Thursday, 18 June 2015

மௌனத்தில் கரையும் காலம்

 
 முற்றத்தில் ரசித்த முழு நிலா
 படித்துச் சிலாகித்த சிறு கவிதை
 புதிதாய் செய்த வேற்றுச் சமையல்
 வேதனையில் கடந்த ஓர் இரவு
 துயருற்ற நோயின் பொழுது
 பெரும்பணி முடித்த அயர்ச்சி
சாரலாய் தீண்டிய பாராட்டு 
 வாழ்த்திய ஓர் உள்ளம்
தோள் கொடுத்த நட்பு
இதயம் தைத்த வசவு 
கன்னம் தடவிய சிறு குழந்தை
சில நூறு உண்டு நிகழ்வுகள்
நேற்றைய பொழுதின் வாசத்தில்!

அசைப்போட்டுக் கொல்லும்
இவ்விரவின் நீட்சியில்
சட்டென்று வந்து தழுவுகிறது மரணம்,
பொழுதுகளின் வாசத்தையோ
மரணத்தில் எழுந்த
மனதின்
ஓலத்தையோ,
எதையுமே பகிரவில்லை நான்,
வெற்று மௌனமே பிடித்தமென்று
இளைப்பாறும் உன்னிடம்!
மௌனமாகவே கரைகிறேன் காற்றில்! 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!