Wednesday, 25 December 2013

கானல் நீரே

ஆற்றல் காணாத கோபமும்
கருணை மறந்த புன்னகையும்
அன்பில்லாமல் படைக்கும் உணவும்
கடமை ஆற்றாத உறவும்
ஈரம் இல்லாத பகையும்
காதலில்லாத காமமும்
நேர்மை இல்லாத அரசாங்கமும்
சோம்பிக் கிடக்கும் உடலும்
வானம் பொய்த்த பூமியும்
அரவணைக்காத தாய்மையும்
காத்து நிற்காத ஆண்மையும்
தோள் கொடுக்காத நட்பும்
வறண்ட பாலையில் தோன்றும்
கானல் நீரே, - இருந்தும்
இல்லாதது போலவே!
வாழ்வதற்காக வாழ்கிறது
மானுடம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!