Friday, 29 November 2013

கருணை

















அந்தக் குருவிக்கும்
எனக்குமான மொழி
உனக்குப் புரிந்திடாது
எனக்கான ஒரு மொழி
உன்னிடம் இல்லாதபோது!
# கருணை

கீச்சுக்கள்

யாராவது வந்து, "வாடா ஒரு தம் போடலாம்" என்று புகைப்பதற்கு அழைக்கும் போது, "டேய் வாடா, கொஞ்சம் புற்றுநோய் அணுக்களை ஏற்றிக்கலாம்" என்றும், "வாடா சரக்கடிக்கலாம்" என்று அழைக்கும் போது, "வாடா மச்சான், கொஞ்சம் விஷம் சாப்பிடலாம்" என்று காதில் அசரிரி விழுந்தால், மறுப்பவருக்கு நலம்!
 -----------------------------------------
யாரும் யாரையும் சந்திப்போமோ இல்லையோ, ஒரு "குடிமகன்" இன்னொரு "குடிமகனை" நிச்சயம் சந்திப்பான், கிளைகள் பரப்பி நிற்கும் ஏதோ ஒரு தெருவில், ஏதோ ஒரு முக்கில்!
#இந்த ஃபார் இல்லைனா இன்னொரு ஃபார்
  

 --------------------------------------------------
பெரும்பாலும் சுயமரியாதையின் சமாதியின் மேல்தான் பதவி, புகழ் போன்ற மாடங்களின் கட்டுமானம் தொடங்குகின்றது!
-----------------------------------------------------------
தள்ளி நின்று பார்த்தால் ஒன்றுமேயில்லை
# வாழ்க்கை

--------------------------------------------
படுத்துவிட்டால் அரித்துவிடும் இல்லை எரித்துவிடும்,
மண்ணும், நெருப்பும்!

இவைகளுக்கு மட்டும் நீங்கள் யாரென்பது பற்றியோ, உங்கள் கடந்தகாலம் பற்றியோ எந்தக் கவலையும் இல்லை!
# உணர்தல் அவசியம்!

----------------------------------------------------
Behind every smile, resides a pain and behind each endurance there is enlightenment!
--------------------------------------------
எத்தனை தெளிவாய்ச் சிந்தித்தாலும், நமக்கென்று வரும்போது அனிச்சம் மலராய் துவண்டு விடுகிறது மனசு!
--------------------------------------------
பகிரப் பெருகும் அட்சயம் தானே அன்பும், காதலும்!
----------------------------------------
நாம் முட்டாள்கள் என்று அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், கொள்ளை அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்......அவர்களைக் கோமாளிகளாக்கி நாமும் வேடிக்கைப் பேச்சு பேசிக் கொண்டே இருக்கிறோம், பாதுகாப்பில்லாத ஓர் உலகம் நம் தலைமுறைக்காக உருவாகிக் கொண்டே இருக்கிறது...நாம் உறங்கிக் கொண்டே இருக்கிறோம்!
------------------------------------------------
பணம் அசைப்பதை
மனம் அசைப்பதில்லை!

-------------------------------------------------------------
Photo: Everyman who deceives or disparages a woman will taste the bitter fruit and will know how the pang would be one day through his beloved and that happens to be his daughter mostly.
# Untold pain is more dreadful! 
A 

Everyman who deceives or disparages a woman will taste the bitter fruit and will know how the pang would be one day through his beloved and that happens to be his daughter mostly.
# Untold pain is more dreadful! 

-----------------------------------------------------------
இளையவரோ, முதியவரோ, ஆணோ, பெண்ணோ, இவர்களில் சிலருக்குத் தெரிகிறது எதை எதைச் சொல்லி, எப்படி எப்படிக் காய் நகர்த்தி, எதை எதை அடைய வேண்டும், எதை எதை விலக்க வேண்டும் என்பது...வயது வித்தியாசப் பாகுபாடு இல்லாத இந்தச் சூறாவளிகளின் போட்டியில், சில புற்களின் பாடுகள்தான் பரிதாபமாய் ஆகி விடுகிறது!
# எங்கெங்கு காணினும் அரசியலாட!

--------------------------------------------------------------
Photo: நமக்காக ஒன்று காத்திருப்பதன் மதிப்பு நமக்கு என்றுமே தெரிவதில்லை 
# நேரம் நேரம் நேரம்!        
நமக்காக ஒன்று காத்திருப்பதன் மதிப்பு நமக்கு என்றுமே தெரிவதில்லை
# நேரம் நேரம் நேரம்!

----------------------------------------------------------------
Photo: நாமே நமக்கு அறிவாளி, பிறர் எல்லாம் கோமாளி! 
நாமே நமக்கு அறிவாளி, பிறர் எல்லாம் கோமாளி!
------------------------------------------

Photo: தவறு செய்பவனை விட, பாதிக்கப்படுபவன் தான் இங்கே அதிகம் போராட வேண்டி இருக்கிறது. 
தவறு செய்பவனை விட, பாதிக்கப்படுபவன் தான் இங்கே அதிகம் போராட வேண்டி இருக்கிறது.
-----------------------------------------------------------
Photo: தாய்மை கொள்ளும் வரை தாயின் அன்பு புரியாது, 
சேயாய் உணரும் வரை, தாயின் அவசியமும் தெரியாது! 
 தாய்மை கொள்ளும் வரை தாயின் அன்பு புரியாது,
சேயாய் உணரும் வரை, தாயின் அவசியமும் தெரியாது!

-----------------------------------------------------
சுவற்றில் ஆரம்பித்து, அப்புறம் மெதுவாய் நடைபாதையை ஆக்கிரமித்து, இன்னும் கொஞ்சம் இறங்கி, சாலைகளையும் ஆக்கிரமித்து, தலையை நிமிர்த்திப் பார்த்தால், அட மேம்பாலத்திலும் ஆக்கிரமித்து....ஸ்ஸ்ஷப்பா.........................

இப்படி எல்லா இடத்திலும் விடாம அரசவைக் கவிஞர்கள் ரேஞ்சுக்கு வாழ்த்துப் பாடி விளம்பரப் பலகைகள் கட்டுறீங்களே, வாகனங்கள் புடை சூழ, வேகமாய் விரையும் வாகனத்தில் இருந்து இத்தனையையும் படித்து விட முடியுமா, அட யார் யார் என்று குறிப்பெடுத்து விட முடியுமா?
# நிற்க நமக்கு அரசியல் தெரியாது!

---------------------------------------------------------
வருகையில் மழையைச் சபிக்கும்,
பின் பொட்டல் வெளியில் நின்று
ஒரு சொட்டு நீருக்காகத் தவிக்கும்
#விந்தை உள்ளமும் உலகமும்

---------------------------------------------------
வாழும்போது உதிர்த்த ஒரு வார்த்தைக்கோ, கோரிக்கைக்கோ ஆன ஓர் அர்த்தமும், தெளிவும், அல்லது ஒரு குற்ற உணர்வும் பெரும்பாலும் நமக்கு ஒரு மரணத்தில்தான் கிடைக்கிறது
-------------------------------------------------     
   
  

Thursday, 28 November 2013

தோழமை























ஏதோ ஒரு தனிமைக்குள்
அகப்பட்டவளுக்கு - ஒரு
சன்னல் கண்ணாடியின் மறைவில்,
சிறிய உடைபட்ட
விளிம்பின் இடைவெளியில்,
உற்று நோக்கிய ஒரு புறாவின்,
ஒற்றைக் கண்ணின் அருகாமை
போதுமானதாயிருந்தது -
பரவிக் கிடந்த
வெறுமையை வெறிக்கவும்
உடைக்கவும்!

Tuesday, 26 November 2013

வார்த்தைகள்

















கோபத்தில்
குதிரையாய்
நேசத்தில்
ஆமையாய்
உருபெறும்!

ஆத்திரத்தில்  
ஊற்றாய்
ஆசையில்
தேங்கிடும்
குட்டையாய்
வெளிப்படும்!

கடுப்பில்
சுனாமியாய் 
காதலில்
மௌனத் துறவியாய்
ஆட்கொள்ளும்

#வார்த்தைகள்!

Wednesday, 13 November 2013

மனமிருப்பின்

இதுவே கடைசிப் பயணம்
என ஆகும் போது
தராத எதையும்
தந்துவிட
எண்ணாதீர்கள்

நான் என நின்ற
நானிலிருந்து
விழுந்து
விடாதீர்கள்

சாதி மதக்
கொள்கைகளை
மாற்றிக்
கொள்ளாதீர்கள்

நீயுமா என்று
அவன்(ள்) துடித்ததை
நினைவில்
கொள்ளாதீர்கள்

ஊசிபோல்
உள்ளிருந்து துளைக்கும்
மனதிற்காகவோ
ஊருக்காகவோ
உருகி ஒழுகி ,
துயரம்,
செதுக்காதீர்கள்

மனமிருப்பின்
பிறிதொரு
வாழ்கையைச்
செதுக்குங்கள்
வாழும்போதே!

மரணம்
















யாருமற்ற யாரோ ஒன்றிற்கு
தானுமற்றுப் போகச் செய்த
ஏதோ ஒன்று, நீதான் எல்லாமென
யாரோ யாரோவாகி விட்ட வேளையில்
தானே வந்து கதறி நிற்கிறது
ஏதோவாகிவிட்டதன்
கல்லறையில்!

ஒன்றிருந்தால் ஒன்றில்லை

கேட்பதற்குச் செவிகள்
மட்டும் போதாது,
உள்ளார்ந்த ஆர்வம் வேண்டும்

தானம் செய்யச் செல்வம்
மட்டும் போதாது,
விரும்பித் தரும் கருணை வேண்டும்

காதல் செய்யத் தனிமை
மட்டும் போதாது,
இசைந்து உருகும் அன்பு வேண்டும்!

வாழ்வதற்கு வலிமை
மட்டும் போதாது,
இயைந்து வாழும் சமூகம் வேண்டும்!

முடிவு


 ஒன்று, தோல்வியை விதைத்து
முடிவிற்குத் தூண்டுகையில்,
ஏதோ ஓர் அன்பு
வாழவும் சொல்கிறது!

ஒவ்வொன்றும் கடக்கையில்
மனம் கனத்து,
பற்று விலகி, பார்வை தெளிகிறது,
பாதையும், வலிகளும் ஒருநாள் 
முடிவுக்கு வருகிறது!