Friday, 30 May 2014

கீச்சுக்கள்

மாநிலத்தின் பாரத வங்கி என்று பறைசாற்றிக் கொள்ளும் வங்கியில், அதன் கிளைகளில், கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் பெண்ணிடம் கண்ட பணிவையும், தன்மையையும் கூட, அங்கே படித்துப் பணியில் இருந்த மேதாவிகளிடம் காண முடியவில்லை.

ஓட்டுக் கிடைத்த பின் மந்திரிகளும், உத்தியோகம் கிடைத்தபின் அரசாங்க ஊழியர்களும், மக்களைக் கண்டுகொள்வதேயில்லை, எனினும் ஊதியம் கொடுப்பதென்னவோ நாம்தான்!

#சொந்த செலவில் சூனியம்!

--------------------------------------------------------------------------------------------------------
தலையில் சூடிக்கொண்டதால்
காகிதப்பூ மணம் வீசிடாது
குப்பையில் வீசி எறிந்ததால்
பாரிஜாதம் தன் மணம் துறந்திடாது!
அதுபோலவே
மனிதர்கள் தத்தம் மனத்தைக் கொண்டு
அவர்தம் நட்பும், உறவும்!

--------------------------------------------------------------------------------------------------------
உடலும், மனமும் சோர்ந்துப் போகும்
இக்கட்டான தருணங்களில் / துயரங்களில் எல்லாம்,
நம்மை நோக்கி நீண்டிருக்கும் கரங்களில்,
தேடும் மனங்களில், நோக்கும் விழிகளில்,
தெரிந்து விடும்,
உண்மையில் நம்மை நேசிப்பவர்களும்,
ஆதரிப்பவர்களும் யார் என!
# ஞானம்

------------------------------------------------------------------------------------------------
  

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!