Monday, 25 February 2013
சற்றைக்கெல்லாம் முடிந்துவிடும்
சற்றைக்கெல்லாம் முடிந்துவிடும்
அலையடித்து ஓய்ந்துவிடும்
கொலை ஒன்று நடந்துவிடும்
கனவு ஒன்று அழிக்கப்படும்
களவு ஒன்று செய்யப்படும்
இழந்தவர் மனது எழுவதில்லை
பறித்தவர் மனதும் வாழ்வதில்லை
சிதைக்கும் நிமிட நேர உணர்வு - இதில்
யாருக்கும் கிடைப்பதில்லை உயர்வு!
அழித்தது உன்னை என்றாலும்
பாவி என்னமோ நீதானடி
நாகரிகத்தில் மேம்பட்ட மனிதன்
உன்னால்தான் பாழ்பட்டு போனானடி
அவன் பால் அருந்தியது மறந்தானடி
தாய் வழி வந்த பாதை கடந்தானடி
சாதிக்கும் கீழ்மை நீதிக்கும்
மோகத்துக்கும் சில காமத்துக்கும் பலி நீதானடி
இரும்பை அணியாமல் சென்றது உன் குற்றம்தானடி
கரும்பாய் வாழ்ந்தால் கசப்பும் உனக்குத்தானடி
--------
உன்னை அழகு என்றார் - பல
வண்ணங்கள் குழைத்து
ஆடைகள் தந்து கண்கள் மலர்ந்தார்
அணிகலன் பூட்டி பொலிவூட்டினார் - பின்
கல்வி வேண்டி துணையோடு போ என்றார்
மற்றும் ஒருநாள் மாலை வேளையில்
விரைந்து திரும்பிவிடு என்றார்
பின் சிலநாட்கள்
மூலையில் அமரச் சொன்னார்
மெதுவாய் சூழல் மாறி
நிமிர்ந்து நில் என்றார்
சிந்தனை செம்மையாகையில்
கேள்விகள் பல பிறந்தது
செயல்திறன் சிறந்தது
ஊடே மனக்கசப்பும் வளர்ந்தது
வளர்ந்து விட்ட
ஒன்றைக் கண்டு இருட்டுக்குள் விழுந்தார்
பல நாட்கள் யோசித்து - ஆயுதம்
ஒன்றை கொண்டு வந்தார் - அது
அவரில் அழியாது - உன்னை
மட்டும் அடைந்து அழிக்கும் கர்ப்பாமடி!
சிதைப்பவர் வெளியில்தானா?
உள்ளேயும் உண்டு என்று உரத்து
அறிகையில் - ஒருநாள் நீ
முழுதாய்ச் சிறை செல்லக் கூடுமடி!
பின் ஆதாமின் விலா எலும்பாய் மாறி
ஆப்பிளை கொண்டு உன் பயணத்தை
தொடங்கடி - இந்த முறையேனும்
பழத்தில் விஷத்தை செலுத்தி
ஆதாமிடம் தந்துவிடு - இன்றைய
தொழில்நுட்பம் நாளை வளர்ந்து
உனக்கு பிள்ளையைத் தானாய் தந்துவிடுமடி!
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!

-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
No comments:
Post a Comment