Friday, 30 May 2014

Daughter

அப்பாவின் அன்பு

சிலவேளைகளில்
பள்ளிச் சிறுமியாய்,
ஒருபொழுதில்
மணமானவளாய்,
அரிதான நேரங்களில்
பிள்ளைச் சுமந்திருந்தவளாய்,
நினைவுத் தப்பி
படுக்கையில் வீழ்ந்தபின்
மகளைப் பற்றிய நிகழ்வுகளை,
மாற்றி மறந்து கேள்விகள்
கேட்ட தந்தைக்கு -
தன் மகளை மட்டும் எளிதில்
மறக்கமுடியவில்லை
மற்றவர்களைப்போல்!

God and Human

Photo: God and Human
------------------------
He and I were in rift
He whispered poverty
I was busy chasing it
He created all riddles
I was busy solving them
He presented all hassles
I was busy passing them
He hampered progress
I was busy leaping over
He created wounds
I was busy ignoring them
He sent muscle power
I was busy confronting those
He sent deceivers
I was busy bypassing them
Alas, 
He sent love and tenderness 
And there I got flattered;
Busy doing nothing!
And the story ends! :-)
He and I were in rift
He whispered poverty
I was busy chasing it
He created all riddles
I was busy solving them
He presented all hassles
I was busy passing them
He hampered progress
I was busy leaping over
He created wounds
I was busy ignoring them
He sent muscle power
I was busy confronting those
He sent deceivers
I was busy bypassing them
Alas,
He sent love and tenderness
And there I got flattered;
Busy doing nothing!
And the story ends!:-)

கீச்சுக்கள்!

தாய் வீட்டுச் சீதனமெனப் பெருமை கொள்வது பொன்னிலொ, பொருளிலோ இல்லை, அம்மாவின் மனப்பக்குவம், மற்றும் சமையல் கைப்பக்குவம் வரப் பெற்றாலே வரம்!
# இப்படிக்கு, சாப்பாட்டுராமி! 

----------------------------------------------------------------------------------------
Photo: அன்பு கொண்ட இருவேறு உள்ளங்களில், 
இயல்பு மாறமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் உள்ளம் குழந்தை 
எதையும் மாற்றிக் கொண்டு நதி போல் பயணிக்கும் உள்ளம் தாய்மை 
தாய்மையும், குழந்தைத்தனமும் கலந்ததே அன்பு! 
அன்பினால் அமைவதே உறவு! 

அன்பு கொண்ட இருவேறு உள்ளங்களில்,
இயல்பு மாறமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் உள்ளம் குழந்தை
எதையும் மாற்றிக் கொண்டு நதி போல் பயணிக்கும் உள்ளம் தாய்மை
தாய்மையும், குழந்தைத்தனமும் கலந்ததே அன்பு!
அன்பினால் அமைவதே உறவு!

-------------------------------------------------------------------------------------------------
குடிசையில் இருந்தாலும், கோபுரத்தில் இருந்தாலும்
இருப்பதை ரசிக்கத் தெரியாத உள்ளங்களுக்கு
வாழ்வில் நிறைவே இருப்பது இல்லை
#ஓட்டைப் பாத்திரம்

--------------------------------------------------------------------------------------------------
ராஜபக்க்ஷேவுக்கு அழைப்பிதழ் அனுப்பி, 37 இடங்களில் நாமம் போட்ட தமிழக மக்களுக்குத் தங்கள் முதல் நன்றியறிவிப்பைத் தொடங்கி உள்ளனர்
#நேற்றே நில அதிர்வுத் தொடங்கி விட்டது!

---------------------------------------------------------------------------------------------------------
   

Life

There is no end for certain pain until death!
#Hatred!


Life is wonderful for you when you keep giving love and care, and it is very peaceful for others when you don't expect them back!
#Happiness is so easy!


Life is like a train journey!
#Life, laughter and uncertainty!


  

Gist

பெண் எந்திரம்!

Photo: கொளுத்தும் வெயில், 
உருக்கும் உழைப்பு, 
காத்திருக்காத கடமைகள், 
காத்திருக்கும் மரணம், 
மனம் காணா நட்பு, 
விழி நோக்கா தொலைவு, 
இதயம் அறியா கண்ணீர், 
இயல்பு காக்கும் பாங்கு, 
உறைந்துவிட்ட புன்னகை, 
குறைகளுக்கு நிறைவில்லை
மீதமிருக்கும் ஒரு வாழ்க்கையில்!

எதிர்நோக்கும் நிறைமகளை 
காய்தலில் ஒன்றும் சலிப்பில்லை, 
உற்ற அற்ற மனிதர்க்கு!
சுணங்காத கழுதையது, 
நிறையறியா அவர் கண்களுக்கு!
பொதி மேல் பொதி 
ஏற்றத்தான் செய்வார்
பெண்ணெனும் எந்திரத்தின் மேல்!

#பெண் எந்திரம்!
கொளுத்தும் வெயில்,
உருக்கும் உழைப்பு,
காத்திருக்காத கடமைகள்,
காத்திருக்கும் மரணம்,
மனம் காணா நட்பு,
விழி நோக்கா தொலைவு,
இதயம் அறியா கண்ணீர்,
இயல்பு காக்கும் பாங்கு,
உறைந்துவிட்ட புன்னகை,
குறைகளுக்கு நிறைவில்லை
மீதமிருக்கும் ஒரு வாழ்க்கையில்!

எதிர்நோக்கும் நிறைமகளை
காய்தலில் ஒன்றும் சலிப்பில்லை,
உற்ற அற்ற மனிதர்க்கு!
சுணங்காத கழுதையது,
நிறையறியா அவர் கண்களுக்கு!
பொதி மேல் பொதி
ஏற்றத்தான் செய்வார்
பெண்ணெனும் எந்திரத்தின் மேல்!

#பெண் எந்திரம்!

சுயநலமாய்?!

Photo: வழிந்தோடும் ஆற்றின் 
வேகமும் 
காய்ந்துத் தகிக்கும் ஆதவனின் 
மோகமும் 
கலந்துண்டான வெப்பத்தில் 
கார்மேகத்தின் ஊர்வலம்!
 
இருவேறு இயல்புகளின் 
காதலில் உருவானவன், 
மலைதனில் இடறி,
நீர் நோக்கிச் சிவந்து நின்ற  
செம்மண்ணில் மோகங்கொள்ள, 
குறும்பாய் வந்த காற்றின் மோதலில், 
தன் மோனத் திரைக்கிழித்து
காதலில் கட்டுண்டான் 
கார்மேகம்,
குழைந்தோடிற்றுக் காட்டாறு!!

ஒன்று வீழ்ந்து மற்றொன்றாக, 
மற்றொன்று வேறொன்றாக, 
ஒன்றன் இயல்பை ஒன்று  
சுமந்தப்படி மனம் கலந்த 
இயற்கைக் கூடலிலன்றோ,
வாழுதிங்கே மனிதக் கூட்டம் 
#சுயநலமாய்?!
வழிந்தோடும் ஆற்றின்
வேகமும்
காய்ந்துத் தகிக்கும் ஆதவனின்
மோகமும்
கலந்துண்டான வெப்பத்தில்
கார்மேகத்தின் ஊர்வலம்!

இருவேறு இயல்புகளின்
காதலில் உருவானவன்,
மலைதனில் இடறி,
நீர் நோக்கிச் சிவந்து நின்ற
செம்மண்ணில் மோகங்கொள்ள,
குறும்பாய் வந்த காற்றின் மோதலில்,
தன் மோனத் திரைக்கிழித்து
காதலில் கட்டுண்டான்
கார்மேகம்,
குழைந்தோடிற்றுக் காட்டாறு!!

ஒன்று வீழ்ந்து மற்றொன்றாக,
மற்றொன்று வேறொன்றாக,
ஒன்றன் இயல்பை ஒன்று
சுமந்தப்படி மனம் கலந்த
இயற்கைக் கூடலிலன்றோ,
வாழுதிங்கே மனிதக் கூட்டம்
#சுயநலமாய்?!

GIST

Behind the love and beauty of the gifts chosen and bought by a kid to an other kid, I have seen a beautiful poem, well written!
 -------------------------------------------------------------------------------------------------------------------

The world is filled with good souls. And of-course the bad souls are busy executing their deeds, while the good souls are praying!
#Amen!
(Nothing to do with politics)

---------------------------------------------------------------------------------------------------------------
Falling sick enlightens you with the imperative need of strong health and to know the practicality of love and the extent of its patience when you are down as a patient!
#be strong!

-------------------------------------------------------------------------------------------------------------------
You have seen a coal and I have seen a diamond!
A heart that cares sees things differently!
#And that's called Love!

------------------------------------------------------------------------------------------------------------------
Consumerism is the trend, people are more graving for luxury than peace of mind. They are busy making money spoiling relationship and health and later ready to lose that money to gain health and to retain relationship.

#Learn to cherish life with fellow humans, animals and nature as all your electronic gadgets are designed with limited warranty!

--------------------------------------------------------------------------------------------------------------
You can love a child, wipe its tears, make him or her smile only if you are a mother in heart! Rest lives with EGO!
-----------------------------------------------------------------------------------------------------------------
It is so annoying to see laziness clubbed with integrity issues with few!
#Sixth sense of these is destructive!

-----------------------------------------------------------------------------------------------------------------
Someday's begins with a pleasant surprise
And
Someday's ends with a shocking annoyance! 

------------------------------------------------------------------------------------------------------------------
There is always a difference between imprints and footprints, depending upon the person leaving!
# Heaven or Hell!

----------------------------------------------------------------------------------------------------------------
Visited one more orphanage, operated in government campus, the kids are under asbestos roof, poor sanitation and extremely sultry. And the government which gave space have no funds for a better roof!
Couldn't avoid asking this question to myself, "Is the Tasmac under loss?!"

-----------------------------------------------------------------------------------------------------------------------
Silence is mistaken either as 'acceptance' or as 'arrogance' but mostly it means 'endurance'
----------------------------------------------------------------------------------------------------------------
Only during cricket match and elections 'TN' is seen as part of democracy and when it comes to people sentiments, it's all treated as emotional nonsense of Tamils.
It would have been a different situation if the people of SL would have spoken any other language of India other than Tamil. And by all means either the genocide would have not happened or by now they would have got justice!

-------------------------------------------------------------------------------------------------------------------
Depression leads to cyclone and suppression leads to revolution!
#Without expression there is no justice!
 
 
 
 
 
 
 
 
 
 

முடிந்த மட்டும் மடியும் வரை

Photo: அக்கரட்டில் 
பிழைத்த செடியில் 
பூப் பூத்தது அன்று 
பெய்த மழையாலோ? 
இலை தழுவிய 
பனித்துளியாலோ? 
ஆழப் புதைந்த 
அதன் வேரினாலோ? 
 
பறிக்கும் உனக்கு 
தெரிந்ததெல்லாம்  
நிறமும் அதன் மணமும் 
உயிரின் போராட்டமில்லை!
அட  
பூவின் குரல் பாறைகளுக்கு 
கேட்பதுமில்லை! 
 
எனினும் 
அத்தனை பூக்களும் பூக்கும் 
முடிந்த மட்டும் மடியும் வரை!
அக்கரட்டில்
பிழைத்த செடியில்
பூப் பூத்தது அன்று
பெய்த மழையாலோ?
இலை தழுவிய
பனித்துளியாலோ?
ஆழப் புதைந்த
அதன் வேரினாலோ?

பறிக்கும் உனக்கு
தெரிந்ததெல்லாம்
நிறமும் அதன் மணமும்
உயிரின் போராட்டமில்லை!
அட
பூவின் குரல் பாறைகளுக்கு
கேட்பதுமில்லை!

எனினும்
அத்தனை பூக்களும் பூக்கும்
முடிந்த மட்டும் மடியும் வரை!

கீச்சுக்கள்

எல்லோரும் நல்லவர்களே
இனங்காண முடியாததே என் குற்றம்!

--------------------------------------------------------------
ஒரு துயரம்
மற்றுமொரு துயரத்தை
மூழ்கடித்து விடுகிறது!
துயரங்களை மட்டுமே
கடக்கும் மனமும்
மரத்துப் போய் விடுகிறது!

----------------------------------------------

 

அறையப்பட்ட ஆணி

அறையப்பட்ட ஆணி
ஏற்படுத்திய வலி
கர்த்தருக்குத்தான் தெரியும்
அடித்தவனுக்குத் தெரியாது
அறைந்தவன் கொடுமை செய்தான்
அறையப்பட்ட பரமபிதா
குருதியை சிந்தித் அப்போதும்
தன் கடமையைச் செய்தான்
நாம் பாவங்களைத் தொடர!

அன்னையர் தினம்

ஆயுத பூஜை,
மாட்டுப் பொங்கல்,
அன்னையர் தினம்!

அம்மா

Photo: இலைகள் உதிர்த்தபின்னும் 
நிழல் தரும் மரக்கூடு 
#நீங்கள் தேடும் அம்மா!
----------------------------------------------------------

உருகி கரைந்திட்டது போதும் 
உருக்காமல் காத்திடல் வேண்டும் 
#முதியோர் இல்லம்!
இலைகள் உதிர்த்தபின்னும்
நிழல் தரும் மரக்கூடு
#நீங்கள் தேடும் அம்மா!
----------------------------------------------------------

உருகி கரைந்திட்டது போதும்
உருக்காமல் காத்திடல் வேண்டும்
#முதியோர் இல்லம்!

வார்த்தை

Photo: உருகி கரைவதற்கும் 
கொதித்துத் தகிப்பதற்கும் 
மருகி மடிவதற்கும் 
இது போதும் 
 #வார்த்தை
 உருகி கரைவதற்கும்
கொதித்துத் தகிப்பதற்கும்
மருகி மடிவதற்கும்
இது போதும்
#வார்த்தை

அப்பா சொன்னது!

அப்பாவின் மூலமே புத்தகங்கள் அறிமுகம், எந்த மேடைப் பேச்சிற்கு முன்பும், அப்பாவிடமே ஒரு பட்டிமன்றம் நிகழும், பெண் என்று வம்பிழுத்து, என்னைத் தூண்டி வெற்றிப் பெறச் செய்தவர் என் தந்தையே, என்னுடைய ஒவ்வொரு பரிட்சையிலும் விழித்திருந்தவர் அப்பா, பல்வேறு காலகட்டங்களில் ஒரு ரௌடியைப் போல வளர்த்து விட்டிருக்கிறீர்கள் பெண்ணை என்று வந்த அத்தனை புகார்களையும் என்னைக் குறையே சொல்லாமல் சமாளித்தவர் அப்பா. அத்தனை நண்பர்களையும் தோழிகளையும், விலங்குகளையும், பறவைகளையும், உறவினர்களையும் அரவணைத்தது அந்த இதயம், வறுமையிலும் செம்மைக் காத்தவர் அம்மா! இன்று முழுக்க நான் கடந்த நல்லவர்களைப் பற்றிய எண்ண ஓட்டம்....நல்லவர்களின் கைபிடித்து நடந்து இருக்கிறேன் தெரிந்தோ தெரியாமலோ......இன்று ஒரு தோழனாய் என் அப்பாவிடம் இருந்து கேட்ட வரிகளில் சில

1.தைரியம் மனித லட்சணம், அது புருஷ லட்சணம் என்று சொல்வதை விட!

2.தன் கையே தனக்குதவி!

3.முன்னேற்றத்தின் முதல் எதிரி, சோம்பல்! 

---------------------------------------------------------------------------------------------------------------------
காதலைப் பற்றி, நான் காதலிக்கும் முன்பு;
------------------------------------------------------------------
எதையும் மாற்றி விட முடியும் என்று எண்ணாதே, மான் தன் இணையாய்ப் புலியைத் தேடினால், அது மானின் தவறே அன்றி, புலியின் தவறு அல்ல! புலிகள் மானுக்காகத் தன் வரிகளை எப்போதும் மாற்றிக் கொள்ளாது, அது தன் பசிக்குப் புசிக்க மட்டுமே வரும்!

மனதின் நிறத்தைக் கண்டு வரும் காதலே நிலைக்கும்!  

-------------------------------------------------------------------------------------------------------------------
சாதியைப் பற்றி;
------------------------
பகிர்பவன் மேல் சாதி, பதுக்குபவன் கீழ் சாதி! அவ்வளவே சாதி ராசாத்தி! 

----------------------------------------------------------------------------------------------------------------
தர்மத்தைப் பற்றி/ உதவியைப் பற்றி / அன்பைப் பற்றி;
------------------------------------------------------------------------------
1.கன்னம் இடுவது மட்டும் திருட்டல்ல
இருக்கும்போது இல்லை என்று சொல்பவனும் திருடன்தான்!

2. பொருள் இருப்பவன் அல்ல, மனம் இருப்பவனே கொடுப்பான்!

3. எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதைக் கொடுத்து விட்டுச் சென்று கொண்டே இரு, எதிர்பார்த்து நின்றால் தேங்கி விடுவாய், ஏமாந்துப் போவாய்! 

-----------------------------------------------------------------------------------------------------------------------
   

கீச்சுக்கள்

மாநிலத்தின் பாரத வங்கி என்று பறைசாற்றிக் கொள்ளும் வங்கியில், அதன் கிளைகளில், கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் பெண்ணிடம் கண்ட பணிவையும், தன்மையையும் கூட, அங்கே படித்துப் பணியில் இருந்த மேதாவிகளிடம் காண முடியவில்லை.

ஓட்டுக் கிடைத்த பின் மந்திரிகளும், உத்தியோகம் கிடைத்தபின் அரசாங்க ஊழியர்களும், மக்களைக் கண்டுகொள்வதேயில்லை, எனினும் ஊதியம் கொடுப்பதென்னவோ நாம்தான்!

#சொந்த செலவில் சூனியம்!

--------------------------------------------------------------------------------------------------------
தலையில் சூடிக்கொண்டதால்
காகிதப்பூ மணம் வீசிடாது
குப்பையில் வீசி எறிந்ததால்
பாரிஜாதம் தன் மணம் துறந்திடாது!
அதுபோலவே
மனிதர்கள் தத்தம் மனத்தைக் கொண்டு
அவர்தம் நட்பும், உறவும்!

--------------------------------------------------------------------------------------------------------
உடலும், மனமும் சோர்ந்துப் போகும்
இக்கட்டான தருணங்களில் / துயரங்களில் எல்லாம்,
நம்மை நோக்கி நீண்டிருக்கும் கரங்களில்,
தேடும் மனங்களில், நோக்கும் விழிகளில்,
தெரிந்து விடும்,
உண்மையில் நம்மை நேசிப்பவர்களும்,
ஆதரிப்பவர்களும் யார் என!
# ஞானம்

------------------------------------------------------------------------------------------------
  

இலாவகம்

Photo: ஒரு குருவி 
கூட்டை கலைப்பவனுக்கு 
அதைச் செய்யும் 
இலாவகம் கைகூடுவதில்லை!
 ஒரு குருவி
கூட்டை கலைப்பவனுக்கு
அதைச் செய்யும்
இலாவகம் கைகூடுவதில்லை!

Wednesday, 7 May 2014

தொடர்கதை

தென்றலாய், புயலாய்,
காற்று இயல்பினின்று கதைக்கிறது
மெல்லிய இலையொன்றுச் சிலிர்த்து
நெகிழ்ந்துப் பின் துவண்டு சரிகிறது! 

மீட்டுமோ

 
 தனையறியா நாளில்
பிறந்திட்ட ஒன்று
தனைமறந்த உயிரின்
நிலைதனில் இறந்திட்டது
விழிமூடி ஒரு நீளுறக்கத்தில்
தன் மனம் கொன்று துயில்கிறது
கசிந்துருகும் மௌனத்தின் இசை
அதன் உயிர் மீட்டுமோ
இல்லை அதன் வேரறுத்து
ஒரு மீள உறக்கத்தில் வீழ்த்திடுமோ?

Tuesday, 6 May 2014

பார்வை

 
உயரத்தில் இருந்து
பார்த்தார் கடவுள்
கீழிருந்து பார்த்தது
எறும்பு
இருவருமே
துரும்பாய்த்தான்
தெரிந்தனர்
இருவருக்கும்!