Wednesday, 17 June 2015

அம்மா என்றால்...............

 

அம்மா என்றால் அன்பு காட்டுபவள், அரவணைப்பவள்!

அடிக்கடி சாலையில், எதையோ கொடுத்து,  கைக்குழந்தைகளை மயக்கத்தில் ஆழ்த்தி, சிறுவர் சிறுமிகளின் கல்வியைச் சிதைத்து, கொளுத்தும் வெயிலில், வாகன நெரிசலில், பிச்சை எடுக்க வைக்கப்படும் குழந்தைகளை, அம்மா காப்பாற்ற வேண்டும்!

 சமூக நல அமைப்புகளைக் கொண்டு எந்த முயற்சியை எடுத்தாலும் அது தோல்வியில்தான் முடிகிறது. சாராய வியாபாரத்தை நிறுத்த முடியாவிடினும், அந்தக் குடியினால் குடிக் கெட்டு, தெருவிற்கு வரும் குழந்தைகளையும், ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருந்து, வாழ்க்கைக்காகச் சென்னையில் பிச்சை எடுப்பவர்களையும், இந்த அரசு கண்டு கொள்ள வேண்டும், இவர்களின் மறுவாழ்விற்கு உதவி செய்ய வேண்டும்!

முதுகு வளைந்து, கூழைக்  கும்பிடு போடும் அமைச்சர்கள், உண்மையில் அம்மா என்று உள்ளார்ந்த மரியாதையோடு, அன்போடு அழைத்துக் கொண்டிருப்பார்களேயானால், வெறுமனே கோஷம் போட்டுக் கொண்டிராமல், உண்மையில் ஏழைகளுக்கு அம்மாவின் பெயரைச் சொல்லி உதவி செய்தால், அம்மாவின் பெயரைச் சொல்லி சமூக நலப்பணிகளை, தங்கள் இலாக்காக்களின் வேலைகளைச் செவ்வனே செய்வார்களேயானால், எப்போதும் அம்மா நிரந்தர முதல்வர் மட்டுமல்ல, நிரந்தரப் பிரதமராகவும் ஆகலாம் .... அம்மா என்ற வார்த்தையும் முழுமையடையும்!

 வெறுமனே கோஷம் போடும் அபிமானிகள் இதைச் செய்வார்களா? செய்வார்களா?
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!