நிருபர்: கருப்புபணத்தை உங்கள் கட்சி ஒழித்துவிட்டதா?
அதிபர்: ஆம் ஒழித்துவிட்டது, மெல்லிய பச்சை, நீல நிறத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை தவறுதலாக கருப்பு என்று சொல்லிவிட்டோம், ஆனால் ஊதா, இளஞ்சிவப்பு, ப்ளூ, ப்ரவுன் என்று பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்திருக்கிறோம்!
நி: வாராக்கடன்கள் அதிகரித்துவிட்டதே?
அ: உண்மை, கடனை திருப்பிக்கொடுக்காமல் இருந்தவர்களை இனி “வராதே” என்று நாட்டை விட்டு துரத்திவிட்டோம், அதனால் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, இனி வரவே வராதே என்று சொல்லிவிட்டபடியால் சீர் செய்யப்பட்டுவிட்டது!
நி: எல்லோரையும் வங்கிக்கணக்கு தொடங்கச்செய்து, பின்பு அவர்களின் குறைந்த சேமிப்பையும், வங்கி கணக்கில் “மினிமம் பேலன்ஸ்” இல்லை என்று வங்கிகள் சுருட்டியது பற்றி?
அ: 60 ஆண்டுகால ஆட்சியில் நாடு மோசமாகிவிட்டது, ஏழைகளின் பணம் போய்விட்டதன் வலி ஒரு ஏழைத்தாயின் மகனுக்குத்தான் தெரியும்!
நி: யார் அது?
அ: நான்தான்
நி: ஏழைகளின் நாட்டின் அதிபராகிய ஏழைத்தாயின் மகனான நீங்கள் 4000 கோடியை பயணத்துக்காக செலவழித்தது பற்றி?
அ: அது நாடுகளின் நட்புறவுக்காக
நி: அப்போது ரீனா நாடு ஏன் கருணாச்சலத்தில் ரோடு போட்டது?
அ: எல்லையில் பயங்கரவாதம் நீங்க எங்கள் ஆட்சியில் எல்லாம் சரிசெய்யப்படும்
நி: நீங்கள்தானே இப்போது ஆட்சியில்?
அ: நான் நாட்டின் சோக்கிதார்...
நி: ஆனால் நான் கேட்டது?
அதிபர் புகைப்பட கருவி நோக்கி புன்னகைக்க, இரண்டு பேர் நிருபரை குண்டுகட்டாய் தூக்கி வெளியே எறிகிறார்கள்!
#ஆன்ட்டி_இந்தியன் என்று நிருபரை சூழ்ந்துக்கொண்டு மங்கீஸ் முழங்க, நிருபர் ராஜினாமா செய்கிறார்!
சுபம்!
No comments:
Post a Comment