்வேயின் மெட்ரோ திட்டத்துக்காக தரமணி சாலைத்தொடங்கி சோழிங்கநல்லூர் நோக்கி, சாலையில் மண்பரிசோதனை செய்கிறார்கள், ஒவ்வொரு இடமாய் பள்ளம் தோண்டி பின்பு அரைகுறையுமாய் மூடிவிட்டுச்சென்று விட, அதுவே பல இருசக்கர வாகனங்களுக்கு மரணப்பள்ளமாய் மாறிவிடுகிறது! சுங்கக்கொள்ளை மட்டும் ஓட்டைச் சாலைகளுக்குத் தொடர்கிறது!

இவையெல்லாம் சில உதாரணங்களே, சென்னை முழுக்க சில இடங்களில் போக்குவரத்து காவல்துறை “இருக்கிறது” மற்றபடி இல்லை, பல இடங்களில் இல்லவே இல்லை! இந்த டிசம்பரின் ஞாயிற்றுக்கிழமையில் கட்சி அலுவலகத்துக்கு இன்றைய முதல்வர் வர, சென்னையில் இருக்கும் மொத்த காவல்துறையும், போக்குவரத்து காவல்துறை உட்பட களத்தில், இத்தனை பேர்கள் ஒரு இடத்தில் குவிந்திருக்க, விஜபிகளின் பாதுகாப்புக்கே எல்லாம் சென்று விட்டால், மக்களுக்காக இவர்களை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?
ஆள்பவர்களுக்கு சாலையைப்பற்றி கவலையில்லை, அவர்களுக்காக சாலை ஸ்தம்பிக்கும், அப்படியும் இல்லையென்றால் அவர்கள் சொந்த விமானத்தில் கூட பறக்கலாம், சாதாரண மக்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை, குறைந்தபட்சக் கட்டமைப்பை கூட எதிர்பார்க்காமல், நாம் சுங்கக்கட்டணம் கட்டிக்கொண்டிருக்கிறோம், தினந்தோறும் விபத்துகளை பார்த்தும் இன்னமும் தலைக்கவசம் அணியாமல் விதிகளை மதிக்காமல் பறக்கிறோம், நம்மால் பிற உயிர்கள் பறிக்கப்படும் என்று தெரிந்தும் திமிராய் இயங்குகிறோம், இந்த பெரும் அலட்சியமான போக்கு கொண்ட மக்களுக்கு, பொறுப்பான அதிகாரிகளும், அமைச்சர்களும் எப்படி வாய்ப்பார்கள்?

உதவாத அரசு எந்திரத்தை பழுதுபார்க்க முடியவில்லையென்றாலும், ஒவ்வொருவரும்
சாலை விதிகளை பின்பற்றி முன்னுதாரணமாய் மாறலாம் இல்லையா?
பிறருக்கு உதவிசெய்வது மட்டும் தானமல்ல, பிற உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்காமல் சாலையில் நிதானத்துடனும் விவேகத்துடனும் செல்வதும் பெரும் தானம்தான், ஒருவேளை விதிகளை மதிப்பதும், பிற உயிர்களின் மீதும் உங்கள் உயிரின் மீதும் அக்கறையில்லையென்றால், நீங்கள் தற்கொலைச் செய்துக்கொள்ளலாம்!
#Roadsafety #Traffic_Violation #Chennai

காயப்படுத்தலாம்

எப்படி வேண்டுமானாலும்
காயப்படுத்தலாம்
யோசிக்கவேண்டியதில்லை
அன்பைக்காட்டவே
அதிக மெனக்கெடல்
தேவை!


No photo description available.

நாட்குறிப்பின் கடைசிப்பக்கத்தில்

ஒவ்வொன்றாய்
விதி மறுக்க
கிடைத்ததை வரமாய்
மாற்றிக்கொண்டு
புன்னகைக்க
குழப்பமடைந்தான்
கடவுள்!
வேண்டுவது ஏதுமின்றி
நகர்ந்துச் செல்ல
கேளென்று வேதனைக்கூட்டி
துரத்தினான்
நெடுநேரம் முன் நின்று
வேதனைகளை சீர்தூக்கி
சலனமற்று நோக்கி
எண்ணியெண்ணி
ஒருநாள் வரமொன்று கேட்க
வெற்றியடைந்த களிப்பில்
ஈயேனென்று
இகழ்ந்துரைத்தான்!
பட்டென்று
விட்டுப்போன மனதில்
வெளிச்சம் சூழ
இனி வேண்டுவது
ஏதுமில்லை
தருவது உண்டென
தானுரைக்க
யோசித்து
அவன் நின்ற வேளையில்
“யாசித்தலின் இழிநிலைக்கு
எனை துரத்தி
பின்னரும் மறுத்து
இகழ்ந்துரைத்தலின் பாவங்கள்
உனை சூழாதிருக்க
வரமொன்று தருகிறேன்
நீ எப்போதும் கடவுளாய்
நிம்மதியாய் வீற்றிரு!”
என்று விலகி வந்தேன்
கடவுள்
திமிர்பிடித்தவளின்
வரத்தில்
வாழத்தொடங்கினான்!!

#நாட்குறிப்பின்_கடைசிப்பக்கத்தில்!



No photo description available.

சிலை அரசியல்

#சிலை _அரசியல்
முதலில் இந்திய மாநிலங்கள் கொடுக்கும் வரிகளில், திரும்பவும் மாநிலத்துக்கே பிரித்துக்கொடுக்கும் விகிதாச்சாரம் பற்றி கொஞ்சம் பார்ப்போம், மகாராஷ்டிரா தொடங்கி குஜராத் வரை முதல் ஏழு இடங்களில், பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களும், வட இந்திய மாநிலங்களும் வரி ஈட்டுவதில் பெரும் பங்கு வகித்தாலும், மத்திய அரசிடம் இருந்து அம்மாநிலங்கள் திரும்பப்பெறும் அளவு அந்த மாநிலங்களின் மக்கள் தொகையை பொறுத்து இருக்கிறது, அதாவது, தமிழகத்தின் ஒரு ரூபாய்க்கு தமிழகம் திரும்ப பெறுவது 40 பைசா, கர்நாடகவுக்கு 47 பைசாவும், கேரளத்துக்கு 25 பைசாவும் மக்கள் தொகைக்கேற்ப கிடைக்கும் வேளையில், உபி பெறுவது 1.79 காசுகள், அதாவது மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல், மக்கள் நலனைப்பற்றிக் கவலைகொள்ளாமல் இருக்கும் மாநிலத்துக்கு இந்த மத்திய அரசு அதிக சலுகைத்தருகிறது, அதிக வரியை உபி தந்தாலும், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, கட்டிய வரிகளை விட அதிக வருவாய் உபி மற்றும் பீகார் மாநிலங்களுக்கு கிடைக்கிறது, இப்போது ஏன் பல கோடிகளில் ராமர் சிலையையும், பசுக்களுக்கு மந்திரம் ஓத பண்டிதர்களையும் இவர்கள் நியமிக்க மாட்டார்கள்?

சரியான நிர்வாகத்திறமை இல்லாமல் வரவையெல்லாம் மக்களின் மூடத்தனத்தை கொள்முதலாக்கி இப்படி வட இந்தியா மதத்தையும், மதக்கொள்ளையர்களையும் வளர்க்க, ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் இறப்பதும், பாலியல் வன்முறைகளால் குழந்தைகள் இறப்பதும், ஆம்புலன்ஸ் கூட இல்லாமல் மக்கள் தவிப்பதும் நிர்வாகத்தின் குறையே இன்றி வருவாய் பற்றாக்குறை அல்லவே!?

கல்வியில் இந்த நிதியை செலவிட்டால், மக்களின் ஆரோக்கியத்தில் செலவிட்டால் அவர்களுக்கு சிறந்த அறிவும் தெளிவும் வந்துவிடும், அப்படி வந்துவிட்டால் வெறும் ராம கோஷம் போட்டுக்கொண்டு, மேடைகளில் வாக்குறுதிகளை அள்ளித்தெளித்துக்கொண்டு இவர்கள் வட இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது, பெரும் வன்முறைகள் செய்ய இவர்களுக்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள்!

இப்படிப்பட்ட ஒரு நிலையில் வறுமையை மாற்ற நினைப்பவனும், அரசியல் காரணங்களால் புலம் பெயர்த்தப்படுபவனும், நம்முடைய பேராசை முதலாளிகளாலும் வழவழைக்கப்படுபவனும், வட இந்தியர்களாக வருமான கணக்குக்கு மக்கள் தொகையை உபியிலும் பீகாரிலும் கூட்டி விட்டு, தமிழகத்திலும் சில தென்னிந்திய மாவட்டங்களிலும் குடி பெயர்கிறார்கள்!
தமிழகத்தில் இப்படிக் குடிபெயர்ந்து அரசியலில் வியாபாரத்தில் பலம் மிக்கவர்களாய் மாறிப்போனவர்களும், குற்றவாளிகளாய் மாறியவர்களும் அதிகம், புலம் பெயர்ந்தாலும், சாதியாத்தாலும் மதத்தாலும் கட்டமைக்கப்பட்டவர்கள் சார்ப்பற்றவர்களாக மாறிவிட பலகாலம் ஆகும், அந்தக்காலம் வந்துவிடாமல் இருக்க, மதத்தை இங்கேயும் புகுத்துவார்கள், மொழியை திணிப்பார்கள், எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட ஆட்கள் உண்டு, தமிழ் மண்ணிலும் இந்தக்குடியேறிய மக்களை ஒருவிதமான மனநிலையில் வைத்திருக்க, பூர்வீகவாசிகளையும் குற்றங்கள் பெருக ஒருவித பதட்ட நிலையிலேயே வைத்திருப்பதுதான் அரசியல்!

இதற்கு நம்முடைய தெர்மாக்கோல் விஞ்ஞானிகளும், அணைக்கு ஜூரம் வந்ததை கண்டுப்பிடித்த மருத்துவர்களும், கஜா மக்களுக்கு கடவுளின் தண்டனை என்று சொன்ன மதிமந்திரிகளும் அதிக உதவி செய்வார்கள்!
இதில் மக்கள் போராட்டமெல்லாம் எளிதில் திசைமாற்றப்படுவதில் விந்தையென்ன? வேதாந்த குழுமத்தின் முதலாளி, ஆலையில் மாசு இல்லை என்பதை தூத்துக்குடியில் ஆலையின் அருகிலேயே தன் மொத்த குடும்பத்தையும் குடி வைத்து நிரூபிக்கலாம், நான் வரிகளை கட்டிவிட்டேன் என்பதை விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து நிரூபிக்கலாம், “நான் ஏழைத்தாயின் மகன்” என்பதை பிரதமர் முதலில் இந்தியாவில் இருந்துக்கொண்டு நிரூபிக்கலாம், வசதியாய் வெளிநாட்டில் தங்கிக்கொண்டு ஆலையில் நச்சு இல்லை என்றும், இந்தியாவின் சிஸ்டம் சரியில்லையென்றும், நான் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் என்றும் யார் வேண்டுமானாலும் சொல்லலாம், அமைதியாய் நடந்த ஜல்லிக்கட்டும் அரசியல்வாதிகளால் மட்டுமே கலவரமானது கண்கூடு, இவையெல்லாம் உதாரணங்களே, நீங்கள் எந்தப்போராட்டத்தை கையில் எடுத்தாலும் அதை மாற்ற ஒரு அரசியல்வாதி கோமாளியாக்கப்படுவார், கேளிக்கை நாயகர்கள் பரபர பட்டாசு வெடிப்பார்கள், ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் மீதோ, குழந்தை மீதோ மோசமான வன்முறை ஏவப்படும், எங்கோ ஒரு மதக்கலவரம் உண்டாகும், திடீரென புதிய ரூபாய் வரும் அதில் நம்மை கண்காணிக்கும் சிப் வரும் கதைகள் வரும், இப்படி எது வேண்டுமானாலும் நிகழும், நம்முடைய ஞாபகமறதியும், கேளிக்கை மனநிலையும், சாராய போதையும், இவர்களுக்கு நல்ல முதலீடு!

இந்தியா ஏழை நாடு அல்ல, பல கோடி மக்களின் மந்தை புத்தியாலும், எளிதில் பற்ற வைக்கும் சாதி மதத்தாலும், சில நூறு பேராசை அரசியல்வாதிகளாலும், பல லட்சம் அதிகாரிகளாலும், பெண்ணடிமைத்தனத்தாலும் ஏழைகளை பரம ஏழைகளாக மாற்றி உள்ளூரில் புதைத்தும், சில பணக்கார கொள்ளையர்களை பல கோடிகளுடன் வெளிநாட்டில் வாழ வைத்தும் கொண்டிருக்கிறது, இங்கே மனிதர்களை வறுமையால், எட்டாத கல்வியால், சாதியால், மதத்தால், நோய்களால், சாராயத்தால், சோதனை மருந்துகளால், முதலாளிகளின் பேராசையால், பாலியல் வன்முறைகளால் கொன்று சிலைகளை மட்டும் எழுப்புவார்கள், ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டிகளில் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல், நாம் குனிந்து பரிசுகளையும் இலவசங்களையும் வாங்கிக்கொள்வோம்!

தெளிவு

#அணுக்கதை
செந்தில் கவுண்டமணியிடம்;
“அண்ணே, எங்க பாட்டி ஒரு கதை சொல்லுச்சுண்ணே!”
“சரி சொல்லு”
“அது வந்துண்ணே, இந்த மாடுங்க எல்லாம் மனுஷங்க எங்கள ரொம்ப கொடுமைப்படுத்துறாங்கன்னு கையாலத்துக்கு போய் சிவன்கிட்ட முறையிட்டாங்களாம், அப்போ சிவன் சரி போங்க, நான் வந்து பாக்கிறேன்னு சொல்லிட்டு, ஆடி அசைஞ்சு ஒருநாள் நம்ம பூலோகத்துக்கு வந்தாராம், வந்தவரு பாத்தப்போ அன்னைக்கு மாட்டுப்பொங்கல், மாடுங்கள எல்லாம் அலங்கரிச்சு மனுஷங்க நல்லா கவனிச்சிட்டு இருக்கறத பார்த்துட்டு, அடடே நல்லாத்தானே கவனிக்கிறாங்கன்னு போயிட்டாராம்”

“சரி, இதயேண்டா இப்போ என்கிட்ட சொல்றே?”
“அது வந்துண்ணே இந்த மழை, புயல் எல்லாம் வந்து பாதி ஜனங்க செத்தப்பிறகு, ஊரு அழிஞ்சப்பிறகு, இந்த டெல்லியில் இருக்கற ஆளுங்க எல்லாம் ஐஞ்சு பத்துநாள் கழிச்சு எல்லாம் முடிஞ்சப்பிறகு அரைகுறையா பார்த்துட்டுப் போறாங்களே, அதைப்பார்த்து ஆயா இந்தக் கதை சொல்லுச்சுண்ணே!”
“டேய் தீச்சட்டி மண்டையா, கருத்தா பேசிட்டு ஏன்டா அரசியல்வாதிங்க முன்னாடி அன்னைக்குக் கூழைக்கும்பிடு போட்டே?”
“அடப்போங்கண்ணே, கதைசொன்னா கேக்காம நோண்டி நோண்டி கேள்விக்கேட்டுட்டு, நான் வர்ரேண்ணே”
“இரு நாயே, எங்க ஓடுறே?”
“நம்ம செல்லத்தாயி தோட்டத்திலே நயன்தாரா சூட்டிங்காம்ண்ணே!”
#தெளிவு

புரிந்துகொள்கிறாய் கனவில்

ஆறாய்
பெருகியது அன்பின்
வார்த்தைகள்
விரலிடுக்கில்
வழிந்தது நேசம்
விழிகளில் மோதியது
காதல்
தென்றலாய் அரவணைத்தது
தோள்கள்
விரைந்தோடி வந்தது
தவிப்பில் கால்கள்
அடடாவென
நெஞ்சம் நெகிழ்ந்து
காற்றில் வெறுமையாய்
கைகள் தூழவியபோதே
உணர்ந்துக்கொண்டேன்
நீதான்
எத்தனை அழகாய்
உணர்வுகளை
புரிந்துகொள்கிறாய்
#கனவில்!!!



Image may contain: 1 person

வெறுமை

“எல்லாவற்றுக்கும்
நீயே காரணம்”
இந்தத் தூற்றுதல்தான்
எவ்வளவு எளிதாய்
இருக்கிறது
நீ ஒளிந்துக்கொள்ள?!
காரணங்களை கூட்டும்
இந்த
ஏமாற்று வித்தையில்
மனம் புழுங்கி
நானும்
ஒடுங்கிக்கொள்கிறேன்
இப்போது
உன் மகிழ்ச்சிக்கும்
நானே காரணமென்று
மனதுக்குள்
வெறுமையாய்
சிரித்துக்கொள்ள
நீ இன்னமும்
தூற்றிக்கொல்லலாம்!!

#வெறுமை



Image may contain: one or more people, people standing, ocean, sky, cloud, nature and outdoor

அம்மாவின்_நேரம்


விடியலில் சமைத்து
வேண்டியன செய்து
பிள்ளைகளைப் பள்ளிக்கும்
கணவனை பணிக்கும்
நேரத்திற்கு அனுப்பிய
அம்மா
உண்பதற்கு நேரமின்றி
அலுவலகத்துக்கு
தாமதமாகிவிட்டதென்று
பறந்தோடுகிறாள்!

#அம்மாவின்_நேரம்!


No photo description available.

செய்திகள்_வாசிப்பது

#அணுக்கதை
“சென்னைக்கு வந்தது ஆட்டுக்கறிதானாம்!”
“யார் சொன்னா?”
“அட அந்த ஆடே சொல்லுச்சாம்ப்பா!”
“அப்போ அந்த மீன்கறின்னு எழுதியும், சுகாதரமற்ற முறையில் கொண்டுவந்ததெல்லாம்?”
“யோவ் இப்படி வேகமா கேட்டா எப்படி? யோசிக்க வேணாமா? ஆமா இன்னுமா நீ அதை மறக்கல, ரொம்ப விவகாரமான ஆளா இருப்பே போல?”
“சாப்பிடும்போது மீனா, ஆடா, நாயான்னு தெரிய வேணாமா?”
“அதானே பார்த்தேன், என்னடா நம்மாளுக்கு நிறைய அறிவு வந்துடுச்சோன்னு?!”

#செய்திகள்_வாசிப்பது!

உறிஞ்சிக்கொ(ல்)ள்கிறார்கள்

கொசுக்கள் இரத்தத்தையும்
சில மனிதர்கள் நிம்மதியையும்
உறிஞ்சிக்கொ(ல்)ள்கிறார்கள்
அகப்பட்டவர்களிடம்!


Image may contain: text

நகைமுரண்



சாமியார்களுக்கு
காடழிக்க உரிமைத்தந்து
கார்ப்பரேட்டுகளுக்கு
உயிரழிக்க மானியம் தந்து
சுங்கக்கொள்ளைகளுக்கு
மரங்கள் அழிக்க பாதுகாப்பு தந்து
மணல் கொள்ளைகளுக்கு
நீர்நிலைகள் அழிக்க
ஆவணம் செய்து
ஊழல்வாதிகள்
காடழித்து
நாடழித்து
நீர்நிலைகள் அழித்து
வளங்களை கொள்ளையடித்து
விளையாடிய பின்னர்
சட்டென்று இயற்கைச்
செய்த
கோரதண்டவத்திற்கு
நிவாரணம்
வழங்கி
ஒரே இரவில்
நீதியரசர்கள்
ஆனார்கள்
அதே அரசியல்வாதிகள்!
விடிவேயில்லை
இந்த
அறியாமைகளுக்கு!

#நகைமுரண்


No photo description available.

சாதிய புகழொலிகள்

ஒருவன் தீமைகள் செய்யும்போது ஊமையாய் இருந்துவிட்டு, அதே அவன் நல்லது செய்தால் ஆஹா ஒஹோவென்று ஒருவரோ ஒரு கும்பலோ அளவுக்கதிகமாக புகழ்கிறது என்றால் தெரிந்துக்கொள்ளுங்கள், அவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும், இது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்!
இங்கே சாதி கல்வியால், பொருளாதாரத்தால், பதவியால், பட்டத்தால், உலக அறிவால் அழியவில்லை, படித்தவர்களுக்கும் அது உள்ளூர ஒரு மகிழ்ச்சியை தந்துக்கொண்டிருக்கிறது, தாம் இந்தச்சாதி என்று பெருமிதம் கொள்ள வைக்கிறது, தன் சாதியைச் சேர்ந்த ஆட்களை காணும்போது உவகைக்கொள்கிறது, பணத்தைத் தவிர்த்து பரஸ்பரம் லாபம் பார்த்துக்கொள்கிறது, இத்தோடு நின்றுவிட்டால் பரவாயில்லை, அது அப்படியே வெறியாக மாறும்போது, பள்ளியில் மாணவர்களிடையே உப்புக்கு உதவாத விஷயத்தில் தொடங்கி, பிற்பாடு காதல் கல்யாணம், கொடுக்கல் வாங்கல் என்று எல்லாவற்றிலும் “உயிர்ப்பலி” கேட்கும் அளவிற்கு உருவெடுக்கிறது!
சுற்றிலும் பாருங்கள், உண்மை புரியும்! இல்லையென்றால் 120 கோடி மக்கள் தொகையில் இந்தக் குற்றங்கள் சிறிய விழுக்காடு என்று மனதை தேற்றிக்கொண்டு அமைதிக்கொள்ளுங்கள், மிகப்பெரிய அரசியல்வாதிகளாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது!

சட்டென்று மாறிடும் வானிலை

பெருமழையாய்
பெய்யும்போது
முகஞ்சுளிக்கிறாய்
வறுத்தெடுக்கும் கோடையில்
பெய்யேன் என்று
மேகமற்ற வானத்தில்
தனியே இறைஞ்சுகிறாய்

உன் கிணறும்
வாய்க்காலும் வழிந்தோடினால்
போதுமென்கிறாய்
அறுவடை முடித்ததும்
எதற்கிந்த மழையென்கிறாய்

பலகீனமான பொழுதில்
கூட்டிற்குள் முடங்குகிறாய்
வெளியே உலவும் பொழுதில்
குடைக்குள் பதுங்குகிறாய்

விரும்பும் போது வா
அதுவரை விலகென்று
உன் இயல்பு நிறுவுகிறாய்
பெருமழையின் கருணையினை
மொத்தமும் மறக்கிறாய்

பச்சை வளர்த்த காடுகளை
மெதுவாய் அழிக்கிறாய்
பொட்டல்வெளியில் நின்றுக்கொண்டு
மண்ணோடு உறவாட அழைக்கிறாய்

ஈரம் எல்லாம்
காடு வளர்த்த கருணையில்
வந்ததென்பதை மறக்கிறாய்
உன் மனமாயையில்
மழையை மொத்தமும் எரிக்கிறாய்

மழையாய் நான்
மனிதனாய் நீ
காற்றின் திசைமாற்றி
நான் நெடுந்தூரம் பயணிக்குமுன்
கொஞ்சம் நேசப்பயிர் வளர்த்து
நெஞ்சில் நிறைத்திட
சட்டென்று மாறிடுமே
வானிலை மழைதேசத்தில்!



No photo description available.

நீளும் இரவுகளில்

நீளும் இரவுகளில்
துயரங்கள்
ஒளிந்துக் கொண்டிருக்கிறது!

Image may contain: text

கேட்காதவரை

எதையும்
கேட்காதவரை
உறவுகள்
நீடிக்கும்!


Image may contain: text

மனிதம் விழிக்கும் நேரம்



மரணத்தில்
ஒப்பாரி வைக்கும்
மனிதர்கள்
வாழும் காலத்தில்
தமது கருணையை
கொஞ்சம் ஈந்திருந்தால்
இங்கே உறங்கும்
பல அகால மரணங்களை
தவிர்த்தியிருக்கலாமென
இறந்தவன் ஒருவன்
கல்லறையில்
எழுதி வைத்தான்!
#மனிதம் நிரந்தர
உறக்கத்தில்தானே
விழிக்கிறது!?
 
 Image may contain: text

நீர்த்துப்போகலாம்

துயரங்கள் வரும் வேகத்திற்கு
ஆறுதல்களோ தீர்வுகளோ
வருவதில்லை!
காலப்போக்கில் துயரங்கள்
தானாய் தொலைந்துப்போகலாம்
அல்லது நம் மனதில்
அது நீர்த்துப்போகலாம்!


Image may contain: one or more people and text

ஆழ்ந்த_அனுதாபங்கள்

யாரோ இறக்கும்போது
சக மனிதர்களிடம்
அன்பு பாராட்டிட வேண்டுமென்று
மனிதர்கள்
உறுதி செய்துக்கொள்கிறார்கள்
பின்
அதை வேறொரு இறப்பு
நிகழும்வரை
ஒத்தி வைக்கிறார்கள்!
உறுதிமொழிகளை
எள்ளி நகையாடியபடி
மரணங்கள் என்னவோ
நிகழ்ந்துக்கொண்டேதான்
இருக்கின்றன
வேறென்ன?
#ஆழ்ந்த_அனுதாபங்கள்!



Image may contain: one or more people, grass, beard, outdoor and nature

அன்பென்பது

#அன்பென்பது❤️

எப்போதும் நினைக்கிறாய்
எப்போதாவதுதான் அழைக்கிறாய்

அப்போதெல்லாம் பேசுகிறாய்
அவ்வப்போதுதான் கேட்கிறாய்

கேட்கும்பொழுதெல்லாம்
காதுகளை தருகிறாய்
அரிதாக மட்டுமே மனதை தருகிறாய்

மனமுழுக்க நினைவுகள் சுமக்கிறாய்
சுயநலம் கருதி நினைவுகள் மறைக்கிறாய்

நினைவுகள் மறைத்து
வார்த்தைகளில் கடிகிறாய்
கடிந்தபின் ஆறுதலளிக்கும்
தன்மை மறந்து
காயத்தில்
கத்தியேற்றி நகர்கிறாய்

நகர்ந்தபின்னும் உன் நினைவுகளில்
உழல்கிறேன்
என்றோ பார்த்த உண்மை முகமெண்ணி
உன் பொய்முகம் மறக்கிறேன்
மௌனத்தின் சூட்டில்
நான் நேசத்தை அடைக்காக்க

நீ எப்போதும் நினைக்கிறாய்
எப்போதாவதுதான் அழைக்கிறாய்!



Image may contain: 1 person, outdoor

வேறு வேறு

பிறரின் தேவைக்கு ஊறுகாயாக இருப்பதும்
பிறரின் மகிழ்ச்சிக்கு காரணமாய் இருப்பதும்
வேறு வேறு
முன்னது ஏமாளித்தனம்
பின்னது மனிதாபிமானம்!

செய்வதறியாது செத்துக்கொண்டிருக்கிறோம்

காடின்றி, உணவின்றி, நீரின்றி, தடம் மாறும் விலங்குகளை உடனடியாக கொன்றுவிடுகிறோம், நம்மை மெதுவே தின்றுக்கொழிக்கும், இரத்தம் உறிஞ்சும் அரசியல் அதிகார ஊழல் அட்டைப்பூச்சிகளை மட்டும் ஏதும் செய்யாமல் செய்வதறியாது செத்துக்கொண்டிருக்கிறோம்!

எப்போதும் கருணையுண்டு


எத்தனை துயரிருந்தாலென்ன
ஒரு புன்னகைக்கு வழியுண்டு
எத்தனை ஓட்டமாயிருந்தாலென்ன
சிறு ஆறுதலுக்கு நேரமுண்டு
யார் எப்படியிருந்தாலென்ன
எப்போதும் கருணையுண்டு
எத்தனை மழையிருந்தாலென்ன
சிறு குடையுண்டு
நல்ல மனமிருப்பவர்களுக்கு! ❤️


Image may contain: outdoor

விடுதலைச்சிறகு


ஏதோ ஒரு புள்ளியில்
எதிர்ப்பார்ப்புகள்
அத்தனையும்
சிதிலமடைந்த
கண்ணாடியாய்
உடைய
பட்டென்று
மனம்
விட்டு விடுதலையாகி
தனிமைச்
சிட்டுக்குருவியாக
பறக்கிறது!

#விடுதலைச்சிறகு



Image may contain: bird

மாற்றத்தை வருங்காலம் செய்யும்

#மகனுடன் வெளியே சென்று திரும்பி வந்துக்கொண்டிருக்க, வழியில் தள்ளுவண்டியில் சப்போட்டா பழங்களை ஒருவர் விற்றுக்கொண்டிருந்தார், அவனுக்கு அது பிடிக்கும் என்பதால் ஒரு கிலோ சப்போட்டா பழங்களை வாங்க அவர் ஒரு ப்ளாஸ்டிக் கேரி பேக்கில் கொடுக்க, “ம்மா, ப்ளாஸ்டிக் பை வாங்கதேன்னு சொல்றேன்ல ? “
“சரிடா இப்போ எப்படி வாங்குறது?”
சட்டென்று என் சுடிதார் துப்பட்டாவை இழுத்து இதில் வாங்கிக்க” என்றான்
ப்ளாஸ்டிக் பையை திருப்பிக்கொடுத்துவிட்டு, துப்பட்டாவில் பழங்களை போட்டு மூட்டை போல் ஆக்கி தூக்கிக்கொள்ள, “தம்பி கருத்தா இருக்குது, நானும் துணிப்பையே வாங்கிடுறேன்பா” என்றார் பழவியாபாரி!
மாற்றத்தை வருங்காலம் செய்யும்! ❤️

கொலைகார_தேசம்

#கொலைகார_தேசம்
பெண்களை ஏமாற்றுபவர்கள், கொலை செய்பவர்கள், தங்கள் பாலியல் வறட்சியை தீர்த்து கொள்பவர்கள் பின் சிசுவாய் இருந்தாலும் தீர்த்துக்கொல்பவர்கள் எல்லாம் உடனடியாக மனநிலைப்பிறழ்ந்த நோயாளிவிடுகிறார்கள், இல்லையென்றால் ஒன்றும் தெரியாத உத்தமன்களாகிவிடுகிறார்கள்! 😠
ஊழல் செய்து பின் அதை மறைக்க வன்முறைகளைத் தூண்டிவிடுவதில் தொடங்கி, போராட்டக்காரர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, சுட்டு சுட்டு விளையாடி, உதவித் தேடி வரும் பெண்களை ஏமாற்றி, பிள்ளைப்பெற்றுக்கொள்ளுவது வரை செய்யும்
அரசியல்வாதிகள், “ஐ பிம்பிளிக்கி பிளாப்பி” என்று இந்த மனநோயாளி வேடத்தைப் போட முடிவதில்லை, ஏனேனில் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மனநிலை சரியில்லாதவர்கள், தேர்தலில் வேட்பாளர்களாகும் தகுதியை இழக்கிறார்கள், அதனால் பெரும்பாலும் அவர்கள் வழக்கு விசாரணை என்று வந்துவிட்டால் “வலதுபக்க” மார்பை அழுத்திக்கொண்டு உடனடி இதய நோயாளிகளாய் மருத்துவமனையில் படுத்துக்கொள்கிறார்கள்😉

குற்றம் செய்துவிட்டு மனநிலை பாதித்த கொலைகாரர்களையும், ஊழல் செய்து, வழக்கை தவிர்க்க இதயநோயாளிகளாய் ஆகும் அரசியல்வாதிகளையும் பார்த்துப் பார்த்து மக்கள் ஜென் துறவிகளாய் மாறிக்கொண்டு வருகிறார்கள்!😇 😎

பதட்டம்

#சிக்னல்_கவிதைகள்
120 கோடி
மக்கள் தொகைக்கு
பல லட்சம் கோடிகளில்
சில நூறு அரசியல்வாதிகள்
நடத்தும் ஊழலுக்கும்
கொடூரமான
பாலியல் வன்முறைகளுக்கும்
சாதிமத கொள்ளைகளுக்கும்
கொலைகளுக்கும்
வராத பதட்டமெல்லாம்
நம் மக்களுக்கு
பச்சை சிக்னலுக்கு
காத்திருக்கும்
20 விநாடிகளில்
வந்துவிடுகிறது
சாலைகளில்!

ஒப்பாரி வைப்பதை விட வேறு எதுவும் நிகழாது!

மனது ஆறவில்லை, 13 வயது சிறுமியை தலையைத் துண்டித்துக் கொல்ல எப்படிப்பட்ட கொடூர மனம் வேண்டியிருக்கும்? அதுவும் அவனின்
குடும்பத்தினர் அந்தக் கொடூரத்திற்கு பிறகும்
அவனை காப்பாற்ற நினைப்பதை கேட்கும் போது, மனிதநேயம் அற்ற கொலைக்கார குடும்பம் என்றுதானே நினைக்கத்தோன்றுகிறது?
நிர்பயா, சுவாதி, ஹாசினி, விஷ்ணுப்பிரியா, அனிதா, நந்தினி, ஹாசீபா என்று எத்தனை பேர்? முடிவேயில்லாமல் நீள்கிறதே பட்டியல்? பாலியல் பலாத்காரம், போர், பகை, கொடுக்கல் வாங்கல் தகராறு, சாதிய வன்மம், மத வெறி, ஒருதலைக்காதல், காதல் தோல்வி, ஒழுக்க விதிகள், நீட், விரக்தி, நரபலி, மனநிலை பாதிப்பு என்று எத்தனை எத்தனை காரணங்கள் பெண்களையும் குழந்தைகளையும் புணர்வதற்கும், கொல்வதற்கும் அல்லது தற்கொலை செய்துக்கொண்டு சாவதற்கும்?

நிர்பயாவின் வழக்கின் போதாவது பொதுவெளியில் சரியான தண்டனைக் கொடுத்து, அதை நாடு முழுவதும் பரவலாய் பரப்பி இருந்தால், வஞ்சக மனங்களுக்கு ஒரு பயம் வந்திருக்கும், சுவாதியின் மரணம் மட்டும் அவசரமாய் முடிக்கப்பட்டு ஒரு மர்மமாய் முடிந்துப்போனது, மற்றப்படி வழக்கமான காவல்துறை, நீதிமன்ற காட்சிகள்தான், அதுவும் வசதியுள்ளவன் சிறைக்கே வரமாட்டான், பெண்கள் மீடூ போட்டு மனதை தேற்றிக்கொள்வார்கள், இன்னும் அதிகாரம் நிறைந்தவர்கள் மீடூக்களுக்கு அவசியம் இல்லாமல் சவுக்கியமாய் குடும்பம் நடத்தி பேரன் எடுக்கும் வயதில், பிள்ளைப்பெற்று ரகசியத் தந்தைகள் ஆவார்கள், பிடிபடும் மற்ற எவனும் வாய்தாக்களில் வழக்கொழிந்து போகும்வரை வாழ்ந்துத் தொலைப்பான்கள்!

மரணத்தண்டனை தேவையில்லை என்று
சிலர் கொதிப்பார்கள், பணம் விளையாடும் காட்சிகளில் நிரபராதிகள் கூட தண்டனை பெற்றுவிடக்கூடிய அபாயம் இருப்பதை உணர்ந்த பதைப்பு அது, அல்லது மிகுந்த மனிதநேயத்தில் தானும் தன் குடும்பமும் பலியாகாதவரை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள், உயர்சாதி என்றாலும் கீழ்சாதி என்றாலும் கண்மூடித்தனமாய் ஒரு கும்பல் அறச்சீற்றத்தோடு ஒரு சார்பாய் ஒடி வரும், மதம் என்று ஒரு கும்பல் பிராச்சாரம் செய்து காப்பாற்ற வரும், இப்படியே ஒவ்வொன்றாய் வந்து இந்தக்குற்றங்களை மடைமாற்றி, நினைவுகளை நீர்த்துப்போகச் செய்யும், கொடூர மரணத்தில் தன் மகளை பறிகொடுத்ததுவிட்டு, காலம் முழுக்க பெற்றதையும் வளர்த்ததையும் எண்ணியெண்ணி புத்திர சோகத்தில் பெற்றவர்கள்தான் உருக்குலைந்துப்போவார்கள்!

ஏற்கனவே மோசமான மனநிலையில் வளர்ந்த ஆண் தலைமுறை, எப்படி நியாயமான ஒரு தலைமுறையை வளர்ந்தெடுக்கும்? இனி வளரும் தலைமுறைக்கு என்ன சொல்லி
மாற்றம் கொண்டு வந்து இந்த நிலையைத்தடுக்கும்? பிறக்கும் பிள்ளைகள் குழந்தைகளாகத்தான் பிறக்கிறார்கள், வளர்ப்பும், சேர்க்கையும், சமூகமும் இத்தகைய பிறழதல்களை, மோசமான கொலைகளை அரங்கேற்றி விடுகிறது! சைக்கோக்களை கதாநாயகனா உருவகப்படுத்தும், சாதியை தூக்கிநிறுத்தும் திரைப்படங்களும் தன் பங்கைச் சரியாகவே செய்து இந்த குற்றங்களுக்கு அடித்தளம் அமைத்துத்தருகிறது!

கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவனை, சாதி என்றும், கண்மூடித்தனமான பாசம் என்றும், பணம், பதவி, செல்வாக்கு என்றும் காப்பாற்றிக்கொண்டே வந்தால், அவர்களின் மனநிலையில் என்ன மாற்றம் ஏற்படும், கொஞ்சம் பயமும் தயக்கமும் கொண்டவர்கள் கூட துணிச்சலாய் இதுபோன்ற காரியங்களை செய்யத்தானே தூண்டும்? யார் காப்பாற்றுகிறார்களோ அவர்களையே இந்தக்கொலைகாரர்கள் பதம் பார்ப்பார்கள் என்ற உண்மையும் ஹாசினியின் கொலைகாரனிடம் உறுதியாகியிருக்கிறதுதானே?

இந்தச் சமூக அமைப்பு மாறாத வரை, நீதியற்ற, பணம் சார்ந்த, சாதிய வக்கிரங்கள் நிறைந்த மனிதர்கள் உள்ளவரை, இந்தக் கொலைகள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கும், நாளை நம் வீட்டில் நடந்தாலும், ஒப்பாரி வைப்பதை விட வேறு எதுவும் நிகழாது!

ஓட்டுக்கு காசு வாங்கும் டோக்கன் வாங்கும் மக்களின் மனநிலை மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும், லஞ்சம் கேட்கும் அதிகாரிகளின் முகத்திரையை கிழித்து, லஞ்சம் மறுக்க வேண்டும், இறந்த பெண்களின் வலியில், தங்கள் வீட்டுப் பெண்களின் முகங்களை காணவேண்டும், உள்ளம் பதைக்க வேண்டும், இதெல்லாம்
நடக்காத வரை, அதே கொலைகாரர்கள், அதே காவல்துறை, அதே நீதித்துறை, அதே அரசியல்வாதிகள்!

அப்படியென்றால் உடல் வலிமைக்கொண்ட ஆண்களின் எல்லா வாதைகளுக்கும், பெண்ணுடலும் உயிருமே தீர்வா என்று கேட்பவர்களுக்கு இந்தச்செய்தி, “வலிமைமிக்க ஆண் சிங்கத்தை, வரலாற்றில் முதன்முறையாக அதன் துணை சிங்கமான பெண்சிங்கம் கடித்து கொன்றிருக்கிறதாம்!” மாறுபட்டச் சூழல் அந்தச் ஆண்சிங்கத்தை பலியாக்கி இருக்கும்போது, நலிந்த இந்த மாறுபட்டச் சூழலில், ஆண்களுக்கும் ஒழுக்கம் போதித்து, பெண்களை சிங்கங்களாக வளர்த்தால்தான் என்ன? சிங்கங்களாக வளர்த்தால்தான் என்ன?

சிக்கன மழையும் நீயும்

பூமியின் ஈரத்தை
மொத்தமாய்
உறிஞ்சிக்கொண்ட
மழை மேகம்
கொள்ளையடித்த
அரசியலாளர்கள்
கிள்ளித்தரும்
இலவசங்களைப் போல்
போனால் போகிறதென்று
வரும் உன்
ஆச்சரியமூட்டும் அன்பைப்
போல
சிக்கனமாய் தூறுகிறது
இவ்வேளையில்!


Image may contain: 1 person, outdoor

கைபேசி_உலகம்


சந்தித்துப் பேச
அழைத்துவிட்டு
கைபேசியில் யாருடனோ
நீண்ட நேரமாய்
கதைக்கிறார்கள்

மனமுருகி பாடும்
வேளையில்
வேறு எதிலோ லயித்துவிட்டு
மீண்டும் பாடச்சொல்லி
கேட்கிறார்கள்

அக்கறையாய்
கேட்பது போல்
எதையோ கேட்டுவிட்டு
பதில் தருமுன்
அவசர வேலையென
பறக்கிறார்கள்

புகைப்படங்களின்
நினைவூட்டல்களில்
ஆர்வமாய் பார்வையை
தந்துவிட்டு
வேறு ஏதோ நினைவில்
அத்தனையும் பொய்யென
மெய்பித்து நகர்கிறார்கள்

உருக்கமாய்
கேள்விகள் கேட்டு
காதுகளை இரவலாய்
நிறுத்தி
மனதை எதிலோ
மூழ்கடித்து
ம்ம் மென்று
அவமதித்து
மறந்துபோகிறார்கள்

அழகாய்
வரைந்த ஓவியங்களின் மேல்
ஆயிரம் கருத்து நிறத்தெளிப்புகள்
கொட்டிவிட்டு
நிறச்சேர்க்கை கோளாறென
பூதக்கண்ணாடி
அணிகிறார்கள்

தன்னை மதிக்கவேண்டும்
என்று விரிவுரை
நிகழ்த்திவிட்டு
இன்னொருவரின்
உணர்வுகளை மிதித்து
முடிவுரை எழுதுகிறார்கள்

நேசிக்கும்
மனித உறவுகளுக்கு
இரத்தமும்
சதையுமுமாய்
நாம் இருப்பது தெரிய
கைபேசியாய்
இருத்தல் வேண்டுமோ
இல்லை
கடன் தரும் வங்கியாய்
மாற வேண்டுமோ?
யோசித்து நிற்கையில்
“நலமா?” என்று கேட்டு
நகர்கிறான் ஒருவன்
அவன் முதுகுக்கு
புன்னகையை பரிசளித்து
மௌனமாய்
பயணம் தொடர்கிறேன்!

#கைபேசி_உலகம்!


Image may contain: one or more people and people sitting

விதைக்காமல்_வெற்றியில்லை

“ஏன் இதை சரியாக செய்யவில்லை?” என்று கடிந்துக்கொண்டாலும், பின் அதை எப்படி சீர்செய்வது என்பதை மட்டுமே யோசித்து பின் அந்தத் தவறு நிகழாமல் இருக்க வேண்டிய வழிமுறைகளை செய்யவேண்டியது, மலையென இருக்கும் அலுவலகப் பணியில் ஒரு சிறு கல்லளவு பணி, அற்புதமாய் செய்தப் பணிக்கு பாராட்டும் அதே வேகத்தில் செய்ய வேண்டும், வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருத்துறையில் இதை நிச்சயம் செய்வார்கள், அப்படியே யு டர்ன் அடித்து தனிப்பட்ட வாழ்க்கையில் வந்தோமென்றால் இந்த அணுகுமுறை நிச்சயம் வளர்ந்தவர்களிடம் இல்லை, “ஏன்? ச்சை! “ என்ற கடிந்துக்கொள்ளலோடு இன்னும் பல வார்த்தைகளின் வீச்சோடு முடிந்துவிடுகிறது, மற்றப்படி ஏன் எதற்கு எப்படி, இனி எப்படி சீர்செய்வது என்பன போன்ற எதுவும் கேட்கப்படுவதோ உணரப்படுவதோ இல்லை, எந்தத் தவறும் நிகழ்வதற்கு தவறே காரணங்கள் இல்லை, காரணத்தை விட்டுவிட்டு காரியம் செய்தவரை வசைபாடுவதும் இயல்பு, சரியாய் நிகழும் ஒன்றையும் கூட நாம் பாராட்டுவதும் இல்லை, அம்மா செய்யும் சமையல் நன்றாக இருந்தால் ஒன்றும் இல்லை, உப்பு அதிகமாகும் நாளில், ஏன் இப்படி என்று புருவம் உயர்த்துவது போன்றதே இது!
உரியவரிடம், கோபத்தை வரைமுறையோடு காட்டுங்கள், அன்பை வரையறையில்லாமல் காட்டுங்கள், குறைகளைச் சுட்டுங்கள், நிறைகளை கைத்தட்டி பாராட்டுங்கள், இவையெல்லாம் ஆக்கப்பூர்வமானவை, இதற்கு சம்பளம் தேவையில்லை, நல்ல மனமும் சிந்தனையும் மட்டுமே போதும்; இதை எதுவும் நீங்கள் செய்யாமல் எந்த மாற்றத்தையும் எவ்விடத்திலும் எவரிடத்திலும் எதிர்நோக்குதல் கால விரையமே!
,
#விதைக்காமல்_வெற்றியில்லை

இறுதி_நொடிகள்


மதில் மேல் நிற்கிறது
ஓடிக் களைத்த
பூனையொன்று

ஒரு பக்கம் நரகத்தின்
நிலமும்
மறுபக்கம் சொர்க்கத்தின்
நிலமும்
தெரிகிறது
சற்றே உடலைக் குறுக்கி
மதில் மேல் சாய்கிறது

சொர்க்கத்தின் நிலத்தில்
அதற்கு யாருமில்லை
நரகத்தின் நிலத்திலும்
எந்த உறவுமில்லை
திருட்டேதும் செய்ததில்லை
பெரிதாய் ஆசைகளில்லை

விழித்துப் பார்க்கிறது
பூனை
சொர்க்கத்தின் நிலத்தில்
யாரும் அழைக்கவில்லை
யாரின் மனதையும்
யாரரறியும் பொறுமையும்
அங்கில்லை

மாறி மாறி விழிக்கும்
பூனை
இரண்டு நிலங்களும்
ஒன்றென
ஏதோவொன்று மேலென
ஏதோ ஒன்றில் பாயும்
அதனாலென்னவென்று
வழக்கம்போல்
இந்த வாழ்க்கை நகர
பூனைகளால் நிறையும்
மதில்கள்!

#இறுதி_நொடிகள்!



Image may contain: cat and outdoor

Love


Love is a part of life for men but for women it is life and thus all the problem starts from this disconnecting discomfort point!



Image may contain: text

Metoo

#Metoo போட வேண்டுமென்றால் அப்பத்தா ஆத்தாவில் இருந்து இப்போதுள்ள கொள்ளு பேத்திகள் வரை 99% சதவீத இந்தியப் பெண்கள் போட வேண்டும், ஏனென்றால் உலகிலேயே மோசமான ஆண்கள் இந்திய ஆண்கள் என்றும் மோசமான பெண்கள் இங்கிலாந்து பெண்கள் என்றும் ஒரு சர்வே சொல்லுகிறதாம்!
நல்லவர்கள், நேர்மையாளர்கள், பெண்ணை ஏய்க்காதவர்கள் மன்னிக்க! 😎 .
Many a time that empathy, love and care
are not matters of time,
they are matters of mind!

Image may contain: one or more people and text

இடைவெளி

அருகமர்ந்த
உன்னிடம் நேசம்
நிரப்பிக்கொள்ள
விழைகிறேன்
நீ உன் உலகத்தில்
ஆனந்தமாய்
சஞ்சரிக்கிறாய்
உன் கைபேசியுடன்
உடனிருந்தும்
விழியகற்றி விலகி
ஓடும் காற்றை
சுவாசிக்கிறேன்
நுரையீரல்
நிரம்பவில்லை
காற்றிலும்
கந்தகநெடி!

பெண்களே தாழ்ந்தவர்கள்

உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடெல்லாம் ஆண்களுக்குத்தான், எளிதில் வன்மத்துக்கும், வன்முறைக்கும், வேட்கைக்கும், எந்தப்பகைக்கும், போருக்கும் இலக்காகும் இந்தியப் பெண்களே எல்லாச் சாதியிலும் தாழ்ந்தவர்கள்!

பணமென்ற சாதி

எல்லா சாதியும்
ஏதோவொரு சாதியை
கீழ்மையென நிந்திக்கிறது
எல்லா சாதியும்
ஏதோவொரு சாதியை
மேன்மையென நினைக்கிறது
உண்மையில்
எல்லா சாதிக்குள்ளும்
பணமென்ற சாதியே
எதையும்
தீர்மானிக்கிறது!


Image may contain: text

பதவி

#அணுக்கதை
செந்தில், கவுண்டமணியிடம்: அண்ணே அண்ணே
கவுண்டமணி; சொல்டா நாயே
“ஏன்னே எப்படிண்ணே தேர்தல்ல நிக்காம படீர்ன்னு கால்ல விழுந்து முதல்வராயிட்டங்க?”
“டேய் கோமுட்டி தலையா, காரியம் ஆவனும்னா காலை பிடி இல்லைன்னா கழுத்த பிடின்னு சொல்லியிருக்காங்கடா!”
“அண்ணே இப்ப நான் உங்க கால்ல விழுந்தா என்னை முதல்வர் ஆக்கிடுவீங்களாண்ணே?”
செந்திலை ஏற இறங்க பார்த்துவிட்டு, “டேய் யார்ரா அங்கே இந்த மண்டையன தூக்கி உள்ள போடுங்கடா..”
“”அண்ணே அண்ணே என்னண்ணே இப்படி கேட்டதுக்கெல்லாம் திடுதிடுப்புன்னு உள்ள போடச் சொல்றீங்க? நீங்க ரொம்ப மோசம்ண்ணே”
கவுண்டமணி அழுதுக்கொண்டே, “ஏன்டா நானே அவனவன் கால்ல கையில் விழுந்து (மனசுக்குள், “தவழ்ந்தெல்லாம் போய்!”) இந்தப் பதவியை பிடிச்சிருக்கேன், நீ கூட இருந்துட்டே அத பிடுங்கப்பாக்குறீயா? எவனாவது ஆட்சிய பத்தி பதவிய பத்தி பேசினா எவனா இருந்தாலும் வெட்டுவேன், யாரா இருந்தாலும் உள்ளே தூக்கிப்போட்டு மிதிப்பேன்!” கோபமாக கத்துகிறார்
செந்தில், கோபத்துடன், “அண்ணே இதுக்கெல்லாம் நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க, என்கிட்டதான் வந்தாகணும்!”
அசால்ட்டாக, “சரி போ நாயே அப்படியே ஒரு பொறைய போட்டா சரியாகிட மாட்டே, நீ வாங்குற நாலு பத்துக்கு இந்தப் புரட்சி எல்லாம் உனக்கெதுக்கு, இதெல்லாம் அரசியல்ல சகஜம்ப்பா..”
#பதவி

One life

One beautiful life and so much to endure!

Image may contain: one or more people and text

Move with a fishing rod!

Some people are born and brought up to be selfish and there is no point in lamenting but to move with a fishing rod! 😎 

No photo description available.

வலியிலிருந்து

சில சத்தியங்களும்
பல உறுதிமொழிகளும்
பெரும்பாலும்
காயத்தின்
வலிகளிலிருந்தே
பிறக்கின்றன!

 Image may contain: text

அடச்சீ மடச்சீ பெண்கள்!

அவனின் கோபம்
அடிப்படை நியாயம்
அவளின் கோபம்
உள்ளார்ந்த வன்மம்
அவனின் வெறுமை
மனதின் ஆதங்கம்
அவளின் வெறுமை
வெற்றுப் புலம்பல்
அவனின் காதல்
எழில் காவியம்
அவளின் காதல்
கலையும் மேகம்
அவனின் காமம்
கனிந்த காதல்
அவளின் காமம்
தினவின் வேட்கை
அவனின் தேடல்
உழைப்பின் அவசியம்
அவளின் தேடல்
பகட்டின் வெளிச்சம்
அவனின் ஆடை
சுதந்திரத்தின் வெளிப்பாடு
அவளின் ஆடை
கலாச்சாரத்தின் கோட்பாடு
அவனின் எழுத்து
படைப்பிலக்கியங்கள்
அவளின் எழுத்து
சொந்த அனுபவங்கள்
அவனின் தேவை
வாழ்தலின் அவசியம்
அவளின் தேவை
வெற்றுப் பாதுகாப்பு
அவனின் தற்கொலை
துயரத்தின் நிகழ்வு
அவளின் தற்கொலை
ரகசியத்தின் முடிச்சு
செதுக்கி செதுக்கி
புனையும்
சமூகப்பொய்களில்
அடடா அடடா
ஆண்கள்
அடச்சீ மடச்சீ
பெண்கள்!

#மடச்சீ



No photo description available.

முற்பகல் செய்யின்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை கார்டு மூலம் செலுத்தலாம் என்ற பிறகு தமிழக தலைநகரம் வெறிச்சோடி போயிருக்கிறது, இருசக்கர வாகனங்கள் 200 சதவீதம் விதிமீறல்கள் செய்ய, அவர்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு, டெம்போக்களும் லாரிக்களும் மட்டும் ஓரங்கட்டப்படுகின்றன, அட இன்னுமா டெபிட் கார்ட் வாங்கல?
****
அமெரிக்கா என்றொரு நாடு இருக்கிறது, ஆப்கானிஸ்தான் என்றொரு அடியாளை வளர்த்துவிட்டு பின்னாளில் ஆப்பசைத்த குரங்காக அவதிப்பட்டது, அதுபோல விதிமீறல்களை கண்டுக்கொள்ளாமல் சாலையில் ஒரு ரவுடிக்கூட்டத்தை வளர்த்துவிட்டுக்கொண்டிருக்கிறது அரசு, நாளை இதே சாலையில் தான் அதிகாரிகளும் அமைச்சர்களும் பயணிக்க வேண்டும், எல்லா நேரமும் எல்லா உறவுகளுக்கும் சைரன் வைத்த வாகனம் வருமா இல்லை “G” என்ற எழுத்து சாலையில் சீறும் வாகனங்களை கட்டுப்படுத்தி விபத்தை தவிர்த்துவிடுமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

மறந்துப்போகிறார்கள்

சண்டையிடுகிறார்கள்
காமம் கொள்(ல்)கிறார்கள்
களவு புரிகிறார்கள்
ஊழலில் திளைக்கிறார்கள்
ஆரோக்கியம் அழிக்கிறார்கள்
ஆனால்
அன்பு செய்ய மட்டும்தான்
மனிதர்கள் மறந்துப்போகிறார்கள்
பின்
மர(ரி)த்துப்போகிறார்கள்!



Image may contain: one or more people and text

பிச்சையென்ற பெருமிதம்


அமுதூட்டியவள்
தாய்ப்பாலை
பிச்சையென்பதில்லை
மனிதர்களோ
அன்பையும் கருணையையும்
பிச்சையென்று ஈந்து
பெருமிதம்
கொள்கிறார்கள்!



Image may contain: text

அன்பு ஒன்றில்லை

எந்த உறவிலும்
இருவருக்கிடையே உள்ள
அன்பு ஒன்றுபோலவே
இருப்பதில்லை!

அசுர வளர்ச்சி

கொலைகள், சாதிமத வெறியாட்டங்கள்,
வன்முறைகள் என்று மனித இனத்தின்
அசுர வளர்ச்சியின் பரிணாமத்தை பார்க்கும் போது
காட்டில் புலிகளோடு கூட வாழ்ந்துவிடலாம் என்று தோன்றுகிறது!

Image may contain: one or more people, people standing and text

மலிவாய் தெரியும்

எளிதாய் கிடைக்கும் எதுவும்
மலிவாய் தெரிகிறது!


No photo description available.

இன்னொரு தகப்பனும் இல்லை


அழுக்கு துணிபோடும்
கூடையின் மூடியை
திறக்க எத்தனப்பட்டு
மூடியின் மீது
துணிகள்
குவிந்துக்கிடக்கின்றன
மூடியைத்திறந்து
கசங்கிய துணிகளை
சீர்செய்கிறாள்
வேலைக்காரியொருத்தி

அழகான விடியலில்
எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்க
விடியலின் ஈரத்தில்
பம்பரமாய் சமையல்கட்டில்
சுழன்றுக்கொண்டே
அவ்வப்போது எட்டிப்பார்க்கும்
காகத்தோடு பேசிக்கொண்டிருக்கிறாள்
ரசனைக்காரியொருத்தி

வீட்டின் பூஜையறைத் தொடங்கி
கழிவறை முடுக்குவரை
கலைந்தவைகளை சீர்செய்து
குப்பைகளையும் கறைகளையுமகற்றி
மனதுக்குள் தனித்தப்பாடலோடு
அலுவலகம் கிளம்புகிறாள்
எந்திரமொருத்தி

காலையில் தொடங்கி
இரவுவரை கசங்கி
அன்பாய் இரண்டு வார்த்தைகள்
எதிர்ப்பார்த்து
வசவுகளை வாங்கிக்கொண்டு
கோபத்துக்கும் அவள்தான்
காரணமென
பிச்சைக்காரியைப் போல்
நடத்தப்பட்டும்
தானாய் சிரித்துக்கொண்டு
பணிகளைச் செய்கிறாள்
பைத்தியக்காரியொருத்தி

பிய்ந்துப்போன
காலணியை மாற்றமுடியாமல்
போக்குவரத்தில் சிதைந்து
சம்பளம் அத்தனையையும்
கணவனிடம் கொடுத்து
காலின் தழும்புகளுக்கு
எண்ணெய் ஈட்டுக்கொண்டு
பளிச்சென்ற புன்னகையில்
மனதுக்குள் அழுகிறாள்
அடிமையொருத்தி

காதலால் களவாடிய
பொழுதுகள் எல்லாம்
கற்பனையான பொழுதுகளென்று
கொடூரத்தின் உண்மைமுகம்
சகிக்கமுடியாமல்
சுயத்தில் வழியும் குருதியோடு
சாவுக்கும் வாழ்வுக்கும்
இடையே
ஊசலாடுகிறாள்
மெல்லிய மனம்
கொண்ட மகளொருத்தி!

இப்படியே
ஒருத்தியையோ
ஒவ்வொருத்தியையோ
ஆசைகள் துறந்து
கற்றக் கல்வி மறந்து
உழைப்பை ஈந்து
மரியாதை இழந்து
காதலில் சிதைந்து
உறவில் முறிந்து
குப்பைகள் சுமந்து
எந்திரமாய் மாறி
எதிர்ப்பார்ப்புகள் துறந்திருக்கச்
சொல்லும் உறவுகளில்
யாருக்கும் பெண் மனம்
புரிவதில்லை
சட்டென தாயாய் மாறி
தாங்கும் மகள்களுக்கு
அப்பனுக்கு பிறகு
இன்னொரு தகப்பனும்
கிடைப்பதேயில்லை!



Image may contain: one or more people, people standing, ocean, sky, outdoor and water

முடியவில்லை

மனதையோ
உயிரையோ
கொன்று
பிறந்தநாட்களை
மனிதர்கள்
இறந்தநாட்களாக்கலாம்
ஒருநாளும்
இறந்த மனதையோ
உயிரையோ
உயிர்ப்பித்து
இறந்தநாட்களை
பிறந்தநாட்களாக
மாற்றத்தான்
யாராலும்
முடிவதில்லை!


No photo description available.

மதங்கள்

கோவிலின்
கருவறையில்
இருப்பவனா?
வெளியே நிற்பவனா?
யார் இந்து?
இரண்டு பேருமே
என்றால்
உரிமையில்
ஏன் வேறுபாடு?
வேறுபாடுகள்
நிறைந்ததே
எல்லா மதமும்
இதில் வேடிக்கை
என்னவெனில்
எல்லோரும்
பார்ப்பதற்கு
மனிதர்களை போலவே
இருப்பதுதான்!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!