Thursday 16 May 2019

கண்துடைப்புகள்

வரிசையா முக்கொம்பு, தாமிரபரணி தடுப்பணைகள் உடைவது பற்றி யோசிக்கும் போது, முதலமைச்சர் மனிதர்களுக்கு காய்ச்சல் வந்தது போல் அவைகளுக்கும் திடீர் உடல்நல குறைவால் உடைந்திருக்கும் என்று சொன்னதை பகடி செய்துக்கொண்டே கடப்பது இருக்கட்டும், இவைகளையெல்லாம் சீரமைக்கிறோம் என்று சொல்லி பல கோடிகள் செலவழித்த கணக்கைப் பற்றி யாரும் கேட்கவில்லை! தெர்மாக்கோல் விட்ட போது பத்து லட்சம் என்றார்கள், நாம் தெர்மாக்கோலை மட்டும் கிண்டல் செய்தோம், 8 வழிச்சாலை என்றார்கள், அதிலும் பத்தாயிரம் கோடி திட்டமும், அதைவிட அதிகமாய் சுங்கக் கொள்ளையும் நடைபெற உள்ளது, கர்நாடகத்திலும் கேரளத்திலும் மக்கள் இந்தக்கொள்ளைகளை கேள்வி கேட்பார்கள், நாம் அமைச்சர்களை கேலி செய்வதாய் நினைத்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம், அமைச்சர்கள் இந்நேரம், “இந்த முட்டாள்களை திசைதிருப்ப கொஞ்சம் எகனை முகனையாய் நம்மாள் ஒருவன் பேசினால் போதும், அவனை வைத்து இவர்கள் கும்மியடிக்க நாம் அமைதியாய் கொள்ளையடிப்போம்” என்று அவர்கள் வேலையை கச்சிதமாய் செய்துக்கொண்டு போய் கொண்டே இருப்பார்கள்! உதாரணம் ஸ்டெர்லைட் வழக்கு கண்துடைப்புகள்! 

தமிழகத்தில் பல தேர்ந்த தொழிலாளர்கள் ஏற்கனவே குடிக்கு அடிமையாக்கப்பட்டதில் பல வடமாநிலத்தவர் அந்தத் தொழில்களை கைப்பற்றிக்கொண்டார்கள், அப்படியே ஒவ்வொரு துறையும், படித்தவர்கள் எல்லாம் பணமே பிரதானம் என்று எண்ணியதில் வளங்களும் பறிபோனது, சகட்டுமேனிக்கு வரலாற்றை திரித்து, பொய்யான பரப்புரைகளை பிரதான தேசிய கட்சி பரப்ப, ஜெர்மனிய ரோடுகளை குஜராத் ரோடுகள் என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பும் கூட்டமும் பெருகிவிட்டது, எதையும் ஆய்ந்து தெளியாமல் முஷ்டியை உயர்த்துவதும், கோஷம் எழுப்பதும், பகடிசெய்து விஷத்தை விழுங்குவதெல்லாம் தமிழகத்துக்கு கிடைத்த சாபம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!