Thursday, 16 May 2019

இறுதியாசை


அன்று நான்
இறந்து போயிருந்தேன்
ஏற்கனவே பலமுறை
நான் இறந்திருக்கிறேன்
ஆச்சரியமாக
இன்று என் உடலை
நடுக்கூடத்தில் வைத்து
போர்த்தியிருந்தார்கள்
விருப்பமான படிப்பை
தடுத்த அப்பா
விரும்பிய காதலனை
மறுத்த அம்மா
சுதந்திரம் மறுத்த அண்ணன்
நடத்தையை
புறம் பேசிய உறவுகள்
மனதைக்
கொன்ற கணவன்
வெளிநாட்டில்
தங்கிவிட்ட பிள்ளைகள்
ஏமாற்றம்
தந்த நட்புகள்
எல்லோரும்
குழுமியிருந்தார்கள்
எல்லோரும்
என் மரணத்தைப் பேசினார்கள்
ஒருவர் கூட
பலமுறை கொன்ற
நிகழ்வுகளை பேசவில்லை
சலசலத்த கூட்டத்தில்
எரிப்பதா புதைப்பதா
எது வழக்கம்
என்று யாரோ கேட்க
“ஆச்சிய எரிச்சிடுங்க
பொண்ணா பொறந்த
இந்தப்பொறப்பே வேணாம்
சாமீ,
செத்தப்பிறகாவது என்னை
எரிச்சிடுங்க
இந்த காத்துல கலந்து
போயிடணும் சாமீ!”
என்று ஆச்சி சொல்லிச்சு
நேத்து என்றாள்
அவளின்
ஐந்து வயது பேத்தி!
கிளறிவிடப்பட்ட
மரணங்களின் நினைவில்
நிசப்தத்தில் உறைந்தன
உறவுகள்!

#இறுதியாசை




Image may contain: fire and night

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...