அவர்களின் கண்ணாமூச்சி
ஆட்டத்தில் அவனையும் 
கூட்டாக்கினர் - அவன் திருடன்
என்றும் அவர்கள் காவலர்
என்றும்...
 
பிஞ்சு காவலர்கள் தேடுகையில்
கள்ளம் மறைந்து திருடன் - தன்னை
தொலைத்து தன்னை கண்டான்!
இப்போது தேடுவது அவன் முறையானது
இருட்டுக்குள்ளும் வண்ணம் கண்டான் அவன்!