Monday 20 February 2023

வாழ்தலின் நொடிகள்

 

மனிதர்கள் வருகிறார்கள்
மறைகிறார்கள்
புத்தாண்டும் வருகிறது
மறைகிறது
வாழ்தலின் நொடிகள்
மட்டுமே
நம் கைகளில்!
❤️

No photo description available.

தட்_பிரதமர்

 

க.மணி: “டேய் நாம எடுக்கிற அடுத்தப்படத்திலே நீதான் பிரதமர், சீன் சொல்றேன் கேட்டுக்க”
செ: “அட இருங்கண்ணே நானே சொல்றேன், வேளைக்கு ஒரு ட்ரஸ்ஸூ, ஊரெல்லாம் சுத்திப்பார்க்குறேன், மேடையில மட்டும் இருபதடி தூரத்திலேயே நின்னு பேசுறேன், யாரு கழுவி ஊத்தினாலும் நம்ம தாத்தாவுக்கு தாத்தாத்தான் காரணம்ன்னு சொல்றேன், பெரிய்யாஆஆ பணக்காரங்க கூட மட்டும் டின்னர் சாப்பிடுறேன், நம்ம ஊர்ல அரசாங்கத்தால யார் செத்தாலும் கண்டுக்காம வெளிநாட்டுல யாராவது செத்த இரங்கல் செய்தி சொல்றேன், அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம்ண்ணே எப்பவும் புல் மேக்கப்புல தான் வெளியே வருவேன் நம்ம சுத்தி இந்த போட்டோ மட்டும் புடுக்கிறவங்க நிறைய இருக்கணும், கரெக்டாண்ணே?!
க.மணி: “ஆளாளுக்கு டைரக்டர் ஆனா எப்படிடா நான் படமே எடுக்கல போங்கடா!”

Respond

 No photo description available.

மாறும்

 No photo description available.

வேண்டும்

 No photo description available.

ஆன்ட்டி_இந்தியன்

 

நிருபர்: கருப்புபணத்தை உங்கள் கட்சி ஒழித்துவிட்டதா?
அதிபர்: ஆம் ஒழித்துவிட்டது, மெல்லிய பச்சை, நீல நிறத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை தவறுதலாக கருப்பு என்று சொல்லிவிட்டோம், ஆனால் ஊதா, இளஞ்சிவப்பு, ப்ளூ, ப்ரவுன் என்று பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்திருக்கிறோம்!
நி: 😩வாராக்கடன்கள் அதிகரித்துவிட்டதே?
அ: உண்மை, கடனை திருப்பிக்கொடுக்காமல் இருந்தவர்களை இனி “வராதே” என்று நாட்டை விட்டு துரத்திவிட்டோம், அதனால் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, இனி வரவே வராதே என்று சொல்லிவிட்டபடியால் சீர் செய்யப்பட்டுவிட்டது!
நி: 😓 எல்லோரையும் வங்கிக்கணக்கு தொடங்கச்செய்து, பின்பு அவர்களின் குறைந்த சேமிப்பையும், வங்கி கணக்கில் “மினிமம் பேலன்ஸ்” இல்லை என்று வங்கிகள் சுருட்டியது பற்றி?
அ: 60 ஆண்டுகால ஆட்சியில் நாடு மோசமாகிவிட்டது, ஏழைகளின் பணம் போய்விட்டதன் வலி ஒரு ஏழைத்தாயின் மகனுக்குத்தான் தெரியும்!
நி: யார் அது? 🤔
அ: நான்தான்
நி: 😱 ஏழைகளின் நாட்டின் அதிபராகிய ஏழைத்தாயின் மகனான நீங்கள் 4000 கோடியை பயணத்துக்காக செலவழித்தது பற்றி?
அ: அது நாடுகளின் நட்புறவுக்காக
நி: 😰அப்போது ரீனா நாடு ஏன் கருணாச்சலத்தில் ரோடு போட்டது?
அ: எல்லையில் பயங்கரவாதம் நீங்க எங்கள் ஆட்சியில் எல்லாம் சரிசெய்யப்படும்
நி: 🤭நீங்கள்தானே இப்போது ஆட்சியில்?
அ: நான் நாட்டின் சோக்கிதார்...
நி: 🙄ஆனால் நான் கேட்டது?
அதிபர் புகைப்பட கருவி நோக்கி புன்னகைக்க, இரண்டு பேர் நிருபரை குண்டுகட்டாய் தூக்கி வெளியே எறிகிறார்கள்!
#ஆன்ட்டி_இந்தியன் என்று நிருபரை சூழ்ந்துக்கொண்டு மங்கீஸ் முழங்க, நிருபர் ராஜினாமா செய்கிறார்! 😐
சுபம்!

கீச்சுக்கள்

 

 

சுயநலவாதிகளை கடந்து மனம் கடினப்பட்டு விடும்போது கண்ணீரும் வருவதில்லை, எதிர்ப்பார்ப்புகளும் இல்லை, காலப்போக்கில் வார்த்தைகள் குறைந்து ஓர் ஆழ்ந்த அமைதிக்குள் மூழ்கிவிடுகிறது இந்த வாழ்க்கை!

 ---------

அன்பு, கருணை, அரவணைப்பை யாருக்கும் கொடுக்கலாம் ஆனால் அதை எல்லாம் யாரிடமும் எதிர்ப்பார்க்காமல் நமக்கு நாமே நேசித்தலே வாழ்க்கையை எப்படியோ சமன் செய்து நகர்த்த உதவும், அதுவே தற்கால எதார்த்தம்!

சுயநலவாதி


அன்புள்ள அடிமை

 

“அன்புள்ள அடிமைக்கு உன் தலைவனின் கடிதம், படித்தப்பின் நீ ஒன்றும் கிழிக்க வேண்டாம், நீ இருப்பது போலவே அவ்வப்போது வெறுப்பு அறிக்கைகளை விட்டுக்கொண்டும், வாய்க்கு வந்தப் பொய்களை பரப்பியும் தலைமைக்கு உண்மையாய் இரு!”
 
“நீ படிக்காமல் இருத்தல் நலம், ஒரளவு படிக்க தெரிந்தால் போதும், நீ கூலியாக உழைக்க பிற மாநிலங்களுக்கு போ, அங்கேயும் பெரிய காண்டரக்டுகளை நான் கம்பானி, கதானி தகர்வால் வகையறாக்களுக்குத்தான் கொடுத்திருக்கிறேன், நீ ரயிலில் புளி மூட்டையைப் போல் அடைந்து டிக்கெட் இல்லாமல் பயணிக்கலாம், கண்டுக்கொள்ள மாட்டார்கள், போகும் மாநிலத்தில் மொழி பிரச்சனை வராது, ஏற்கனவே உன் தாய்மொழியை அழித்து உனக்கு இந்தியை புகட்டிய மாதிரி பிற மாநிலங்களிலும் இந்தியை திணித்து உனக்கு உதவி செய்கிறோம், உன்னைப்போலவே மொழிப்பற்று இல்லாத பலகோடி சங்கிகளை நான் உருவாக்கி வைத்திருக்கிறேன், அவர்கள் உனக்காக இந்தியில் பேசுவார்கள், உணவுக்காக கவலைப்பட வேண்டாம், உனக்காக ஒரே ரேஷன் என்று செயல்படுத்தியிருக்கேன், எங்கே போனாலும் உனக்கு கோதுமையும் புழுத்துப்போன அரிசியும் கிடைக்கும், நீ அதை உண்டு மகிழ்ந்திரு!”
 
“நீ கொலைக்குற்றங்கள் செய்யலாம், தப்பிப்பது உன் திறமை, உன் அடுத்த தலைமுறை கல்வியைப் பற்றி நீ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஒருவேளை எப்படியோ நீ பணக்காரன் ஆனால் உன் பிள்ளைகளை நம் தொழிலதிபர்களின் கோச்சிங் சென்டரில் சேர்த்து, பரீட்சை எழுத வைத்தோ வைக்காமலோ செலவு செய்து கல்விக்கொடுக்கலாம், நீ கூலியாகவே இருந்தால் உன் பிள்ளைகளும் நடோடிகளாகவே திரியலாம், எங்கே போனாலும் நீ மறுபேச்சில்லாமல் எங்களுக்கே ஓட்டுப்போட வேண்டும், இல்லையென்றால் நாங்களே போட்டுக்கொள்வோம், கூடிய விரைவில் இது எதுவுமே தேவையில்லை என்று நானே ராஜாவாக என்னை அறிவித்துக்கொள்வேன், அதற்கு முன்னேற்பாடாக வரி, கல்வி, தொழில் என்று மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் பறித்துக்கொள்வேன்!”
 
“வறட்சி, வெள்ளம் பற்றிய கவலையில்லை, எங்கே உன்னால் பிழைக்க முடியுமோ அங்கே போ, போகும் வழியில் செத்தால் அது உன் கவலை, நீயாக சுடுகாட்டிற்கு சென்று படுத்துக்கொள் இன்னும் அதற்குத்தான் நாங்கள் வரிப்போடவில்லை, ரொம்பவும் கஷ்டமாயிருந்தால் ஜெய் பராம் என்று சொல்லிக்கொள், நாங்களும் அவரை வைத்துத்தான் அரசியல் செய்கிறோம், எங்கள் அரசியல் போக நேரமிருந்தால் அவர் உனக்கு கருணை காட்டட்டும், இத்தனை செய்யும் நானே உனக்கு 56 இன்ச் மார்பழகன், உன் காவலாளி, உன் தலைவன், நீ சோர்வடையும் போதெல்லாம் நீ என் பங்கீ பாத் உரையை கேள், மோட்சமடைவாய், எப்போதும் நாமெல்லாம் கிந்துக்கள் என்பதை நீ மறவாதே, நீ பசியில் துடிதுடித்து செத்தாலும் எல்லையில் படைவீரர்கள் இருப்பதை மறக்காதே, இந்த நாட்டில் தாங்கிரஸ் உருவாக்கிய கட்டமைப்பு அத்தனையும் நாங்கள் விற்றுத்தின்றாலும், ஆட்சி எங்களிடம் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் காரணம் தாங்கிரஸ்தான் என்பதை மறக்காதே!”
 

அவரவர் விருப்பம்

 No photo description available.

மருந்து

 May be an image of text that says 'உடைந்து நொறுங்கி போனாலும் சிதறல்களை பொறுக்கி சேர்த்து வைத்து திடமாக்கப்பட்ட சிறகில் மீண்டும் பறப்பேன் சோதனைகள் தரும் காலமே மீண்டு எழ வைக்கும் மருந்து! -Amudha Your uote.in'

அமைதியின் வாசம்

 May be an image of text that says 'அமைதியின் வாசம் பூக்களின் மணங்களில் மண்வாசனை தரும் மழையில் ஊர் உறங்கும் நேங்களில் ஆர்ப்பாட்டதுடன் சிலிர்த்து எழுகிறது! -Amudha 如 YourQuote.in uote.in'

கடந்து போகும்

 May be an image of text that says 'இன்னும் தீரவில்லை தூய அன்பின் தேடல்கள் இன்னும் தேயவில்லை ஏமாற்றங்களின் காட்சிகள் இன்னும் மறையவில்லை காயங்களின் வடுக்கள் இன்னும் காணவில்லை நம்பிக்கையின் கரங்கள் ஆனாலும் லும் மலர்ந்து சிரிக்கின்றது வாழ்க்கை இதுவும் கடந்து போகுமென! Amudha YourQuote.in'

நரகத்தின்_கட்டமைப்பு

கதிர்வீச்சின் வெம்மையில்
குருவிகள் காணாமல் போனது
வாய்க்கால்கள் சாக்கடையானதில்
தவளைகள் இல்லாமல் ஆனது
இரையே அருகிப்போனதில்
பாம்புகளும் அருகிவிட்டது
மின்சார வேலிகளில்
யானைகளும் மரித்துப்போனது
வண்ணமயமான சிட்டுக்குருவிகள்
கூண்டுகளுக்குள் அடைப்பட்டது
பேசும் கிளிகள் பேசுவதனாலேயே
மனிதர்களிடம் சிறைப்பட்டது
பூச்சிக்கொல்லிகளில்
புழுக்களும் மக்கிப்போனது
கடைகளின் இனிப்புப்பண்டங்களில் கூட
எறும்புகள் தள்ளிப்போனது
பிற உயிர்களை அழித்து
தமக்கென வடிவமைத்துக்கொள்ளும்
உலகத்தை நகரமென்றும் நாடென்றும்
மனிதர்கள் இப்படித்தான்
அறிவித்துக்கொல்(ள்)கிறார்கள்!

No photo description available.

அன்பு

 

விரல் முனையில்
தட்டச்சப்படும் வார்த்தைகளில்
உயிர்ப்பில்லை
கைபேசி வழியில்
கடத்தப்படும் மொழிகளில்
அன்பில்லை
நேரில் நலம் கேட்கும்
பார்வைகளில் கருணையில்லை
வலிகள் தந்த சூழ்நிலைகளில்
வந்த காயச்சுவடுகள்
நினைவிலில்லை
இருண்டு கிடக்கும் வெற்றிடத்தில்
ஒளியேற்றும்
எண்ணமுமில்லை
இருந்தும் என்ன
அவர்களிடத்தில் இல்லாததை
இங்கேயிருந்து எடுத்துச்செல்லட்டும்
என்று எப்போதும்
சிலர் புன்னகைக்கிறார்கள்!

பக்தி

அவரவர் மதங்களின்
கடவுளரின் ஊர்வலம் வருகிறது
மக்கள் கூட்டத்தில்
எல்லோரும்
கடவுளை நெருங்கிவிட
முயல்கின்றனர்
உடலளவில் நெருங்கி
கடவுளையோ தேரையோ
தொட்டுவிட நினைக்கும்
மனிதர்களின்
மனங்களை விட்டு
தூர செல்கிறார்கள் கடவுளர்கள்
கடவுளுக்கு கிட்டப்பார்வையென்று
இன்னும் நெருக்கி கொள்(ல்)கிறார்கள்
பக்தர்கள்!

 

No photo description available.

உதிர்ந்த சொல்

 May be an image of text that says 'உதிர்ந்த சொல் உதிர்ந்ததுதான் நீ ஒரு மன்னிப்பையோ ஆற்றுப்படுத்தும் அன்பையோ வெளியிடாமல் மேலும் மேலும் இறுக்கும்போது உடைந்த இதயம் உடைந்ததுதான்! -Amudha YourQuote.in'

ஓரவஞ்சனை

 May be an image of text that says 'Your uote.in உன் நினைவே ஆறுதலும் வேதனையும் இனிப்பையும் கசப்பையும் இணைத்தே வழங்குவது வாழ்க்கையும் நீயும் எனினும் உனக்கு கசப்பை நான் தந்ததேயில்லை கடவுளின் ஒரவஞ்சனை போல எப்போதும்! -Amudha'

Pride

 May be an image of text that says 'In the war between One's self dignity and reality The self pride commits suicide In the modern world! #Needs -Amudha Youruote.in'

மயில் தோகை போல்

 May be an image of text that says 'மயில் தோகை போல மனதை வருடுகிறாய் வானவில்லை போல் கண்கள் நிறைக்கிறாய் சோர்ந்து போகையில் நம்பிக்கை தருகிறாய் இந்தச் சிறிய வாழ்க்கையில் வாழ்வதற்கான ஆசானாகிறாய் உன்னை நாயென்றும் பூனையென்றும் உரைக்காமல் தோழென்றும் தோழியென்றும் நிறைவு செய்கிறேன்! Amudha YourQuote.in'

ஆணிவேர்_ஆட்டம்

 

இராவணனிடமிருந்து மீண்டபின்
சந்தேகித்த ராமனை விட்டு
ஒரு சோமனை மணந்தாள்
 
ஆடலரசியின் பின்னே
கோவலன் செல்ல
உதவாதவனுக்காக ஊரையெரிப்பது
வெட்டிவேலையென்று
மேலே படிக்க
அப்பன் வீடு சென்றாள்
 
நடுஇரவில் ஞானம் வேண்டி
விட்டுச்சென்ற சித்தார்த்தனை
தேடிப்பிடித்து மகன் ரகுலனை அவனிடம் ஒப்படைத்து
தேசாந்தரம் சென்றாள்
 
குடித்துவிட்டு கும்மாளமிட்ட
கணவனை வெட்டிவிட்டு
சிறைசென்றாள்
 
ஒருதலைக்காதலால்
தொல்லைக்கொடுத்தவன் மீது
ஆசிட் ஊற்றினாள்
கல்லூரி சென்ற
 
இப்படி பகீரென்று வந்த
காட்சிகளில் “ஒழுக்கம்” கெட்டுவிட்டதாக புலம்பி,
நாடு நாசமானதாக துடித்தது
இந்திய ஆண்சமூகம்!

செதுக்கி நிமிர்தல்

மனித உறவுகள் தரும்
வலிகளையும் வேதனைகளையும் கொண்டு
ஒன்று முறிந்தும் போகலாம்
அல்லது எழுந்தும் நிற்கலாம்
பிறர் கருணைக்கும் முடிவுக்கும்
விட்டுவிட்டால்
அது மரணம்
நம்மையே நாம்
செதுக்கி நிமிர்ந்தால் மட்டுமே
அது நம் வாழ்க்கை!

 

அறியாமை

 May be an image of text that says 'எதையோ நினைத்து எதையோ பேசி எதையோ உணர்ந்து எதையோ இழந்து பேசி தீர்த்துவிடாமல் உணராமலே உணர்ந்ததாய் எண்ணி உறவு முறித்து விலகிப்போகிறோம்! Amudha ×E MMM Your uote.in'

அறிகுறி

 May be an image of text that says 'Your YourQuote.in uote.in ஓரிடத்தில் நாம் இனி தேவையில்லை என்பதன் அறிகுறியே அலட்சியம் உணர்ந்து விலகும்போது அவமதிப்பு தவிர்க்கப்படலாம்! -Amudha'

மௌனத்தின் பொழுதுகள்

 May be an image of sky and text that says 'மௌனம் தழுவிய காலையில் சத்தமாய் சிறகடிக்கிறது பறவைகள் மகிழ்ச்சி சிறகுகளில் இருக்கிறது என்று பரிகசிக்கிறது என் மௌனத்தின் பொழுதுகள்! Amudha YourQuote.in uote.in'

தன்னம்பிக்கை

 May be an image of sky and text that says 'யாரும் உதவாத போது கண்ணாடியைப் கண்ணா பாருங்கள் அங்கே உங்கள் நம்பிக்கை தெரியும்! -Amudha YourQuote.in'

நட்பு

 May be an image of text that says 'Your uote.in மிகவும் அரிதானது மனம் பார்த்து மனம் நோகா கரம் பிடித்து தோள் கொடுத்து எச்சூழலிலும் விட்டுவிலகா இறுதிவரை நேசிக்கும் நட்பு! -Amudha'

அச்சம்

 May be an image of sky, tree and text that says 'அச்சம் என்பதெல்லாம் வாழ்க்கையின் மீது கொண்டிருக்கும் அபரிமிதமான பிடிப்பு அற்றுவிழும் வரைதான்! -Amudha YourQuote.in uote.in'

குளிரட்டும் பூமி

 May be an image of 1 person and text that says 'நினைவுகளை கிளறிச் சென்றாய் ஏனோ மேகம் சூழ்ந்தது போல இருண்டு கிடக்கிறது மனது மழைத்தூறலாக வந்துவிடேன் கொஞ்சம் குளிரட்டும் பூமி! -Amudha Vα Youruote.in'

அலப்பறைகள்


அவசர ஊர்திகளை விட
அதிகமாய் ஒலிப்பான்களை அலறவிட்டு
விரைகின்றன
கட்சிக்கொடிகளைக்
கட்டிக்கொண்ட வாகனங்கள்
விரையும் வேகத்துக்கு
மக்கள் பணிகள் நிறையுமோ
என்று நோக்கினால்
அதே குண்டும் குழியுமான சாலைகள்தான்
ஆனால் சீறும் அந்த வாகனங்களோ
உயர்தரமான மகிழுந்துகள்! 😉

 

May be an image of 1 person, car, street, road, tree and sky

தோழமை

 

எங்கேயோ நிற்கிறாய்
திக்கு தெரியாமல் தவிக்கிறாய்
யார் யாரையோ உறவென்றாய்
எவர் எவரையோ நட்பென்றாய்
காற்று வீசும்போது
கலைந்திடும் மேகம் போல
மோகம் தீர்ந்ததும்
விலகும் காதல் போல
தேவை தீர்ந்ததும்
பறந்திடும் உறவுக் காகிதங்கள்
இதில் உண்மைத்தேடி
நீயும் தவிப்பதென்ன?
பொய் பிம்பங்களை நாடி
நாளும் களைப்பதென்ன?
மழைநாளில் மின்னும் வானவில்
காணாமல் போகும் கோடையில்
எதற்காகவோ இந்தச் சோகம்
தீருமோ மனதின் தாகம்
வண்ணத்துப்பூச்சி வாழ்க்கையில்
உணர்வுகளின் தேடலில்லை
கடமைகளை கடக்கையில்
தேடல்களில் அர்த்தமில்லை
மழைத்துளியை பருகிவிடு
வெப்பக்கதிரில் கரைந்துவிடு
மனங்களை கடந்துவிடு
அன்பினை மட்டும் தந்துவிடு
மலரும் பூப்போல வாழ்ந்துவிடு
விழும்போது ஆசையும் விடு
மெல்லத் தணியட்டுமே பூமி
சுமைகளை விட்டுவிடு!
எங்கேயும் நிற்காதே
திசையின்றி் தவிக்காதே
உறவெல்லாம் உறவல்ல
இரவுகள் எல்லாம் இருட்டல்ல
நீயே உந்தன் நம்பிக்கை
வாழ்ந்து கடக்கவே வாழ்க்கை!

 

May be an image of 1 person, outdoors and text

Life

May be an image of text that says 'saw a dead butterfly lying on the road Yet again I was reminded of the life left To live and love! -Amudha Your uote.in'

விட்டுச் செல்லலாம்

 May be an image of text that says 'uote.in விட்டுச் செல்கிறாய் மனதளவில் நெடுந்தூரம் மற்றுமொரு போலி முகமென்றே சலித்துக் கொள்கிறேன் அன்பெல்லாம் கானல்நீரே பயணத்தில் கூட அது தாகம் தீர்ப்பதில்லை பெருமழையும் நீயில்லை சுமக்க முடியா மேகம் சட்டென்று தெளித்துவிட்டு சென்றதை ஊற்றுநீரென்று உவகை கொண்டது என் மாயையே பாடம் கற்றுத்தரும் பயணத்தில் மரமாக நின்றிட மாட்டேன் நதியாக கடலையும் கடப்பேன் விட்டுச்செல்லலாம்! -Amudha'

குருட்டுப்பூனைகள்

 

அவர்கள் வியாபாரம் செய்ய வந்தார்கள்
இவர்கள் முழுக்கவே வியாபாரிகள்
 
அவர்கள் நம் நாட்டைச் சுரண்டினார்கள்
இவர்களும் பொதுத்துறைகளை விற்று
தனியார் கடன்களை தள்ளுபடி செய்து
அதையே செய்துக்கொண்டிருக்கிறார்கள்
 
அவர்கள் பிரிவினைகளை வளர்த்தார்கள்
இவர்கள் பிரிவினைகளில்தான் செழிக்கிறார்கள்
அவர்கள் கொத்துக்கொத்தாக 
மக்களை கொன்றார்கள்
இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக
உதவாத திட்டங்களின் மூலம்
பிரிவினை அரசியல் மூலம் 
மக்களை கொல்கிறார்கள்
 
அவர்கள் வரலாற்றில் கொஞ்சமே கொஞ்சம்
அறிவுடன் செயல்பட்டார்கள்
இவர்கள் மறைகழண்ட அறிவோடு 
நிறைய ஆணவத்தோடு 
நாளும் வரலாற்றை திரிக்கிறார்கள்
 
அவர்களின் அரசி பெண்
பெண்ணுரிமை பேணினார்கள்
இவர்கள் தலைமை நடிகர்கள்
நாளும் வன்கொடுமைகளை மறைத்து
பாலியல் குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறார்கள்
 
அவர்கள் சுயநலத்துக்கேனும் நாட்டின்
கட்டமைப்பை பலப்படுத்தினார்கள்
இவர்கள் வியாபாரிகளின் சுயநலத்துக்காக
இருக்கும் வளங்களை 
அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
 
அவர்களிடமும்
இந்த நாட்டின் எட்டப்பன்கள் கட்சி மாறி
மதம் மாறி கொள்கை மாறி
பிறர் ரத்தத்தை உறிஞ்சினார்கள்
இவர்களிடமும் மாநிலத்துக்கு மாநிலம்
எட்டப்பன்கள் பதவிக்காக பணத்திற்காக
பல்லிளிக்கிறார்கள் 
 
சொந்த மண்ணின் மொழி, உரிமை
அழிக்கிறார்கள்
அவர்கள் மொத்தமாய் சுரண்டி 
ஓடிவிட்டார்கள்
இவர்கள் மொத்தமாய் சுருட்டிக்கொண்டு
நம்மை தேச விரோதி என்று விரட்டுகிறார்கள்
 
அவர்களும் கொள்ளையர்கள்தான்
இவர்களும் கொடூரர்கள்தான்
அவர்களிடமிருந்து விடுபட 200 ஆண்டுகளானது
இவர்களிடமிருந்து விடுபட 
சூடும் சுரணையும் மிகும் ஆண்டு வரவேண்டும்
 
எதை வேண்டுமானாலும் செய்
எனக்கு பதவியைக் கொடு என்று அடிபணிகிறார்கள்
சாதித்தலைமைகள் மதப்போர்வையில்
இவர்களை நம்பும் மக்களோ
உரிமைகளை பறிகொடுத்து ஒரு கேடுகெட்ட வரலாற்றை
வருங்காலத்திற்காக விட்டு வைக்கிறார்கள்
அவர்களும் இவர்களும் யாரென்று உலகுக்குத் தெரியும்
ஆனாலும் குருட்டுப்பூனைகளாய் மக்கள்
விடியல் வரும் காலமே உண்மையானச் சுதந்திரம்!

ஒரு_மொழி_அழிப்பின்_பின்னே_உள்ள_அரசியல்

 

வடக்கில் அவரவரின் தாய்மொழியை அழித்து, ஆங்கிலம் மறுத்து இந்தியை திணித்து, பிழைப்பைக்கெடுத்து, கல்வியை எட்டாக்கனியாக்கியதால், தெற்கில் பிழைப்புத்தேடி குவியுது கூட்டம், வடக்கில் சொன்ன பொய்களைப் போல் தெற்கிலும் சொல்ல இந்தி தேவைப்படுகிறது, ஏற்கனவே மூளை மழுங்கிய இந்திக்கூட்டம் இங்கே வாழ ஒரே ரேஷன் தேவைப்படுகிறது, தெற்கு மூளையை மழுங்கடிக்க ஆங்கில மறுப்பு தேவைப்படுகிறது, இருக்கும் கொஞ்ச நஞ்ச சூடு சுரணையை அழிக்க தாய்மொழி அழிப்பு தேவைப்படுகிறது, இத்தனையும் முடித்தப்பிறகு, “ஒன் நேஷன் வொய் எலெக்‌ஷன்?” (One nation why election?) என்று சட்டமும் இயற்றிக்கொள்ளலாம், மொத்தத்தில் ஆங்கிலேய அடிமைத்தனத்துக்கு பிறகு, ஒரு மாநில வியாபாரிகளின் ஏகாதிபத்தியம் நிலவுகிறது, அதை நிலைபெற வைக்கவே சில ஏஜேண்டுகள் பதவிகள் கொடுத்து அலங்கரிக்கப்படுகிறார்கள்

தொடர்கதை காட்சிகள்

 May be an image of 2 people and text that says 'நினைக்கும் போதெல்லாம் எப்படியாவது மறக்கவேண்டும் என்றே தோன்றுகிறது அஞ்சலி செலுத்திய மரணங்களை! அற்பமானதே வாழ்வு ஆனாலும் வாழாமல் வாழ விடாமல் நிமிடத்திற்கொரு மரணத்தை வாழும்போதே தந்துவிட்டு இறுதியாக மரித்தப்பின் வாழ்ந்திருக்கலாம் வாழ வைத்திருக்கலாமென்று மனம் கசங்குகிறோம் பிறகு மறந்தும் போகிறோம் தொடர்கதையாகிறது காட்சிகள்! 1 -Amudha Your YourQuote.in'

அக்கரைப்பச்சை

 May be an image of text that says 'எதிர்பாராமல் கிடைத்தது எல்லாம் எதையோ எதிர்ப்பார்த்து ஏமாற்றம் தந்து/ கொண்டு விலகுகிறது மழையில் வெயிலையும் வேனலில் மழையையும் எதிர்ப்பார்க்கும் மனதிற்கு எதற்கும் மகிழ்ந்து நன்றி பாராட்டும் பழக்கமில்லை அது எப்போதும் தூர இருக்கும் காட்சியையே சியையே வரம் என்கிறது! -Amudha'

குப்பைத்தொட்டிகள்

 May be an image of one or more people and text that says 'அதிகம் நேசிக்கும் எப்போதும் தோள்கொடுக்கும் அன்பால் அரவணைக்கும் துயரத்தில் உடனிருக்கும் கணக்கில்லாமல் செலவழிக்கும் தவறுகளை மறந்துவிடும் ஏதோ ஒரு உறவாக தாங்கும் அந்த உயிர்தான் அதிக காயப்படும் அவமானப்படுத்தப்படும் உதாசீனப்படுத்தப்படும் சுயநல மனிதர்களுக்கு இப்படிப்பட்ட உறவுகள் எல்லாம் அவர்களின் தனிப்பட்ட குப்பைத்தொட்டிகள்! Amudha YourQuote.in'

சில மருத்துவ சம்பவங்கள்

 

சில மருத்துவ சம்பவங்கள்;
 
ஒரு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, ஒரு பெரிய குழந்தைகள் நல மருத்துவமனை, ஒரு மருத்துவர் குழந்தைக்கு மருந்துகள் பரிந்துரை செய்கிறார், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு நிற்கவில்லை, உடனே எம் ஆர் ஐ, ஸ்கேன், எக்ஸ் ரே, இன்ன பிற பரிசோதனைகள் நடக்கிறது, மேலும் ஒரு வாரம் கடக்க, இப்போது இரண்டு மருத்துவர்கள் சேர்ந்து கொள்கிறார்கள், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து, அறுவை சிகிச்சை வரை முறைகள் பேசி, குழந்தையின் பெற்றவரை பயமுறுத்துகிறார்கள், பெற்றவர்களுக்கு சந்தேகம் வர, நண்பர்களின் பரிந்துரை பேரில் வேறு ஒரு குழந்தைகள் நல மருத்துவரை சந்திக்கிறார்கள், அவர் ஆய்வு கூட முடிவுகளை பார்த்து, அதில் என்ன பிரச்சனை என்று விளக்கி, ஒரு சாதாரண ஆன்டி பையோட்டிக் கொடுத்து குழந்தையின் பிரச்னையை இரண்டு நாட்களில் சரிசெய்கிறார், குழந்தை நலம்! 
 
மீண்டும் அதே மருத்துவமனை, எட்டு வயது பெண் குழந்தையின் பிறப்பு உறுப்பு சேர்ந்து கொள்கிறது, அடைப்பு ஏற்படுகிறது, மருத்துவர்கள் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள், குழந்தையின் தந்தை, நண்பர்களின் பரிந்துரை பேரில் வேறு ஒரு மருத்துவரிடம், வேறு ஒரு மருத்துவமனையில் காண்பிக்கிறார், அந்த குழந்தை நல மருத்துவர், அந்த குழந்தையின் பிரச்னையை ஒரு சாதாரண மருந்தின் மூலமும், சில பல இயற்கை வழிமுறைகளின் மூலமும், நாலு நாட்களில் அறுவை சிகிச்சையின்றி சரி செய்கிறார். 
 
வேறு ஒரு பகுதியில் வேறு ஒரு தனியார் கிளினிக், ஒரு வயது குழந்தைக்கு சளி இருமல் என்று அம்மா அழைத்துச் செல்கிறார், மருத்துவர் குழந்தைக்கு ஆஸ்துமா, வாழ்க்கை முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும் என்று பரிந்துரை செய்கிறார், அம்மா வேறு ஒரு மருத்துவரிடம் செல்கிறார், மருத்துவர் இது ஒரு சாதாரண சளி காய்ச்சல் என்று மருந்து தந்து குழந்தையின் உடல்நிலையை சரிசெய்கிறார். 
 
வேறு ஒரு பகுதியில் வேறு ஒரு மருத்துவமனை, 12 வயது பெண் குழந்தை பள்ளியில் நடக்கும்போது வழுக்கி விழ, கையில் எலும்பு முறிவு. பள்ளி நிர்வாகம் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள், புகழ் பெற்ற ஒரு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர், உடனடியாக குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்ல, குழந்தையின் தாய் குழந்தை எப்படியாவது சரியாக வேண்டும் என்ற மனநிலையில் நிற்க, தந்தை மருத்துவரிடம் நேரம் கேட்கிறார், வேறு ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க, அவர், "சிறு குழந்தை, ஒரு எம் ஆர் ஐ எடுத்து விட்டு, ஒரு கட்டு போட்டால் சேர்ந்து விடும் பிறகு பிசியோதெரபி செய்து கொள்ளலாம்", என்கிறார், அதன்படியே குழந்தைக்கு அறுவை சிகிச்சையின்றி கை சரியாகிறது. 
 
வேறு ஒரு புகழ் பெற்ற எலும்பு சிகிச்சை நிபுணர், கால்வலி என்று ஒருவர் வர, இரண்டு மூட்டுகளிலும் தேய்மானம், உடனடியாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார், செய்யவில்லை என்றால் நீங்கள் நடக்கவே முடியாது என்கிறார், சிகிச்சைக்கு வந்தவர் பிசியோதெரபி செய்து பிரச்னையை சரி செய்து கொள்கிறார், எந்த அறுவை சிகிச்சையும் இன்றி சிறப்பாக எப்போதும் போல் இயங்குகிறார். 
 
வேறு ஒரு மருத்துவர், குழந்தைக்கு சளி காய்ச்சல் என்று அழைத்துச்செல்ல, குழந்தைக்கு என்ன வென்று சொல்லாமேலேயே, குழந்தைக்கு டி பி மருந்துகளை மாத கணக்கில் பரிந்துரை செய்கிறார், பிறகு சில மாதங்கள் குழந்தைக்கு அந்த மருந்தை கொடுக்கிறார்கள், குழந்தையின் உடல் நிறம் மாறி உபாதைகள் ஏற்படுகிறது, மருந்து தீர்ந்து, கடையை நாட, அவர் இது டி பி மருந்து என்கிறார், பிறகு வேறு ஒரு மருத்துவரை நாட, சாதாரண மருந்தில் சளி சரியாகிறது. 
 
வேறு ஒரு தனியார் மருத்துவமனை, ஒரு வயது குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட, மூச்சு திணறி இருக்கிறது, இறந்த குழந்தையை சில மணி நேரம் உயிரோடு இருப்பதாக சொல்லி, ஒரு பெரிய தொகையை கட்டணமாக வசூலிக்கிறது. 
 
வேறு ஒரு எலும்பு சிகிச்சை மருத்துவமனை, கீழே விழுந்த ஒருவர் கைவலி என்று வர, இரண்டு லட்சம் கட்டணம் உடனடியாக செலுத்தி அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்படுகிறது, அவர் வேறு ஒரு அரசாங்க மருத்துவமனைக்கு செல்ல, அது ஒன்றும் இல்லை பிஸியோதெரபி போதும் என்று அறிவுறுத்தப்பட்டு சரி ஆகிறது. 
 
வேறு ஒரு தனியார் கிளினிக், சளி காய்ச்சல் என்று வரும் மக்களுக்கு, மருத்துவர் தவறாது நான்கு ஆன்டி பையோட்டிக் மருத்துவர் எப்போதும் பரிந்துரை செய்வார், இன்னொருவர் அதிக வீரியம் உள்ள மருந்தை பரிந்துரை செய்வார், கேள்வியின்றி மக்கள் மருந்தை விழுங்க நிரந்தர நோயாளிகளாக மாறுவர்.
 
இதெல்லாம் சில சம்பவங்கள் மட்டுமே, இன்னமும் பல பெற்றவர்களுக்கு மருத்துவர் சொல்வதே வேதம் என்ற மனநிலைதான், காய்ச்சல் என்பது வியாதி அல்ல, அது ஒரு அறிகுறி என்பதும், பரசிட்டமோல் மாத்திரையை மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து விழுங்க கூடாது, காய்ச்சலின் மூல காரணியை கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்பது கூட தெரியவில்லை, தொடர்ந்து மாத்திரையை விழுங்க அது கல்லீரலை பாதிக்கும் என்பதை அறியவும் இல்லை அதை நவீன வியாபார மருத்துவர்கள் சொல்வதும் இல்லை, மூல காரணியை கண்டறிய ஒரு ரத்த பரிசோதனை செய்யும்போது, எல்லா சோதனையையும் செய்யவும் சொல்வதில்லை, டெங்குவுக்கு ஒரு தரம், பிறகு சிக்கன் குனியாவா, இல்லை மலேரியாவா, டைபாய்டு காய்ச்சலா இப்படி ஒவ்வொரு முறையும் பரிசோதனைகளை இழுக்கும் மருத்துவமனைகளும் உண்டு, எவ்வளவு நாள் இருக்கிறீர்களோ அவ்வளவு கட்டணம். அதுவும் காப்பீடு என்றால் ஒருவித கட்டணம், பணமாக தந்தால் ஒரு கட்டணம். 
 
இருவேறு மருத்துவர்கள் இருக்கிறார்கள், மருத்துவமனைகள் இருக்கின்றன, கட்டணம் அதிகம் என்றாலும் எப்படியாவது உயிரை காப்பாற்றி விட வேண்டும் என்ற மருத்துவமனைகள் இருக்கின்றன, உயிரை பற்றி கவலையில்லை, முடிந்தவரை கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடித்துவிட வேண்டும் என்று சில மருத்துவமனைகள் இருக்கின்றன, எனக்கும் குழந்தைகள் உண்டு, நியாய தர்மம் உண்டு என்று நோயாளிகளை சிரத்தையாய் காக்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள், குடும்பம் வேறு தொழில் வேறு, நியாய தர்மம் இல்லை என்ற ரீதியில் செயல்படும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
 
சிறப்பான பல மருத்துவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இருக்கிறார்கள், சிறப்பான மருத்துவம் அரசு மருத்துவமனையிலும் உண்டு, மாபெரும் வித்தியாசம் என்ன வென்றால், செவிலியர்களின் பணி தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும், அரசு மருத்துவமனைகளில், ஆள் பற்றாக்குறை அல்லது வேறு காரணம் சொல்லி அந்த செவிலியர் பணிகளை நம் உடன் இருப்பவரே செய்ய வேண்டும், கழிவறை சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் மாபெரும் கேள்விக்குறி சில அரசு மருத்துவமனைகளில். ஆனால் மருத்துவர்களை நிச்சயம் நம்பலாம்.
மொத்தத்தில் நல்லவர்கள் நியாயமற்றவர்கள் எல்லா துறைகளிலும் உண்டு, மக்களுக்கு ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க வைக்க வைக்கும் கல்வி அவசியம், குறிப்பாக பெண் கல்வி மிக அவசியம். மருத்துவர்கள் சொல்வது எல்லாம் வேதம் இல்லை, மாறி வரும் சுற்றுப்புற சூழலில், மருத்துவம் பெரும் வியாபாரமாகி நிற்கிறது, இதில் நம்முடைய ஆரோக்கியத்தை, குழந்தைகளின் ஆரோக்கியத்தை நம்மை சார்ந்தவர்களின் ஆரோக்கியதாய் பேணுவது அவசியமாகிறது, வண்ணமயமான விளம்பரங்களில், உணவுகளை வண்ணமயாக மாற்றிக்கொள்வது கேடையே விளைவிக்கும். மருத்துவரை நாடினால் கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தி கொள்வதில் தவறில்லை, அறுவை சிகிச்சை என்று வரும்போது, நாட்பட்ட சிகிச்சை நீண்டுகொண்டே போனாலோ, வேறு ஒரு மருத்துவரை கலந்து ஆலோசிப்பது அவசியம்.
எல்லாத் துறையையும் போல இன்று மருத்துவத்துறையும் மாறி இருக்கிறது, நல்லது கேட்டது என்பதை நாமே அலசி ஆராய வேண்டும், நெருங்கிய உறவுகளின் சிகிச்சையில் உணர்வுகளைக் கொண்டு முடிவெடுப்பதை விட்டுவிட்டு (கொஞ்சம் சிரமம்தான்), கொஞ்சம் புத்தியை கொண்டு கேள்விகள் கேட்டு தெளிந்து முடிவெடுப்பது நல்லது!
வாழ்க வளமுடன்!
 

கணக்கில் அடங்கா வாழ்க்கை

 May be an image of text that says 'வளர்பிறை நிலவாய் வளர்வதில்லை வாழ்க்கை கிடைக்கும் நாட்கள் எல்லாம் வாழ்வதற்கே என்று வாழ்ந்துவிட்டால் வளர்பிறை தேய்பிறையெல்லாம் கணக்கில் இல்லை! -Amudha Your uote.in'

சூழலின் மனது

 May be an image of 2 people, outdoors and text that says 'யாரின் கரங்களைப்பற்று யாரின் கரமும் உடன் வருவதென்னவோ சில மணித்துளிகளோ நாட்களோ சில வாரங்களோ ஆண்டுகளோ அரிதாக சில கரங்கள் வாழ்வின் இறுதிவரை எதுவாகினும் தீர்மானிப்பது காலமும் சூழலும் அவரவர் மனங்களும்தான்! -Amudha YourQuote.in'

திருமணம்

 May be an image of text that says 'YourQuote.in திருமணமானால் சரியாகுமென்றோ மணவாழ்க்கை கட்டாயமென்றோ வரவுசெலவு கணக்குகளில் ஏற்படுத்தப்படும் மண உறவுகளால் இருவரில் ஒருவரின் கனவுகள் முடக்கப்படுகிறது இறுதியில் யாரோ ஒருவர் மனதாலோ உடலாலோ இறந்துப்போகிறார்கள்! இதற்கிடையில் சமூகமும் சற்றும் சளைக்காமல் கொலைகளைத் தொடர்கிறது! Amudha'

காலம்

 May be an image of text that says 'விண்ணோடும் மண்ணோடும் இயைந்திருக்கிறது இந்த வாழ்க்கை வாழும் காலமும் நீண்டதில்லை பிடி மண்ணும் சொந்தமில்லை விண்ணைப்போல மனம் பெரிதுமில்லை இடைப்பட்ட இடைவெளியில் நிறைந்திருக்கும் காற்றைப்போல கிடைத்த நொடிகளை இலகுவாக்கினால் நிறைவாகும் கடந்துப்போகும் நாட்கள்! -Amudha YourQuote.in uote.in'

எதார்த்தம்

 May be an image of 1 person and text that says 'வெளிப்படையாக உரையாடும் போது சில உறவுகள் பலப்படுகிறது பல உறவுகள் முறிந்துவிடுகிறது! -Amudha YourQuote.in'

கடந்து போ!

 May be an image of text that says 'நான் தொலைந்த இடத்தில் என்னை தேடாதே தொலைந்தது தொலைந்தாக இருக்கட்டுமென நான் நகர்ந்துவிட்டேன் மீண்டும் தொலைய விருப்பமின்றி! எந்தக் காயமும் காயமாக இல்லை காயத்திற்கு இன்னொரு காயத்தை பதிலாக்கும் எண்ணமும் இல்லை சிறகை விரித்து பறந்து போ வாழ்க்கை அழகாகட்டும்! -Amudha Your YourQuote.in'

விண்மீன்களின்_வாழ்க்கை

 

உன்னுடன் வாழ்ந்த நினைவு
தூரத்தில் இருக்கும் விண்மீனாக
மனதின் ஆழத்தில் உள்ளது
அவ்வப்போது வீண்மீன்கள்
கண்சிமிட்டும் நேரமெல்லாம்
வாழ்வதற்கான உன் ஆசைகள்
நினைவில் அலையடிக்கும்
உயிர்க்கொல்லியில் இறப்பாயென
நீயும் நினைக்கவில்லை
எனக்கும் துயரம் மாளவில்லை
என்றாவது சில மனிதர்களின்
பேராசை முடியும் போது
உன்னைப்போன்ற எளிய மனிதர்களின்
சாதாரண வாழும் ஆசை
சாத்தியமாகலாம்
அதுவரை
வீண்மீன்களின் எண்ணிக்கை
கூடலாம்
என்னைப்போல யாரோ எங்கோ
இதே வேண்டுதலை வைக்கலாம்!


May be an image of 1 person and sky

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!