Thursday, 16 May 2019

எளிதாய் கிடைக்கும் எதுவும் மலிவாய் தெரியும்

தன்னுடைய துயரத்திலும், பிறரின் துயரம் போக்க பாடுபடுவோரை, இகழ்ந்தெல்லாம் மறந்து, இன்முகத்தோடு நமக்கு உதவி செய்பவர்களை, எத்தனை சிரமத்திலும் நமக்காக நேரம் ஒதுக்குபவர்களை, கடன் கொடுத்துவிட்டு பின் அதை தயங்கி திரும்ப கேட்பவர்களை/கேட்காதவர்களை, சாதி பாராட்டாமல் நட்பு பாராட்டுபவர்களை, தன்னை அவமானப்படுத்தினாலும் அவர்களை மன்னித்து அரவணைப்பவர்களை, வசைகளை பொறுத்துக்கொண்டு நேசம் மட்டும் காட்டுபவர்களை எல்லாம் இந்த உலகம் பிழைக்க தெரியாதவர்கள் என்று சொல்லும், அரிதான அமெசான் காடுகளின் மூலிகைகளை நம்பும் மக்கள், அரிதான குணங்களையெல்லாம் அலட்சியப்படுத்துவார்கள், எளிதாய் கிடைக்கும் எதுவும் மலிவாய் தெரியும், எனினும் அன்பு காட்டுங்கள், அன்பினால் இயங்குகிறது உலகம்! ❤️

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!