கதிர்வீச்சின் வெம்மையில்
குருவிகள் காணாமல் போனது
வாய்க்கால்கள் சாக்கடையானதில்
தவளைகள் இல்லாமல் ஆனது
இரையே அருகிப்போனதில்
பாம்புகளும் அருகிவிட்டது
மின்சார வேலிகளில்
யானைகளும் மரித்துப்போனது
வண்ணமயமான சிட்டுக்குருவிகள்
கூண்டுகளுக்குள் அடைப்பட்டது
பேசும் கிளிகள் பேசுவதனாலேயே
மனிதர்களிடம் சிறைப்பட்டது
பூச்சிக்கொல்லிகளில்
புழுக்களும் மக்கிப்போனது
கடைகளின் இனிப்புப்பண்டங்களில் கூட
எறும்புகள் தள்ளிப்போனது
பிற உயிர்களை அழித்து
தமக்கென வடிவமைத்துக்கொள்ளும்
உலகத்தை நகரமென்றும் நாடென்றும்
மனிதர்கள் இப்படித்தான்
அறிவித்துக்கொல்(ள்)கிறார்கள்!
No comments:
Post a Comment