ஏதோ ஓர்நாளில்
அந்த மரத்தில்
மலர்கள் நிறைந்திருந்தன
மலர்களை யாரும் தலையுயர்த்தி
பார்க்கவில்லை
பிறிதொரு நாளில்
அந்த மரம்
இலையுதிர்காலத்தை சந்தித்திருந்தது
காய்ந்த அதன் கிளைகளைப் பற்றி
யாரும் கவலையுறவில்லை
இளைப்பாறிய பறவைகள் மட்டும்
சிறிது வருத்தத்தை சுமந்திருந்தன
முற்றுப்பெறாத ஒரு மாலை வேளையில்
உபயோகமற்ற அரசாங்கப் பணியாக
எஞ்சியிருந்த அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தார்கள்
அப்போதும் அதன் கூக்குரலை
யாரும் கேட்கவில்லை
மனங்கள் மரித்துப்போன பூமியில்
இனி மரங்களுக்கென்ன வேலை?
No comments:
Post a Comment