Monday 20 February 2023

அன்புள்ள அடிமை

 

“அன்புள்ள அடிமைக்கு உன் தலைவனின் கடிதம், படித்தப்பின் நீ ஒன்றும் கிழிக்க வேண்டாம், நீ இருப்பது போலவே அவ்வப்போது வெறுப்பு அறிக்கைகளை விட்டுக்கொண்டும், வாய்க்கு வந்தப் பொய்களை பரப்பியும் தலைமைக்கு உண்மையாய் இரு!”
 
“நீ படிக்காமல் இருத்தல் நலம், ஒரளவு படிக்க தெரிந்தால் போதும், நீ கூலியாக உழைக்க பிற மாநிலங்களுக்கு போ, அங்கேயும் பெரிய காண்டரக்டுகளை நான் கம்பானி, கதானி தகர்வால் வகையறாக்களுக்குத்தான் கொடுத்திருக்கிறேன், நீ ரயிலில் புளி மூட்டையைப் போல் அடைந்து டிக்கெட் இல்லாமல் பயணிக்கலாம், கண்டுக்கொள்ள மாட்டார்கள், போகும் மாநிலத்தில் மொழி பிரச்சனை வராது, ஏற்கனவே உன் தாய்மொழியை அழித்து உனக்கு இந்தியை புகட்டிய மாதிரி பிற மாநிலங்களிலும் இந்தியை திணித்து உனக்கு உதவி செய்கிறோம், உன்னைப்போலவே மொழிப்பற்று இல்லாத பலகோடி சங்கிகளை நான் உருவாக்கி வைத்திருக்கிறேன், அவர்கள் உனக்காக இந்தியில் பேசுவார்கள், உணவுக்காக கவலைப்பட வேண்டாம், உனக்காக ஒரே ரேஷன் என்று செயல்படுத்தியிருக்கேன், எங்கே போனாலும் உனக்கு கோதுமையும் புழுத்துப்போன அரிசியும் கிடைக்கும், நீ அதை உண்டு மகிழ்ந்திரு!”
 
“நீ கொலைக்குற்றங்கள் செய்யலாம், தப்பிப்பது உன் திறமை, உன் அடுத்த தலைமுறை கல்வியைப் பற்றி நீ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஒருவேளை எப்படியோ நீ பணக்காரன் ஆனால் உன் பிள்ளைகளை நம் தொழிலதிபர்களின் கோச்சிங் சென்டரில் சேர்த்து, பரீட்சை எழுத வைத்தோ வைக்காமலோ செலவு செய்து கல்விக்கொடுக்கலாம், நீ கூலியாகவே இருந்தால் உன் பிள்ளைகளும் நடோடிகளாகவே திரியலாம், எங்கே போனாலும் நீ மறுபேச்சில்லாமல் எங்களுக்கே ஓட்டுப்போட வேண்டும், இல்லையென்றால் நாங்களே போட்டுக்கொள்வோம், கூடிய விரைவில் இது எதுவுமே தேவையில்லை என்று நானே ராஜாவாக என்னை அறிவித்துக்கொள்வேன், அதற்கு முன்னேற்பாடாக வரி, கல்வி, தொழில் என்று மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் பறித்துக்கொள்வேன்!”
 
“வறட்சி, வெள்ளம் பற்றிய கவலையில்லை, எங்கே உன்னால் பிழைக்க முடியுமோ அங்கே போ, போகும் வழியில் செத்தால் அது உன் கவலை, நீயாக சுடுகாட்டிற்கு சென்று படுத்துக்கொள் இன்னும் அதற்குத்தான் நாங்கள் வரிப்போடவில்லை, ரொம்பவும் கஷ்டமாயிருந்தால் ஜெய் பராம் என்று சொல்லிக்கொள், நாங்களும் அவரை வைத்துத்தான் அரசியல் செய்கிறோம், எங்கள் அரசியல் போக நேரமிருந்தால் அவர் உனக்கு கருணை காட்டட்டும், இத்தனை செய்யும் நானே உனக்கு 56 இன்ச் மார்பழகன், உன் காவலாளி, உன் தலைவன், நீ சோர்வடையும் போதெல்லாம் நீ என் பங்கீ பாத் உரையை கேள், மோட்சமடைவாய், எப்போதும் நாமெல்லாம் கிந்துக்கள் என்பதை நீ மறவாதே, நீ பசியில் துடிதுடித்து செத்தாலும் எல்லையில் படைவீரர்கள் இருப்பதை மறக்காதே, இந்த நாட்டில் தாங்கிரஸ் உருவாக்கிய கட்டமைப்பு அத்தனையும் நாங்கள் விற்றுத்தின்றாலும், ஆட்சி எங்களிடம் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் காரணம் தாங்கிரஸ்தான் என்பதை மறக்காதே!”
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!