Sunday 29 December 2013

கீச்சுக்கள்!











Photo: சோம்பலில் சுகம் கண்டோரை மாற்றுவதற்குப் பதில், தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துவிட்டு போய் விடலாம்! 
# ரொம்பக் கஷ்டமப்பா!
சோம்பலில் சுகம் கண்டோரை மாற்றுவதற்குப் பதில், தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துவிட்டு போய் விடலாம்!
# ரொம்பக் கஷ்டமப்பா!

------------------------------------------------------------
முன்பு போட்ட நிலைத்தகவலுக்கு எதிர்வினைப் போல, இருபுறம் என்பது போய், இன்று மொத்த சாலையும் முடக்கப்பட்டுவிட்டது, வெறும் கார்களை நிறுத்த வேண்டி!

இன்று ஒருவேளை எல்லோரும் வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தபட்டிருக்கலாம், அல்லது முன்பே வேறு எங்கேனும் சென்றிருக்கலாம், ஏதேனும் ஓர் அவசரத்திற்கு, ஓர் ஆம்புலன்ஸ் அந்த இடத்தைக் கடக்க முடியாது, நேரே சொர்க்கத்திற்குத் தான் செல்ல வேண்டும்!

#ஆள்பவருக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இருவேறு சட்டங்கள் இருக்கும்வரை நீதி என்பது குதிரைக் கொம்பே!

 
------------------------------------------------------------------------
அன்பிற்காகவும், கடமை ஆற்ற வேண்டியும் பல நேரம் நாம் இதை இழக்க வேண்டி இருக்கிறது, அப்போதெல்லாம் ஒன்றுதான் தோன்றுகிறது, இந்த உப்பு கம்பெனி விளம்பரங்கள் எல்லாம் பொய் சொல்லுகிறது யுவர் ஆனர்!
# இந்த சூடு கம் சுரணை மிஸ்ஸிங்!
feeling meh. 
-----------------------------------------
தவறு செய்வது என்பது இயல்பாகவும், தவறு செய்யவில்லை என்பது பெருத்த ஆச்சரியமாகவும் பார்க்கப்படுகிறது!
# சட்டத்தையும் மாற்ற வேண்டியதுதானே?!
feeling excited. 
-------------------------------------------------------------
ஒரு விஷயமாய் அலைந்து திரிந்த போது, ஏம்மா நீ நம்ம முருகேச..............பொண்ணுதானே? என்று சாதி பெயரையும் சேர்த்து ஒரு பெரியவர் கேட்க, ஆமாங்க முதல் பாதிப் பெயர் எங்கப்பாவோடதுதான், இரண்டாவது பாதி யாருன்னு தெரியலையே என்று, சிரித்துக் கொண்டே சொன்னவுடன்...பார்த்தாரே ஒரு பார்வை! அவருக்கு ஒரு நெற்றிக் கண் இருந்திருந்தால் எரித்திருப்பார் என்றே தோன்றியது! — feeling குறும்பு மற்றும் குசும்பு! சிக்கிடாண்டா கைப்புள்ள! :-).
--------------------------------------------------------------------------------
பெரிய ஷாப்பிங் மால்களில், அல்லது சிறிய கடைகளில், அல்லது நெடும் பயணம் மேற்கொள்ளும் தொடர்வண்டிகளில், வழியில் வரும் நிறுத்தங்களில்....என்று எங்கும் கழிவறை என்பது தேவை இல்லாத ஓர் இடமாகவே கருதப்பட்டு மிக மிகக் கேவலமாய்ப் பராமரிப்பில்லாமல் (கட்டண வசூலிப்புத் தவிர) இருக்கிறது...

கழிவை அகற்றும் இடம் சுத்தமாய் இல்லை என்றால், உண்மையில் பல்வேறு நோய்க் கிருமிகளை அல்லவா மனிதர்கள் சுமக்க நேரும்?

எத்தனை வனப்பென்றாலும், மனித உடலில் கழிவென்பது போகவில்லை என்றால், எல்லாம் குலைந்துப் போகும், கழிவறைகள் சுத்தமில்லாமல் இருந்தாலும், பிணிகள் உடலில் நிரந்தரமாய்க் குடிகொள்ளும்!

# வெளியிலும், வீட்டிலும் மற்ற அறைகளின் சுத்தம் போலவே கழிவறை சுத்தத்தையும் பேண வேண்டும்! பிற அறைகளை அலங்கரித்து, கழிவறையை விட்டுவிடுவது என்பது,குளித்துவிட்டு, அழுக்கான உள்ளாடையை அணிந்து கொண்டு மேலுக்குப் பகட்டான பட்டாடையை அணிந்துக் கொள்வதைப் போன்றது!
Photo: பெரிய ஷாப்பிங் மால்களில், அல்லது சிறிய கடைகளில், அல்லது நெடும் பயணம் மேற்கொள்ளும் தொடர்வண்டிகளில், வழியில் வரும் நிறுத்தங்களில்....என்று எங்கும் கழிவறை என்பது தேவை இல்லாத ஓர்  இடமாகவே கருதப்பட்டு மிக மிகக் கேவலமாய்ப் பராமரிப்பில்லாமல் (கட்டண வசூலிப்புத் தவிர) இருக்கிறது...

கழிவை அகற்றும் இடம் சுத்தமாய் இல்லை என்றால், உண்மையில் பல்வேறு நோய்க் கிருமிகளை அல்லவா மனிதர்கள் சுமக்க நேரும்? 

எத்தனை வனப்பென்றாலும், மனித உடலில் கழிவென்பது போகவில்லை என்றால், எல்லாம் குலைந்துப் போகும், கழிவறைகள் சுத்தமில்லாமல் இருந்தாலும், பிணிகள் உடலில் நிரந்தரமாய்க் குடிகொள்ளும்! 

# வெளியிலும், வீட்டிலும் மற்ற அறைகளின் சுத்தம் போலவே கழிவறை சுத்தத்தையும் பேண வேண்டும்! பிற அறைகளை அலங்கரித்து, கழிவறையை விட்டுவிடுவது என்பது,குளித்துவிட்டு, அழுக்கான உள்ளாடையை அணிந்து கொண்டு மேலுக்குப் பகட்டான பட்டாடையை அணிந்துக் கொள்வதைப் போன்றது! 
-----------------------------------------------------------------------------------
ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற அறிவிப்பு/சலுகைத் தாங்கி வரும் பெரும்பாலான பொருட்கள் யாவும், இரண்டின் விலையை ஒன்றில் தாங்கியே வருகிறது!
# வியாபாரத் தந்திரம்!
---------------------------------------------------------------------------------------------------
எப்போதும்
அந்திப்பொழுதில்
என்னையே சுற்றுவாய் - பின்
பொழுதுகளில் பேதமில்லாமல்
நானே உன்
உலகமாகிப் போனேன்
எனக்காக
நீ பாடும் இசை
யாருக்கும் கேட்காது,
எப்போதும் இரத்த தானம்
உன்னால் -
சிறகுகள் இருந்தும்
என்னையே சுற்றுவதேன்
கொசுவே?!
— feeling sad கொசுத்தொல்லை தாங்க முடியலை!
Photo: எப்போதும் 
அந்திப்பொழுதில் 
என்னையே சுற்றுவாய் - பின் 
பொழுதுகளில் பேதமில்லாமல் 
நானே உன் 
உலகமாகிப் போனேன் 
எனக்காக
நீ பாடும் இசை 
யாருக்கும் கேட்காது, 
எப்போதும் இரத்த தானம் 
உன்னால் - 
சிறகுகள் இருந்தும் 
என்னையே சுற்றுவதேன் 
கொசுவே?!
--------------------------------------------------------------------
சுட்டுவிடுவான் என்று தெரிந்தும் வெள்ளையனை வீரத்துடன் எதிர்த்தவர்களின் வாரிசுகளா (நாம்) இந்தியர்கள்?
#பணம், பதவி என்று சொன்னவுடன் நிறையப் பேரைக் காணோம், யார் காலில் யாரோ!
— feeling amused அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
-----------------------------------------------------------------------
ஓர் அரசு அலுவலகம், வரிசையில் மக்கள், கௌண்டரின் அருகே இரண்டு கண்காணிப்புக் காமெராக்கள்....ஒருவர் வருகிறார், "சார் நான் கிளம்பறேன்" என்று நகர, ஒரு கௌண்டரில் இருந்தவர் அவசரமாக இன்னொரு ஊழியரை அழைத்து, சென்றவர் பின்னே அனுப்புகிறார். விடைப்பெற்றுச் சென்றவர் மீண்டும் வருகிறார், ஒரு புத்தகத்தைக் கௌண்டரில் இருப்பவரிடம் கொடுத்து, "அப்புறம் படிங்க சார், நான் வரேன்!" என்கிறார்! மேட்டர் ஓவர்!

#2G, 3G எல்லாம் கடந்தாச்சு, யார்கிட்ட?! 
--------------------------------------------------------------------------------------------
எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஒருவருக்குக் கடைசியில் கிடைப்பதென்னவோ தனிமையும், ஏமாளி பட்டமும் தான்!
-------------------------------------------------------------------------------------
ஒருவரின் சோம்பலை இன்னொருவரின் உழைப்பு ஈடு செய்யும்!
------------------------------------------------------------------------------------
ஊக்கபடுத்தும் வார்த்தைகள் குழந்தைகளின் முகத்தையும், உலகத்தையும் இன்னும் சற்று அதிகமாகப் பிரகாசிக்கச் செய்கிறது!
Photo: ஊக்கபடுத்தும் வார்த்தைகள் குழந்தைகளின் முகத்தையும், உலகத்தையும் இன்னும் சற்று அதிகமாகப் பிரகாசிக்கச் செய்கிறது!   
----------------------------------------------------------------------------------------
"சரி, முதலில் நான்தானே அந்த ஐடியா சொன்னேன்....... "

"அடக் கேளேன்..... "

"சரி, நீ பேசினதை நான் கேட்டேன், இப்போ நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு ....ஒரே ஒரு நிமிஷம் பா...."

"ஐயோ, சரி, இன்னைக்குப் பேசினா சரியா இருக்காது, நீ கேட்க மாட்டே, நீ நாளைக்கு வா, நான் பேசுறேன்!"

நான்கரை வயது மகள் ஓர் எட்டு வயது தோழியுடன் யார் முதலில் விளையாடுவது என்ற விவாத்தில் கூறியதுதான் மேற்கூறியே வாக்கியங்கள்.....
அம்மாவிடத்தில் விட்டுகொடுக்காமல் குறும்பு செய்யும் குழந்தை, தோழியுடன் ஒரு பெரிய மனுஷத் தோரணையில் பேசும்போது புரிகிறது, இந்தக் காலக் குழந்தைகள் ரொம்பத் தெளிவாய் இருக்கிறார்கள்!
— feeling blessed. 
Photo: "சரி, முதலில் நான்தானே அந்த ஐடியா சொன்னேன்....... "

"அடக் கேளேன்..... "

"சரி, நீ பேசினதை நான் கேட்டேன், இப்போ நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு ....ஒரே ஒரு நிமிஷம் பா...." 

"ஐயோ, சரி, இன்னைக்குப் பேசினா சரியா இருக்காது, நீ கேட்க மாட்டே, நீ நாளைக்கு வா, நான் பேசுறேன்!" 

நான்கரை வயது மகள் ஓர் எட்டு வயது தோழியுடன் யார் முதலில் விளையாடுவது என்ற விவாத்தில் கூறியதுதான் மேற்கூறியே வாக்கியங்கள்.....
அம்மாவிடத்தில் விட்டுகொடுக்காமல் குறும்பு செய்யும் குழந்தை, தோழியுடன் ஒரு பெரிய மனுஷத் தோரணையில் பேசும்போது புரிகிறது, இந்தக் காலக் குழந்தைகள் ரொம்பத் தெளிவாய் இருக்கிறார்கள்!
 
 
 
 
 


1 comment:

  1. குதிரைக் கொம்பு உட்பட அனைத்தும் நல்ல கீச்சுக்கள்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!