Monday 23 December 2013

பூக்களைப் பறிக்காதீர்!


பிஞ்சை பறித்து
நஞ்சை வார்த்து
கொன்றுப் போட்டீர்!

இளமையில்
வறுமைத் தந்து -
தோல் கருக்கி
கந்தலில்
கலங்க விட்டீர்!

தாயிடமிருந்து பிரித்து
கண்களைக் குருடாக்கி
பிச்சையினைப் புசித்தீர்!

மலரை முகர்ந்து
பலருக்குத் தாரை வார்த்து
காமத்தை வளர்த்தீர்!

மதங்களை மதித்து
சாதியினைப் போற்றி
இளங்குருத்துக்களை
எரித்தீர்!

இனி,
காட்டில் வாழும்
புலிகள் கூடத் தோழனாகும்,
வெவ்வேறு பசிகளில்
பிள்ளைகள் தின்று
நாட்டில் திரியும் 
உங்களை என்ன செய்ய?

1 comment:

  1. பிள்ளைகள் தின்னும் நரபலி மனிதர்கள் நடுவில் நாமும் வாழ்கிறோம் என்பதைக் கேவலமாய் உணர்கிறேன்...--வலி மிகுந்த வரிகள்.

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!