Thursday, 16 May 2019

கீச்சுக்கள்

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளின் பள்ளியில் மகளுக்காக காத்திருக்க, அவளுக்கு முன் என்னிடம் ஓடி வந்த அவளின் தோழி: “இன்னைக்கு பிரிய தர்ஷினி இனி ஜென்மத்துக்கும் பவித்ராகிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டா ஆன்ட்டி”
“ஏன்?”
“அவதானே லீடர், போர்ட்ல பேசறவங்க நேம் எழுதுறா, ப்ரியா எங்களுக்கு ப்ரெண்டு, ப்ரெண்டு பேரையும் எழுதுவியான்னு சண்டை”
அதற்குள் மகள் வந்துவிட, “ஏன் ப்ரெண்ட் பேரை போர்ட்ல எழுதுற?” என்று கேட்க,
“ஸீ டீச்சர் என்கிட்ட பொறுப்பு கொடுத்திருக்காங்க, அவகிட்ட நான் பேசாதேன்னு சொன்னேன், அவ கேக்கல, ப்ரெண்ட்டா இருந்தாலும் நான் ஹானஸ்டா தான் இருப்பேன், ம்ம்” என்று விறைப்பாய் தலையை திருப்பிக்கொண்டாள். பள்ளியில் வகுப்பு லீடராக பின் பள்ளி லீடராக, நேர்மைடா நியாயம்டா என்று நான் நடந்துகொண்ட நிகழ்வுகளும், நிகழ்ந்த கலாட்டாக்களும் நினைவில் வந்தது, அது ஒரு கனாக்காலம் 😍 இந்த பிள்ளைகள் நேர்மையை நம்பி வளரட்டும், அதற்குள் இந்த பூமி சுத்தமாகட்டும்! ❤️

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!