Monday, 23 December 2013

வருத்தம்!


வெளிப்படுத்தி
இருந்திருக்கலாம்
அவ்வன்பினை
என்னிறுதி என்றே
தெரிந்திருந்தால்

உணர்த்தாது
இருந்திருக்கலாம்
அத்தவறினை
அவனிருதி என்றே 
நான் அறிந்திருந்தால்

இருப்பின் வேண்டுதல்
இல்லாததிலும்
வாழ்வின் தேடல்
முற்றுப்புள்ளியிலும்
என - பெரும் 
காட்சிப் பிழைகளிலும் 
மன மயக்கங்களிலும்
உழன்று நோகுமன்றோ
இவ்வாழ்வு!

1 comment:

  1. சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் எல்லாமே நடந்தேறி விடுகிறது....

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!