விதவிதமாய் கொல்கிறார்
போர் என்ற பெயரில்
பலவிதமாய் அழிக்கிறார்
பகை என்ற வன்மத்தில்
மிருகம் கடந்த மானிடம்
இன்று மெதுவாய் மனிதம்
கடந்து மிருகமாகிறது!
குழந்தை கூட இரையாகும்
வயிற்று கரு கூட நீராகும்
காணும் நாமும் ஒரு மிருகம்தாம்
யார் பசிக்கு யாரோ, யாரறிவர்
மாயன் கூட அறியவில்லை
பக்கத்தை நிரப்பவில்லை -
வெந்நீர் ஊற்றாய் கண்ணீர்
வகுத்து பயனில்லை - எரிமலைகள்
வெடிக்காமல் தாகங்கள் தீர்வதேயில்லை!
பகை என்ற வன்மத்தில்
ReplyDeleteமிருகம் கடந்த மானிடம் ஆம் மனிதன் என்ற போர்வையில் மிருகத்தைவிட மிக மிக கொடுரமான வெறியோடு அலைகின்ற பழிவாங்கும் வஞ்சம்தீர்க்கும் கெட்ட குணங்களோடு கூலிப்படைகளாக கொலைக்கலைமாக மானுடம் மாறிவருகிறது
வெந்நீர் ஊற்றாய் கண்ணீர்
வகுத்து பயனில்லை - என்றால் இந்த கெட்ட குணங்களை மானுடவியலில் போக்க என்னதான் வழி சொல்லுங்கள்
எரிமலைகள்
வெடிக்காமல் தாகங்கள் தீர்வதேயில்லை! ஆனால் கோபங்கள் என்றும் குறையாது
இந்த கவிதை மிக மிக அருமை ஆனால் தாகம் என்ற தலைப்பை மற்றும் மாற்றம் செய்திருக்கலாம் அக்கா