Friday, 22 February 2013

பூக்கள் எல்லாம் பூக்கள்தான்!

eyes a little girl in eastern dress Stock Photo - 9421511
தந்தையால் வன்கொடுமை செய்து சாகடிக்கப்பட்ட ஐந்து வயது லாமா அல் காம்திக்கு அஞ்சலி!

பூக்கள் எல்லாம் பூக்கள்தான்!
----------------------------------------
அழகாய் நான் இருப்பதாய்
அம்மா மகிழ்ந்தாள்
தலை சுற்றி முக்காடிட்டு
கவசம் என்றே சொன்னாள் !
நான்கு வயது குழந்தை எனக்கு
தலையில் அணிவித்த துணி
உயிர் காத்திடும் என்றே
உரைத்திட்டு - வீட்டிலேயே
இருக்கப் பணித்தாள்
சம வயது தோழமைகளுடன்
வெளியே நான் விளையாட மறுத்தாள்!

என்னுடன் விளையாடிய  தந்தை
என்னுடல் தழுவிட - அம்மா
என் அழுகை நீ கேட்கலையா? - அவன்
ஒடித்து விட்ட என் முதுகெலும்பு முறியும்
ஓசை உன்னைச் சேரலையா? - என் இரத்தம்
பெருகி உன் மனதை எரிக்கலையா?
என் தலையில் அணிவித்த துணி
என்னை எரிக்கையில் தீய்ந்ததே காணலையா?
அம்மா இனி நீ ஈன்றெடுக்கும் என்
சகோதரிகளுக்கும், இதுதான் கதியா?

எல்லோரும் என் படுக்கையைச் சுற்றி
இனி நான் ஆண்டவருடன் விளையாடலாம்
சுதந்திரமாய்! - ஆசிர்வதிப்பது யாரைப் பற்றி?

ஐயோ! மாமா எனக்கு அந்த தழுவல் விளையாட்டு
வேண்டாம் - என்னை வெளியே விடுங்கள்
என் கால்களுக்கு விளையாட்டு  வேண்டும்
என் கால்களுக்கிடையே எந்த விளையாட்டும் வேண்டாம்!

*****
மகளே நான் என்ன செய்வேன்
உன் பருவம் நான் கடந்திட்டேன்
உன் கொடுமையை நான் கண்டிட்டேன்
யாருக்கும் தெரியாது - நான் என்றோ 
இறந்திட்டேன் - பதுமையாய் வளர்க்கப்பட்டேன்
குழந்தை பருவம் மறுக்கப்பட்டேன்
கல்வி என்பது சிறிது காலம் - தொழுகைக்கு
ஏற்ற கல்வி போதும் என்றே தெளியப்பட்டேன்
கையில் ஒரு பொம்மையுடன் இவனிடத்தில்
தள்ளப்பட்டேன் - பொம்மையின் தாயாய்
இருக்கையிலே உன் தாயாய் மாற்றப்பட்டேன்
உன் வலி நான் அறிகையில் - உன்
மரணத்திற்க்காய் இன்று வேண்டி நின்றேன்!
இனியும் நான் கருக்கொள்வேன் - இவர்கள்
கருக்கொல்வார்கள் - தப்பி பிழைக்கும்
உன் வழித்தோன்றல்கள் மக்கள்தொகை
பெருக்கி - என்போல் ஒருநாள் ஊமையாய்
வெந்து நொந்து மடிவார்கள் - நீ போ!

மகளே - ஆண்டவன் இருப்பது உண்மையானால்
இங்கே வந்து பெண்ணாகப் பிறக்கச் சொல்
அவர் இவர் வகுத்த நெறிமுறைகளில் நின்று வாழ்ந்து
காட்டச் சொல் - அன்றேனும் இந்த காட்டுமிராண்டி
சட்டம் காலாவதியாகட்டும் - கண்ணீர் விடும்
பெண்கூட்டம் விடியலை நோக்கி நகரட்டும்! 

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...