எங்கேயோ நிற்கிறாய்
திக்கு தெரியாமல் தவிக்கிறாய்
யார் யாரையோ உறவென்றாய்
எவர் எவரையோ நட்பென்றாய்
காற்று வீசும்போது
கலைந்திடும் மேகம் போல
மோகம் தீர்ந்ததும்
விலகும் காதல் போல
தேவை தீர்ந்ததும்
பறந்திடும் உறவுக் காகிதங்கள்
இதில் உண்மைத்தேடி
நீயும் தவிப்பதென்ன?
பொய் பிம்பங்களை நாடி
நாளும் களைப்பதென்ன?
மழைநாளில் மின்னும் வானவில்
காணாமல் போகும் கோடையில்
எதற்காகவோ இந்தச் சோகம்
தீருமோ மனதின் தாகம்
வண்ணத்துப்பூச்சி வாழ்க்கையில்
உணர்வுகளின் தேடலில்லை
கடமைகளை கடக்கையில்
தேடல்களில் அர்த்தமில்லை
மழைத்துளியை பருகிவிடு
வெப்பக்கதிரில் கரைந்துவிடு
மனங்களை கடந்துவிடு
அன்பினை மட்டும் தந்துவிடு
மலரும் பூப்போல வாழ்ந்துவிடு
விழும்போது ஆசையும் விடு
மெல்லத் தணியட்டுமே பூமி
சுமைகளை விட்டுவிடு!
எங்கேயும் நிற்காதே
திசையின்றி் தவிக்காதே
உறவெல்லாம் உறவல்ல
இரவுகள் எல்லாம் இருட்டல்ல
நீயே உந்தன் நம்பிக்கை
வாழ்ந்து கடக்கவே வாழ்க்கை!
No comments:
Post a Comment