உன்னுடன் வாழ்ந்த நினைவு
தூரத்தில் இருக்கும் விண்மீனாக
மனதின் ஆழத்தில் உள்ளது
அவ்வப்போது வீண்மீன்கள்
கண்சிமிட்டும் நேரமெல்லாம்
வாழ்வதற்கான உன் ஆசைகள்
நினைவில் அலையடிக்கும்
உயிர்க்கொல்லியில் இறப்பாயென
நீயும் நினைக்கவில்லை
எனக்கும் துயரம் மாளவில்லை
என்றாவது சில மனிதர்களின்
பேராசை முடியும் போது
உன்னைப்போன்ற எளிய மனிதர்களின்
சாதாரண வாழும் ஆசை
சாத்தியமாகலாம்
அதுவரை
வீண்மீன்களின் எண்ணிக்கை
கூடலாம்
என்னைப்போல யாரோ எங்கோ
இதே வேண்டுதலை வைக்கலாம்!
No comments:
Post a Comment