Monday 30 December 2013

தற்காப்பு

Photo: ஒரு வெறிபிடித்த நாய் மனிதரை கடித்து விட்டால், உடனே அதைக் கொல்கிறோம். 
காட்டை அழித்தால், தடம் மாறி வரும் விலங்குகளையும் ஆபத்தெனப் பிடித்துக் கூண்டில் அடைக்கிறோம்! ஆனால், பெண்களை வேட்டையாடும் மனித விலங்குகளை மட்டும் சாதி என்றும், அரசியல் என்றும் இல்லாத காரணக்காரியங்களை முன்னிருத்தி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று, எல்லோரும் சாகும் வரை வேடிக்கை பார்க்கிறோம்! 

அடக்க முடியாமல் திரியும் ஆண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துவிடுங்கள், பெண்ணைப் போகப்பொருளாய் இழிவு படுத்திக் காட்டும் பத்திரிக்கைகளை, தொலைக்காட்சித் தொடர்களை, விளம்பரங்களை, திரைப்படங்களை எல்லாம் தடைச் செய்யுங்கள்.....

#அடிப்படையில் மாற்றம் காணாத வரை, தம்மை வேட்டையாட வரும் மிருகங்களைப் பெண்களே வேட்டையாட வேண்டும்! தற்காப்பு!
ஒரு வெறிபிடித்த நாய் மனிதரை கடித்து விட்டால், உடனே அதைக் கொல்கிறோம்.
காட்டை அழித்தால், தடம் மாறி வரும் விலங்குகளையும் ஆபத்தெனப் பிடித்துக் கூண்டில் அடைக்கிறோம்! ஆனால், பெண்களை வேட்டையாடும் மனித விலங்குகளை மட்டும் சாதி என்றும், அரசியல் என்றும் இல்லாத காரணக்காரியங்களை முன்னிருத்தி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று, எல்லோரும் சாகும் வரை வேடிக்கை பார்க்கிறோம்!

அடக்க முடியாமல் திரியும் ஆண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துவிடுங்கள், பெண்ணைப் போகப்பொருளாய் இழிவு படுத்திக் காட்டும் பத்திரிக்கைகளை, தொலைக்காட்சித் தொடர்களை, விளம்பரங்களை, திரைப்படங்களை எல்லாம் தடைச் செய்யுங்கள்.....

#அடிப்படையில் மாற்றம் காணாத வரை, தம்மை வேட்டையாட வரும் மிருகங்களைப் பெண்களே வேட்டையாட வேண்டும்! தற்காப்பு!

தொலைக்காட்சித் தொடர்கள்

Photo: தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாளடைவில் பெரும் மனச்சிதைவு வந்துவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு இருக்கிறது கதையும் அதன் போக்கும்.....குழந்தைகளையும் கூட்டுச் சேர்த்துப் பார்ப்பது பெரும் கொடுமை! 

உறவுகள் அனைத்தும் பகைக் கொண்டவர்கள், ஒவ்வொருவரும், ஒவ்வொருவர் வீழக் காத்திருக்கிறார்கள், உண்ணும் உணவில் விஷம் இருக்கலாம், எச்சரிக்கை! 

# சாராயம், கஞ்சா, புகை, மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்!


தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாளடைவில் பெரும் மனச்சிதைவு வந்துவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு இருக்கிறது கதையும் அதன் போக்கும்.....குழந்தைகளையும் கூட்டுச் சேர்த்துப் பார்ப்பது பெரும் கொடுமை!

உறவுகள் அனைத்தும் பகைக் கொண்டவர்கள், ஒவ்வொருவரும், ஒவ்வொருவர் வீழக் காத்திருக்கிறார்கள், உண்ணும் உணவில் விஷம் இருக்கலாம், எச்சரிக்கை!

# சாராயம், கஞ்சா, புகை, மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்!

Sunday 29 December 2013

கீச்சுக்கள்!











Photo: சோம்பலில் சுகம் கண்டோரை மாற்றுவதற்குப் பதில், தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துவிட்டு போய் விடலாம்! 
# ரொம்பக் கஷ்டமப்பா!
சோம்பலில் சுகம் கண்டோரை மாற்றுவதற்குப் பதில், தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துவிட்டு போய் விடலாம்!
# ரொம்பக் கஷ்டமப்பா!

------------------------------------------------------------
முன்பு போட்ட நிலைத்தகவலுக்கு எதிர்வினைப் போல, இருபுறம் என்பது போய், இன்று மொத்த சாலையும் முடக்கப்பட்டுவிட்டது, வெறும் கார்களை நிறுத்த வேண்டி!

இன்று ஒருவேளை எல்லோரும் வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தபட்டிருக்கலாம், அல்லது முன்பே வேறு எங்கேனும் சென்றிருக்கலாம், ஏதேனும் ஓர் அவசரத்திற்கு, ஓர் ஆம்புலன்ஸ் அந்த இடத்தைக் கடக்க முடியாது, நேரே சொர்க்கத்திற்குத் தான் செல்ல வேண்டும்!

#ஆள்பவருக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இருவேறு சட்டங்கள் இருக்கும்வரை நீதி என்பது குதிரைக் கொம்பே!

 
------------------------------------------------------------------------
அன்பிற்காகவும், கடமை ஆற்ற வேண்டியும் பல நேரம் நாம் இதை இழக்க வேண்டி இருக்கிறது, அப்போதெல்லாம் ஒன்றுதான் தோன்றுகிறது, இந்த உப்பு கம்பெனி விளம்பரங்கள் எல்லாம் பொய் சொல்லுகிறது யுவர் ஆனர்!
# இந்த சூடு கம் சுரணை மிஸ்ஸிங்!
feeling meh. 
-----------------------------------------
தவறு செய்வது என்பது இயல்பாகவும், தவறு செய்யவில்லை என்பது பெருத்த ஆச்சரியமாகவும் பார்க்கப்படுகிறது!
# சட்டத்தையும் மாற்ற வேண்டியதுதானே?!
feeling excited. 
-------------------------------------------------------------
ஒரு விஷயமாய் அலைந்து திரிந்த போது, ஏம்மா நீ நம்ம முருகேச..............பொண்ணுதானே? என்று சாதி பெயரையும் சேர்த்து ஒரு பெரியவர் கேட்க, ஆமாங்க முதல் பாதிப் பெயர் எங்கப்பாவோடதுதான், இரண்டாவது பாதி யாருன்னு தெரியலையே என்று, சிரித்துக் கொண்டே சொன்னவுடன்...பார்த்தாரே ஒரு பார்வை! அவருக்கு ஒரு நெற்றிக் கண் இருந்திருந்தால் எரித்திருப்பார் என்றே தோன்றியது! — feeling குறும்பு மற்றும் குசும்பு! சிக்கிடாண்டா கைப்புள்ள! :-).
--------------------------------------------------------------------------------
பெரிய ஷாப்பிங் மால்களில், அல்லது சிறிய கடைகளில், அல்லது நெடும் பயணம் மேற்கொள்ளும் தொடர்வண்டிகளில், வழியில் வரும் நிறுத்தங்களில்....என்று எங்கும் கழிவறை என்பது தேவை இல்லாத ஓர் இடமாகவே கருதப்பட்டு மிக மிகக் கேவலமாய்ப் பராமரிப்பில்லாமல் (கட்டண வசூலிப்புத் தவிர) இருக்கிறது...

கழிவை அகற்றும் இடம் சுத்தமாய் இல்லை என்றால், உண்மையில் பல்வேறு நோய்க் கிருமிகளை அல்லவா மனிதர்கள் சுமக்க நேரும்?

எத்தனை வனப்பென்றாலும், மனித உடலில் கழிவென்பது போகவில்லை என்றால், எல்லாம் குலைந்துப் போகும், கழிவறைகள் சுத்தமில்லாமல் இருந்தாலும், பிணிகள் உடலில் நிரந்தரமாய்க் குடிகொள்ளும்!

# வெளியிலும், வீட்டிலும் மற்ற அறைகளின் சுத்தம் போலவே கழிவறை சுத்தத்தையும் பேண வேண்டும்! பிற அறைகளை அலங்கரித்து, கழிவறையை விட்டுவிடுவது என்பது,குளித்துவிட்டு, அழுக்கான உள்ளாடையை அணிந்து கொண்டு மேலுக்குப் பகட்டான பட்டாடையை அணிந்துக் கொள்வதைப் போன்றது!
Photo: பெரிய ஷாப்பிங் மால்களில், அல்லது சிறிய கடைகளில், அல்லது நெடும் பயணம் மேற்கொள்ளும் தொடர்வண்டிகளில், வழியில் வரும் நிறுத்தங்களில்....என்று எங்கும் கழிவறை என்பது தேவை இல்லாத ஓர்  இடமாகவே கருதப்பட்டு மிக மிகக் கேவலமாய்ப் பராமரிப்பில்லாமல் (கட்டண வசூலிப்புத் தவிர) இருக்கிறது...

கழிவை அகற்றும் இடம் சுத்தமாய் இல்லை என்றால், உண்மையில் பல்வேறு நோய்க் கிருமிகளை அல்லவா மனிதர்கள் சுமக்க நேரும்? 

எத்தனை வனப்பென்றாலும், மனித உடலில் கழிவென்பது போகவில்லை என்றால், எல்லாம் குலைந்துப் போகும், கழிவறைகள் சுத்தமில்லாமல் இருந்தாலும், பிணிகள் உடலில் நிரந்தரமாய்க் குடிகொள்ளும்! 

# வெளியிலும், வீட்டிலும் மற்ற அறைகளின் சுத்தம் போலவே கழிவறை சுத்தத்தையும் பேண வேண்டும்! பிற அறைகளை அலங்கரித்து, கழிவறையை விட்டுவிடுவது என்பது,குளித்துவிட்டு, அழுக்கான உள்ளாடையை அணிந்து கொண்டு மேலுக்குப் பகட்டான பட்டாடையை அணிந்துக் கொள்வதைப் போன்றது! 
-----------------------------------------------------------------------------------
ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற அறிவிப்பு/சலுகைத் தாங்கி வரும் பெரும்பாலான பொருட்கள் யாவும், இரண்டின் விலையை ஒன்றில் தாங்கியே வருகிறது!
# வியாபாரத் தந்திரம்!
---------------------------------------------------------------------------------------------------
எப்போதும்
அந்திப்பொழுதில்
என்னையே சுற்றுவாய் - பின்
பொழுதுகளில் பேதமில்லாமல்
நானே உன்
உலகமாகிப் போனேன்
எனக்காக
நீ பாடும் இசை
யாருக்கும் கேட்காது,
எப்போதும் இரத்த தானம்
உன்னால் -
சிறகுகள் இருந்தும்
என்னையே சுற்றுவதேன்
கொசுவே?!
— feeling sad கொசுத்தொல்லை தாங்க முடியலை!
Photo: எப்போதும் 
அந்திப்பொழுதில் 
என்னையே சுற்றுவாய் - பின் 
பொழுதுகளில் பேதமில்லாமல் 
நானே உன் 
உலகமாகிப் போனேன் 
எனக்காக
நீ பாடும் இசை 
யாருக்கும் கேட்காது, 
எப்போதும் இரத்த தானம் 
உன்னால் - 
சிறகுகள் இருந்தும் 
என்னையே சுற்றுவதேன் 
கொசுவே?!
--------------------------------------------------------------------
சுட்டுவிடுவான் என்று தெரிந்தும் வெள்ளையனை வீரத்துடன் எதிர்த்தவர்களின் வாரிசுகளா (நாம்) இந்தியர்கள்?
#பணம், பதவி என்று சொன்னவுடன் நிறையப் பேரைக் காணோம், யார் காலில் யாரோ!
— feeling amused அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
-----------------------------------------------------------------------
ஓர் அரசு அலுவலகம், வரிசையில் மக்கள், கௌண்டரின் அருகே இரண்டு கண்காணிப்புக் காமெராக்கள்....ஒருவர் வருகிறார், "சார் நான் கிளம்பறேன்" என்று நகர, ஒரு கௌண்டரில் இருந்தவர் அவசரமாக இன்னொரு ஊழியரை அழைத்து, சென்றவர் பின்னே அனுப்புகிறார். விடைப்பெற்றுச் சென்றவர் மீண்டும் வருகிறார், ஒரு புத்தகத்தைக் கௌண்டரில் இருப்பவரிடம் கொடுத்து, "அப்புறம் படிங்க சார், நான் வரேன்!" என்கிறார்! மேட்டர் ஓவர்!

#2G, 3G எல்லாம் கடந்தாச்சு, யார்கிட்ட?! 
--------------------------------------------------------------------------------------------
எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஒருவருக்குக் கடைசியில் கிடைப்பதென்னவோ தனிமையும், ஏமாளி பட்டமும் தான்!
-------------------------------------------------------------------------------------
ஒருவரின் சோம்பலை இன்னொருவரின் உழைப்பு ஈடு செய்யும்!
------------------------------------------------------------------------------------
ஊக்கபடுத்தும் வார்த்தைகள் குழந்தைகளின் முகத்தையும், உலகத்தையும் இன்னும் சற்று அதிகமாகப் பிரகாசிக்கச் செய்கிறது!
Photo: ஊக்கபடுத்தும் வார்த்தைகள் குழந்தைகளின் முகத்தையும், உலகத்தையும் இன்னும் சற்று அதிகமாகப் பிரகாசிக்கச் செய்கிறது!   
----------------------------------------------------------------------------------------
"சரி, முதலில் நான்தானே அந்த ஐடியா சொன்னேன்....... "

"அடக் கேளேன்..... "

"சரி, நீ பேசினதை நான் கேட்டேன், இப்போ நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு ....ஒரே ஒரு நிமிஷம் பா...."

"ஐயோ, சரி, இன்னைக்குப் பேசினா சரியா இருக்காது, நீ கேட்க மாட்டே, நீ நாளைக்கு வா, நான் பேசுறேன்!"

நான்கரை வயது மகள் ஓர் எட்டு வயது தோழியுடன் யார் முதலில் விளையாடுவது என்ற விவாத்தில் கூறியதுதான் மேற்கூறியே வாக்கியங்கள்.....
அம்மாவிடத்தில் விட்டுகொடுக்காமல் குறும்பு செய்யும் குழந்தை, தோழியுடன் ஒரு பெரிய மனுஷத் தோரணையில் பேசும்போது புரிகிறது, இந்தக் காலக் குழந்தைகள் ரொம்பத் தெளிவாய் இருக்கிறார்கள்!
— feeling blessed. 
Photo: "சரி, முதலில் நான்தானே அந்த ஐடியா சொன்னேன்....... "

"அடக் கேளேன்..... "

"சரி, நீ பேசினதை நான் கேட்டேன், இப்போ நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு ....ஒரே ஒரு நிமிஷம் பா...." 

"ஐயோ, சரி, இன்னைக்குப் பேசினா சரியா இருக்காது, நீ கேட்க மாட்டே, நீ நாளைக்கு வா, நான் பேசுறேன்!" 

நான்கரை வயது மகள் ஓர் எட்டு வயது தோழியுடன் யார் முதலில் விளையாடுவது என்ற விவாத்தில் கூறியதுதான் மேற்கூறியே வாக்கியங்கள்.....
அம்மாவிடத்தில் விட்டுகொடுக்காமல் குறும்பு செய்யும் குழந்தை, தோழியுடன் ஒரு பெரிய மனுஷத் தோரணையில் பேசும்போது புரிகிறது, இந்தக் காலக் குழந்தைகள் ரொம்பத் தெளிவாய் இருக்கிறார்கள்!
 
 
 
 
 


நா காக்க

gossip

யாரோ வடித்த
சிலையை -
நீங்கள் செதுக்குவதும்
விந்தை!
சுயம்புவை செதுக்கி
சில்லுகளாக்க வேண்டாம்,
உங்கள் வார்த்தைகளின்
உளியில்!

மௌனம் என்பது
மரணத்திற்குச் சமம்
பல வேளைகளில்!
பிறிதொரு வார்த்தை
எழுப்பிடாது ஏற்கனவே
செத்துவிட்ட சிலையை!

யாகாவா ராயினும் நாகாக்க!

Thursday 26 December 2013

சாதகப் பறவை






ஊடல் கொண்ட
மனங்களின் பின்னே,
எழும்
மௌனத்தின்
பேரிரைச்சலை,
அன்பு நிரம்பிய
மனம் ஒன்று
சங்கீதமாய் மாற்றிடும்
இயைந்த உள்ளம் கருதி!

 

Wednesday 25 December 2013

கானல் நீரே

ஆற்றல் காணாத கோபமும்
கருணை மறந்த புன்னகையும்
அன்பில்லாமல் படைக்கும் உணவும்
கடமை ஆற்றாத உறவும்
ஈரம் இல்லாத பகையும்
காதலில்லாத காமமும்
நேர்மை இல்லாத அரசாங்கமும்
சோம்பிக் கிடக்கும் உடலும்
வானம் பொய்த்த பூமியும்
அரவணைக்காத தாய்மையும்
காத்து நிற்காத ஆண்மையும்
தோள் கொடுக்காத நட்பும்
வறண்ட பாலையில் தோன்றும்
கானல் நீரே, - இருந்தும்
இல்லாதது போலவே!
வாழ்வதற்காக வாழ்கிறது
மானுடம்!

பகை

தள்ளி விட்டுச் சென்றபின்
வருவதென்ன மாயமோ?
கொடுத்த பின் பெறுவது
பரம்பரைக்கு இழுக்கு
மன்னித்துத் தந்த உயிரை
மாய்த்துக் கொள்ளாதே உயிரே
சற்றே விலகி நில்!

Monday 23 December 2013

அனாதை


வலிக்கிறது
அழுகிறேன் - வலி
உணராது நகைக்கிறாய்
இது வலிக்குமா என
வியக்கிறாய்

ஒவ்வொன்றையும்
இழந்து - இன்று
கண்ணீரையும்
இழக்கிறேன்!

ஆற்றுவார் இல்லாத
சுயம்புவின் வலி
ஆற்றலாய் மாறும்,
அதுவரை என்னை
அழவிடு!


 

பூக்களைப் பறிக்காதீர்!


பிஞ்சை பறித்து
நஞ்சை வார்த்து
கொன்றுப் போட்டீர்!

இளமையில்
வறுமைத் தந்து -
தோல் கருக்கி
கந்தலில்
கலங்க விட்டீர்!

தாயிடமிருந்து பிரித்து
கண்களைக் குருடாக்கி
பிச்சையினைப் புசித்தீர்!

மலரை முகர்ந்து
பலருக்குத் தாரை வார்த்து
காமத்தை வளர்த்தீர்!

மதங்களை மதித்து
சாதியினைப் போற்றி
இளங்குருத்துக்களை
எரித்தீர்!

இனி,
காட்டில் வாழும்
புலிகள் கூடத் தோழனாகும்,
வெவ்வேறு பசிகளில்
பிள்ளைகள் தின்று
நாட்டில் திரியும் 
உங்களை என்ன செய்ய?

அப்படியே

 
கண்ணாடி
மனங்களில்,
நம்பிக்கை
நிலைப்பெற்றால்,
அதன்
பிம்பங்களும்
புன்னகைக்கும்!








வருத்தம்!


வெளிப்படுத்தி
இருந்திருக்கலாம்
அவ்வன்பினை
என்னிறுதி என்றே
தெரிந்திருந்தால்

உணர்த்தாது
இருந்திருக்கலாம்
அத்தவறினை
அவனிருதி என்றே 
நான் அறிந்திருந்தால்

இருப்பின் வேண்டுதல்
இல்லாததிலும்
வாழ்வின் தேடல்
முற்றுப்புள்ளியிலும்
என - பெரும் 
காட்சிப் பிழைகளிலும் 
மன மயக்கங்களிலும்
உழன்று நோகுமன்றோ
இவ்வாழ்வு!

சங்கமம்

 
தேங்கி நின்றால்
குட்டை
ஓடிச் சென்றால்
நதி
கலந்து விட்டால்
கடல்,
பேதங்கள்
உடைந்து,
எல்லைகள்
விரிந்து,

நேசிப்பின்
ஆழம் காணும்
ஒரு பேரன்புச்
சங்கமம்!

Wednesday 18 December 2013

தொலைந்தவை
























அப்பாவும் அடிப்பார்
அம்மாவும் அடிப்பார்
எல்லோரும் அடிப்பார்கள்

கல்லெனக் கருதி
உணர்வினைக் கேளாமல்
சிற்பம் செதுக்குவார்கள்

நிற்பது சிலையல்ல
சில்லு சில்லாய் போன
உணர்வென்று அறியாமல்
இறுதியில் வேண்டி நிற்பார்
ஈரம் - உடைந்துபோன
ஒரு குழந்தையிடம்!

இயலாமை


அறைந்து
மூடப்பட்டது 
இறைவனின் 
கருவறை

இன்னமும்
கையேந்தியபடி பக்தன்
பிச்சைக்காரனாய்
இயலாமை!
 

Tuesday 17 December 2013

உறங்கும் கவிதை


என் காதல் கவிதைகள்
உறங்குகின்றன என்னுளேயே
யாரது என்று, அபத்தமாய்
நீ ஏதும்
கேட்டுவிடக் கூடாதென்று! 

Monday 16 December 2013

ஓடை


மலர் எறிந்தால்
கரைச் சேர்க்கும்
கல் எறிந்தால்
ஆழம் கொள்ளும்

வீசும்
வேகத்தின் கண் 
நீர் தெளிக்கும் - 

தாகத்தையோ
மீறும் உன் 
கோபத்தையோ
அது தணிக்கும்

வேறேதும்
தெரியாது ஓடைக்கு
போய் வா பகையே!
கோடைக்கு முன்!

நானும் ஓர் ஆடு!


அதிகாலை வெளிச்சம்
அந்திவேளையின் இருள்
சிறகடிக்கும் பறவை
சட்டென்று விழும்
ஒரு பனித்துளி

சுழன்றடிக்கும் காற்று
மழை ரசிக்கும் குழந்தை
முறைத்துப் பார்க்கும் காகம்
அசைபோடும் மாடு

பிச்சைக் கேட்கும்
கரங்கள்
கந்தலில் கலங்கடிக்கும்
வறுமை

பார்வையில்
தகித்திடும் வெற்றுக் காமம்
சாலையில்
சாய்ந்திடும் போதை
காகிதத்தில்
விலைப்போகும் நேர்மை 

அழகையும்
அவலத்தையும்
ரசித்தும் சகித்தும்,
வலி விழுங்கி
கடந்து செல்லும்
உயிருள்ள மந்தையில்
நானும் ஓர் ஆடு!

பூக்கள் மென்மையானவை!


புதிதாய் ஒரு பக்கம்
தினம் திறக்கிறேன்
புன்னகையோடே - உனக்காக
இந்த வாழ்க்கைப் புத்தகத்தில்!

கடுமையும் இனிமையும்
மாறி மாறி கண்ணீர் நிரப்பும்
எழுதுகோலில் - ஏனோ
கசிகிறது சிவப்பு,
விரல்களின் வழியே
எப்போதும்!

கசிகின்ற குருதியிலும்
பூ மணம் ஒன்றே வீசும்
பூக்கள் மென்மையானவை
புரிந்துகொள்ளேன் ஒரு நாளில்?

Friday 13 December 2013

நினைவலைகள் - தோழி



நினைவலைகள் - தோழி
-------------------------------------
எங்கிருக்கிறாய் நீ
சூழும் பொய்களின்
கைகளில் எனை விட்டு
நீ எங்குச் சென்றாய்?

எங்கிருக்கிறாய் நீ
வட்டத்திற்குள் இருந்து
சாரல் பொழிந்திடும் சில
மரங்கள் உண்டு -
மழைப் பெய்திட உன்னை
எதிர்நோக்குகிறது மனம்

எங்கிருக்கிறாய் நீ?
தேங்கி நின்ற
கண்ணீரில் இருப்பது
தூசியா, துயரமா
உனையன்றி யாரறிந்தார்
மற்றுமொரு தாய்மை
கண்டிட விழையுது தினம்

எங்கிருக்கிறாய் நீ?
பலநாள் கண் திறவாமல்
கிடக்க, கரம் பற்றி மீட்டாய்
உயிர் கொடுத்த உன் ஸ்பரிசம்
வேண்டி தவிக்கிறது இக்கரம்

எங்கிருக்கிறாய் நீ?
ஒவ்வொரு முறையும்
பிழைத்து விழிக்கையில்
உனக்காகவே இந்த விழிப்பென்று
நினைவில் நிற்கிறாய் நிதம்!

எங்கிருக்கிறாய் நீ?
பேதங்கள் சாய்த்திடவில்லை
கடிகாரத் தேவையுமில்லை
ஒரு பணக் கணக்கும் இல்லை
நிரந்தர மனப்பிணக்கும் இல்லை
கண்கள் மறைத்த பொய்களில்லை
கரம்பற்றி உணராதா உண்மைகளில்லை
யாருக்கும் வாய்த்திடா வரம்

எங்கிருக்கிறாய் நீ?
எப்போதும் நாமும்
மழையும்
இப்போது நானும்
மழையும் மட்டும்

எங்கிருக்கிறாய் நீ?
தொலைவில் உன் மூச்சுக் காற்று
இதோ இன்றும் நான் சுவாசிக்கிறேன்
காற்றில் தேடுகிறது என் உயிர் நாளும்! 

Thursday 5 December 2013

குற்ற மூட்டையை இறக்கி வையுங்கள்!

நன்றி - தி ஹிந்து

குற்ற மூட்டையை இறக்கி வையுங்கள்!
------------------------------------------------------
ஒரு துறவியும், அவர் சீடர் ஒருவரும் காட்டு வழி நடந்து சென்றனர். இருவரும் ஓர் ஆற்றைக் கடக்க நேர்ந்தது. அப்போது, ஒரு பெண் ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்றுகொண்டிருந்தாள். தனக்கு உதவி செய்யுமாறு அவள், அவர்கள் இருவரையும் கேட்க, துறவறம் கொண்டபின் பெண்ணைத் தொட்டுத் தூக்குவதா என்று சீடன் யோசிக்க, துறவி சட்டென்று அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து, அந்தப் பக்கம் இறக்கி விட்டு விட்டார்.

சீடனுக்குப் பெரும் குழப்பம், துறவி எப்படி அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கலாம் என்று. துறவியும் சீடனும் நெடுநேரம் நடந்து, நெடுந்தூரம் கடந்தபின்னும் சீடனுக்கு குழப்பம் தீரவில்லை. சரி கேட்டு விடுவோம் என்று, "குருவே அந்தப் பெண்ணை நீங்கள் தூக்கியது துறவறத்துக்கு இழுக்கல்லவா?" என்று கேட்க, குரு சொன்னாராம், "சீடனே நான் அந்தப் பெண்ணை அப்போதே இறக்கி விட்டு விட்டேனே, நீ இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறாய்?" என்று!

இப்படித்தான் நம்மில் பலரும் பிறர் மீதான கோபத்தை, நாமாக உருவாக்கிக் கொண்ட அபிப்ராயத்தைச் சுமந்து கொண்டு இருக்கிறோம். நீ என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், அது இப்படியில்லை, இது இப்படிதான் நடந்தது, அப்படி புரிந்துக் கொள்ளப்பட்டது என்று பேசினாலே பல விஷயங்களுக்கு விளக்கம் கிடைத்துவிடும். மன்னிப்பிலும், விளக்கத்திலும் சில விஷயங்கள் தெளிந்து விடும், காலபோக்கில் சிலது நீர்த்து விடும். ஆனால் நாம் பேச விரும்புவதில்லை, கேள்விக் கேட்க விரும்புவதில்லை, நாமே நமக்கு அறிவாளி, பிறர் எல்லாம் கோமாளி என்ற ரீதியிலேயே நமது நினைப்பும், செயலும் அமைந்து விடுகிறது.

ஒருவரைப் பற்றிய கருத்துக் கொண்டவுடன், அவன்/அவள் அப்படிச் சொன்னான்(ள்), இப்படி எழுதினாள்(ன்) என்று நமக்கு நெருங்கிய ஒரு வட்டத்திற்குள் கதைக்கத் தொடங்குகிறோம், ஒரு புள்ளிக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உருவம் கொடுத்து நிறைவு செய்கிறோம். இப்படியே உண்மை விளம்பிகளாக நாம் கிசுகிசுப்பில் லயித்து, ஏதோ ஒருவனை அல்லது ஏதோ ஓர் அமைப்பை பற்றிய ஓர் உருவகம் அல்லது மனபிம்பம் கொள்கிறோம்.

இந்த முறையில் ஏதோ ஒரு மனம் புண்படலாம், ஏதோ ஓர் அமைப்புச் சிதைந்திடலாம், ஏதோ ஒரு தற்கொலை நிகழ்ந்திடலாம், எங்கோ ஓர் உறவு பிரிந்திடலாம். அத்தனையும் செய்தவர்கள், இந்தப் பிரிவையோ, பிளவையோ சரி செய்திட முடியாது, போன உயிரையும் திருப்பித் தர இயலாது!

தனி மனிதர்களாக நம்முடைய தெளிவுப்படுத்திக் கொள்ளாத சிந்தனையும் செயல்களும் பல்வேறு தாக்கங்களை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு உடனடியாகவே ஏற்படுத்தும். தேவையில்லா ஒரு கிசுகிசுப்பு ஏதோ ஓர் அண்டை வீட்டாரைப் பாதித்திடலாம், ஏதோ ஒரு தற்கொலைக்கு தூண்டலாம். உதாரணத்திற்குப் பக்கத்துக்கு வீட்டில் ஒரு பெண் யாரையோ ஓடிப் போய்த் திருமணம் செய்தால், அண்டை வீட்டார் அந்தப் பெற்றவருக்கு ஒரு தைரியத்தையோ, துணிவையோ, தெளிவையோ தருகிறார்களோ இல்லையோ, அதற்குள் ஒரு மிகப்பெரிய திரைக்கதையை இயற்றி, அதை விநியோகித்தும் இருப்பார்கள்.

தவறான தகவல்களால் உருவான வதந்தி, அவர்களைப் பொருத்தவரை தொலைக்காட்சித் தொடரை விட ருசிகரமானது. கொஞ்ச காலம் அந்தப் பெண்ணும் குடும்பமும் தான் எல்லோர் வீட்டுக்கும் விளம்பர இடைவேளை இல்லாத ஒரு தொலைக்காட்சித் தொடர். அத்தனை சுவாரசியம் அந்தத் தலைப்பு! வதந்தி காட்டு தீ போல் மெல்ல மெல்ல பரவி, சொல்பவரின் நாக்கை நெருப்பாக்கி, கேட்பவரின் புத்தியை கருப்பாக்கி விடுகிறது.

சரி தனி நபர் இப்படி என்றால், மக்கள் சாதனக் கருவிகள், அமைப்புகள் என்ன செய்கின்றன? பத்திரிக்கை / தொலைக்காட்சி செய்யும் புரளிகள், ஒரு பெரும் தாக்குதலையே ஏற்படுத்தி விடும்..

ஏதோ ஓர் 56 வயது பெண்ணையும், அவருடைய மகனையும் ஒருவன் கொலை செய்திட, உடனே அந்தப் பெண்ணுடைய கள்ளக்காதலன் சுமார் இத்தனை மணிக்கு வந்தான், இருவரும் உல்லாசமாய் இருந்தார்கள், அப்புறம் அவர்களுக்குள் தகராறு, பெண்ணைக் கள்ளக்காதலன் கொலை செய்ய, மகன் குறுக்கே பாய அவனும் கொல்லப்பட்டான். இப்படியாகப் போகும் அந்தக் கதை.

காவல் துறையினருக்குக் கூடத் தெரியாத விஷயமெல்லாம், கொலை நடந்த உடனே இவர்களுக்குத் தெரிந்து விடுகிறது, பிறகு மொத்தக் குடும்பத்தையும் அலசி ஆராய்ந்து, அவர்கள் வீட்டுக் கொள்ளுப் பாட்டியில் இருந்து, அந்த வீட்டில் பழைய சோறு தின்ற நாய்க்குட்டி வரை அத்தனை பேரின் வரலாறும், புகைப்படங்களும் பிரசுரித்து ஒரு மிகப் பெரிய சாதனை படைப்பார்கள். எதிர் வீடு, பக்கத்து வீடு, பக்கத்து வீட்டுக்கு எதிர் வீடு, எதிர் வீட்டுக்கு பக்கத்து வீடு என எல்லாருடைய கருத்துகளையும் வாங்கிப் போடுவார்கள்.

காவல் துறை புலனாய்வு செய்து, அந்தப் பெண்ணின் கணவருக்கும், கொலைகாரனுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த கொலை இது என்று வழக்கை முடிக்க, ஒரு சிறு மன்னிப்பு கூட இல்லாமல், அந்தச் செய்தியையும் போடும், ஒளிபரப்பும் இந்த ஊடகங்கள். நிற்க. இது ஓர் உதாரணமே. மிகப்பெரிய ஊடகங்களிலும் மனிதர்கள் தாங்களாக தெரிந்து கொண்ட செய்திகளை, தெளிவுப்படுத்திக் கொள்ளாமல் ஏதோ ஒரு பரபரப்பிற்காக, பணம் பெருக்கும் காரணத்திற்காக பரப்புரை செய்து விட்டு, மன்னிப்பு கேட்கும் ஒரு அறம் கூட இல்லாமல் போவதுதான் வேதனையான விஷயம்.

உண்மையில் இந்த நிகழ்ச்சிகளுக்கு/ நிகழ்வுகளுக்குப் பின்னே இருப்பது என்ன? ஒரு விதமான மனச்சிதைவு! ஏதோ ஒரு வடிகால், ஒரு குறுகுறுப்பு.

கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் நமக்குக் கேள்விக் கேட்க முடியவில்லை என்றாலும் அதை நெருக்கமானவர்களிடம் பேசி தொலைத்து, மறந்து விடலாம், ஆனால் கேட்க உரிமை உள்ள இடத்தில், அல்லது வாய்ப்பு உள்ள இடத்தில் கேட்காமல் விடுவது, உண்மையில் கேள்வி கேட்க நாம் விரும்பாததையும், அந்தக் கேள்விக்கு வரும் பதில் சுவாரசியம் இல்லாமல் போய்விடுமோ என்ற சில நிலைப்படும் காரணமாய் இருக்கலாம், அல்லது ஓட்டுப் போட்டு விட்டு எப்போதும் அல்லாடும் ஒரு சாதாரணக் குடிமகனாய் இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு பகையைத் தீர்த்துக்கொள்ள, ஒரு வளர்ச்சியைத் தடுக்க அல்லது ஓர் உறவை முறிக்கப் பயன்படுத்தும் ஓர் ஆயுதமாகக் கருதியும் கேட்காமல் இருக்கலாம்!

வாழ்க்கைக்கு, சுதந்திரத்திற்கு ஆதாரமான எதையும் கேட்கவும், தெளிவுப்படுத்தி கொள்ளவும் நமக்கு நேரமில்லை. மாறாக இந்தச் சமுதாயம், நடிகையின் தொப்புளைப் பற்றிய கிசுகிசுப்பில் லயித்துக் கிடக்கும், திரைப்படம் வெளி வரவில்லை என்றால் பெரும் போராட்டம் நிகழ்த்தும், காந்தி ஜெயந்திக்குச் சாராயக் கடை திறந்தால் என்ன என்று விவாதிக்கும், வாங்கிய வரியில் மக்களுக்கு என்ன நன்மை நடந்தது என்று கேட்கத் தவறும், கேட்டாலும் சட்டங்கள் பாயும், சட்டம் படித்த வல்லுனர்களும் வாய்தா வாங்கிப் போராடிக் கொண்டிருப்பார்கள், சாதி மதம் எனப் பிளவுபட்டு, ஒற்றுமை இழக்கும், வளர்ச்சியை இழக்கும், நிலத் தரகர்களின் பிடியில் விவசாயியைக் கொல்லும், உள்ளூர் வியாபாரிகளைக் கொன்று விட்டு, சீனத்து வணிகம் வளர்க்கும், பிறகு சீனா, அருணாச்சலத்தை அளக்க பதற்ற நாடகம் செய்யும், தமிழர்களின் ஓட்டு கேட்கும், மறுபக்கம் ஆயுதம் தந்து அவர்களைக் கொல்லும், சாலை விதிகளைப் பற்றிய சட்டம் இயற்றும், சாராயக் கடைகளும் அதுவே நடத்தும், படித்தவனைக் கடினமாகப் பிழியும், அதிகாரி ஆக்கும், பதவி பெற்ற ஏதோ ஒரு ரௌடிக்கோ, ஊழல் செய்யும் ஒரு பெருசாளிக்கோ அவனைச் சேவகம் செய்யச் சொல்லும், மரம் வளர்க்கச் சொல்லும், மறுபக்கம் சுரங்கம் தோண்டி காடு அழிக்கும், வளங்கள் திருடும்.

எத்தனை எத்தனையோ இந்தச் சமுகத்தில் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கும். சில கேள்விகள், சிலரின் போராட்டங்கள் எங்கோ சிலருக்கு நீதியை பெற்று தந்துக் கொண்டும் இருக்கும்.

பேசமுடியாத இந்த சமூகத்தில் உள்ள சட்ட அமைப்பும், தவறு செய்பவனை விட, பாதிக்கப்படுவனைத் தான் இங்கே அதிகம் போராட வைக்கிறது என்பதே பொதுஜனம் புரிந்து கொண்ட நிதர்சனம்.

குறைந்தபட்சம் நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது, வளரும் தலைமுறைக்கு ஒரு வழிக்காட்டுதல் தேவை இருக்கிறது. அந்த வழிகாட்டுதல் இல்லாத வரை, நீதி இரத்தம் சிந்திக் கொண்டுதான் இருக்கும் இந்த ஊமையான சமூகத்தில்.

புரையோடிப் போனவற்றைப் போராட்டமும், மக்களுக்கான சட்டமும் சரி செய்யட்டும், வளரும் இளந்தலைமுறைக்கேனும் வழிகாட்டுதலை வீட்டில் இருந்தே துவங்குங்கள், குழந்தை வளர்க்கும் போதே, இன்று என்ன நடந்தது என்று தினம் கேட்க வேண்டும், குற்றம் குறைகளைக் குழந்தைச் சொல்லும் போது, அந்தக் குழந்தையைச் சரியானபடி வழி நடத்த வேண்டும், அதனுடைய சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும், நண்பர்களுடன் அந்தக் குழந்தைக் கொண்ட ஊடலை, தானே பேசித் தெளிவுப்படுத்திக் கொள்ளச் சொல்ல வேண்டும், இல்லை சம்பந்தப்பட்ட எல்லாக் குழந்தைகளையும் அழைத்து, அவர்களுக்குப் பேசித் தெளிவுப்படக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து, அந்தக் குழந்தையைத் திருப்பி அடி, அந்தக் குழந்தையுடன் சேராதே, ஆம்பிளைப் பசங்க அப்படிதான், பெண் பிள்ளைக்கு அடக்கம் வேண்டும், இந்தச் சாதி, அந்த மதம் எல்லாம் அப்படிதான் என்று தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொடுக்கும் அடிப்படையில் உருவாகிறது தீவிரவாதம், தீவிரவாதிக்கு பொறுமையில்லை, கேட்டு தெளியும் அறிவும் இல்லை. பொறுமையும் அறிவும் இல்லாதவருக்கு வன்முறை ஒன்றே ஆயுதம்!

பின்னாளில் இவர்களில் ஒருவர் குற்றவாளியாகலாம், ஒரு பெண்ணைச் சிதைக்கலாம், அல்லது வாழும் வீட்டை நரகமாக்கலாம். இவர்கள் அதிகாரிகளானால், அரசியலில் ஈடுபட்டால், கொள்ளைகளும் கொலைகளும் தொடரலாம். அதனால் ஒரு பாதுகாப்பற்றச் சமுதாயம் உருவாகும், போராட்டங்கள் தொடரும்.

கேள்விக் கேட்க வேண்டிய இடத்தில் கேள்விக் கேட்க வேண்டும், தெளிவு பெற வேண்டும். கேட்கும் தன்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் நம் நாட்டில் இனிவரும் காலங்களில் அதிகமான காவலர்களும், மருத்துவர்களும் மட்டுமே தேவைப்படுவர்.

ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரியும், சாதி மதத் தலைவர்களும், ரௌடியும், கொலைகாரனும், கொள்ளைக்காரனும், வாய்முடிக் கிடக்கும் ஊடகங்களும், குடிமகனும் தங்களுக்கும் சாவு வரும், தன் தலைமுறை தன்னால் சேதப்படுத்தப்பட்ட இந்தப் பூமியில் தான் வாழ வேண்டும் என்ற நினைப்புக் கொண்டு, இனியேனும் திருந்தினால் தான் அடுத்த தலைமுறை வாழ்ந்திடும், கேட்டு, அறிந்து, ஆய்ந்து தெளிந்திடும்.

விதை பழுது ஆனால், விருட்சம் எப்படி வளரும்? வருங்காலம் வளமாக இருக்க, உங்கள் வீட்டில் குழந்தைகள் மனதில் நல்லதை விதையுங்கள். அன்பையும் அறிவையும் உரமாக்குங்கள்.

அடுத்த தலைமுறை கையில் பூக்களோடும், புத்தகங்களோடும் இருக்க வேண்டுமா அல்லது கத்தியோடும், கறையோடும் இருக்க வேண்டுமா?

முடிவு உங்கள் கையில்.

மு. அமுதாவின் வலைப்பதிவுத் தளம் http://amudhamanna.blogspot.in/

http://tamil.thehindu.com/opinion/blogs/குற்ற-மூட்டையை-இறக்கி-வையுங்கள்/article5421072.ece

குடி

பெயரில் பாதியை பெண்ணைப் போற்றும் பெயராகக் கொண்ட ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரின் ஒரு சமீபத்திய புதினத்தைப் படிக்க நேர்கையில், ஒரு பெரும் அதிர்ச்சியே கிடைத்தது!

குடிக்க விரும்பும் ஆண் மீது எந்தத் தவறும் இல்லை, இன்றைய காலக்கட்டத்தில் அது தவிர்க்க முடியாத ஒன்று, அவன் குடித்தால் என்ன? யாருடைய கையையும் பிடித்து இழுத்து வன்முறை செய்யவில்லையே, ஆணின் தவறுகளைச் சகித்துக் கொள்ள முடியாத பெண்களுக்கு வாழ்வில் எந்த மதிப்பும் கிடையாது, ஆகா ஓஹோ என்று, குடித்து விட்டு வாந்தி எடுத்து, தன்னிலை மறக்கும் கதாநாயகனை உத்தமனாகவும்........

குடிப்பது ஒரு பெரும் குற்றம், சமூகத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு, ஒரு குடும்பம் சிதைந்து போவதற்கு அதுவே காரணம், குடிப்பவனைச் சகித்துக் கொண்டால், எல்லாத் தவறுகளையும் சகிக்க வேண்டி வரும், அதனால் தனக்கு வரப்போகும் கணவன் குடிக்கக் கூடாது என்று ஆசைப்படும் கதாநாயகியை அடங்காப்பிடாரியாகவும், மனதில் பட்டதை வெளிப்படையாய் ஒரு பெண் பேசுவது தவறு என்றும், குடித்தால் என்ன, நன்றாகப் படித்திருக்கிறான், சம்பாதிக்கிறான், அவனை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கதாநாயகி மறுக்கும் ஒரு குடிகாரனை அவளுடைய தங்கையே மணந்து கொள்வது போலவும், குடும்பமே குடித்தால் என்ன, அதுதான் சரி என்று போற்றுவது போலவும், குடிகாரனை மறுத்த பெண் பெரும் திமிர் பிடித்தவள் என்றும், அவள் தனியாய் நிராகரிக்கப்பட்டு நிற்பது போலவும் கதையைக் கொண்டு சென்று முடித்து இருக்கிறார்.....

இவரின் கதைகள் தொலைகாட்சியில் நெடுந்தொடராகவும் வந்ததாகக் கேள்வி.....இவரை டாஸ்மாக் வியாபாரம் இன்னும் பெருக, மொத்த தமிழ்நாட்டு மக்களையும் குடிகாரர்களாக்க, ஒரு கொள்கைப் பரப்பு செயலராக நியமித்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்றியது!

# ஆகவே ஆண்களே, நீங்கள் குடித்து, வாந்தி எடுத்து, தெருவில் அலங்கோலமாக விழுந்து கிடந்தால் அதில் தவறேதும் இல்லை, உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு அவர்களும் குடிகரார்கள் ஆனால் தவறேதும் இல்லை, குடித்துவிட்டு வாகனம் ஒட்டி யாரேனும் இறந்தால் தவறேதும் இல்லை, ஒரு குடிகாரன் காமுகனாகி ஒரு பெண்ணைச் சீரழித்தாலும் தவறேதும் இல்லை, அவள் உங்கள் பெண்ணாய் இருந்தாலும்......

ஆகவே.......குடியுங்கள், நாட்டின் வருமானத்தைப் பெருக்குங்கள்!
feeling annoyed.

Gist

மாற்றமில்லாத முடிவு என்று எதுவும் இல்லை, மாறும் வேளையில் அது முடிவும் இல்லை!

When a man perceives or believes his “Intelligence” to be superior to others, then slowly another man conquers him easily in the name of “Arrogance”


You may be a skilled driver, but your safety mostly depends on the driving skills of another driver and on the courtesy of public trying their circus tricks on the roads in Chennai!

Somebody's self realisation, behind every maxim!

Seashore is always noisy and calmness resides in the centre as you move on

There is always somebody behind you on what you have achieved, may be as an enlightened/loveable soul or as a brutal killer!

Life is a maze and it is interesting as long as you are trying to find the way out!
# Explore


ரசித்துச் சுவைக்கும் நபர்கள் இருக்கையில், விதவிதமாய்ச் சமைப்பதிலும் ஓர் ஆர்வம் வருகிறது!
#வயிற்றில் அடங்கிவிடும் வாழ்க்கை!
 
 
 
 
 
 

சூன்யம்

வெறித்துப் பார்த்தாலும்
முறைத்துப் பார்த்தாலும்
புலம்பித் தீர்த்தாலும்
மாறப்போவது
ஒன்றுமில்லை
அட....
இந்த வாழ்க்கைதான்
எத்தனை அழகானது
எதிர்பார்ப்புக்கள்
நொறுங்கி போய்
விலகிப்போகும்
ஒரு தருணத்தில்!
# சூன்யம்

கைப்பிடி உணவு


கடனை மறந்தவர்
அன்பை மறந்தவர்
துரோகம் செய்தவர்
பாவம் செய்தவர்
இல்லை என்று சொன்னவர்
முடியாது என்று தள்ளியவர்
உழைப்பை உறிஞ்சியவர்
பொய் வேடம் பூண்டவர்
எல்லோரும் குழுமி இருந்தனர்
அவனுடைய சவ ஊர்வலத்தில்,
"நல்ல மனுஷன்யா,
இப்படியா போகணும்?"
சலசலத்துத் துடைத்துக் கொண்டனர்
கண்களில் வராத கண்ணீரை
தூரத்தில் ஒரு காகம்
மட்டும் கரைந்து கொண்டிருந்தது
என்றோ அவன் வைத்த
ஒரு கைப்பிடி உணவுக்காக!





வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!