Thursday, 5 December 2013

கைப்பிடி உணவு


கடனை மறந்தவர்
அன்பை மறந்தவர்
துரோகம் செய்தவர்
பாவம் செய்தவர்
இல்லை என்று சொன்னவர்
முடியாது என்று தள்ளியவர்
உழைப்பை உறிஞ்சியவர்
பொய் வேடம் பூண்டவர்
எல்லோரும் குழுமி இருந்தனர்
அவனுடைய சவ ஊர்வலத்தில்,
"நல்ல மனுஷன்யா,
இப்படியா போகணும்?"
சலசலத்துத் துடைத்துக் கொண்டனர்
கண்களில் வராத கண்ணீரை
தூரத்தில் ஒரு காகம்
மட்டும் கரைந்து கொண்டிருந்தது
என்றோ அவன் வைத்த
ஒரு கைப்பிடி உணவுக்காக!





No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!