Saturday, 20 April 2019

நிஜமாய் வலிக்கிறது

அவசரமாய்
சாலையில்
சிறுநீர் கழிப்பவன்

சாலை விதிகளை
மிதித்துவிட்டு
வாகனம் ஓட்டுபவன்

எதையோ
மென்று தின்று
குப்பையை வீசுபவன்

அரசு அலுவலக
வேலையில்
கையூட்டு கேட்பவன்

ஓட்டுச்சாவடிக்கு
செல்லாமல்
கடமை தவறுபவன்

குடித்துவிட்டு
குடல் அழிந்து
குடும்பம் கெடுப்பவன்

குழந்தை முதல்
பேரிளம் பெண்வரை
வன்புணர்ச்சி செய்பவன்

குழந்தைத்
தொழிலாளர்களை
பணியில் அமர்த்துபவன்

இப்படி
அத்தனை
அவன்களிலும்
படித்தவர்கள்
படிக்காதவர்கள்
பேதமில்லா
தேசத்தில்
கல்வியென்பது
கடைச்சரக்கானது
என்பது மட்டுமே
நிஜமாய் வலிக்கிறது!


March 5, 2018

No photo description available.

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...