Monday, 16 December 2013

நானும் ஓர் ஆடு!


அதிகாலை வெளிச்சம்
அந்திவேளையின் இருள்
சிறகடிக்கும் பறவை
சட்டென்று விழும்
ஒரு பனித்துளி

சுழன்றடிக்கும் காற்று
மழை ரசிக்கும் குழந்தை
முறைத்துப் பார்க்கும் காகம்
அசைபோடும் மாடு

பிச்சைக் கேட்கும்
கரங்கள்
கந்தலில் கலங்கடிக்கும்
வறுமை

பார்வையில்
தகித்திடும் வெற்றுக் காமம்
சாலையில்
சாய்ந்திடும் போதை
காகிதத்தில்
விலைப்போகும் நேர்மை 

அழகையும்
அவலத்தையும்
ரசித்தும் சகித்தும்,
வலி விழுங்கி
கடந்து செல்லும்
உயிருள்ள மந்தையில்
நானும் ஓர் ஆடு!

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!