Saturday, 20 April 2019

யார் தந்த உரிமை

பூ எதுவாக
இருந்தால் என்ன
அழிப்பதற்கு
உங்களுக்கு
யார் உரிமைத்தந்தது?

சாதியின்
போர்வையில்
கீழ்சாதிப்பெண்ணின்
யோனியை
சேதப்படுத்திய
உங்கள்
உறுப்புகள்
புனிதமடைந்துவிட்டதா?

சாதி
வெறியில்
நீங்கள்
கொன்ற குழந்தையின்
இரத்தம்
உங்கள் தாகம்
தீர்த்ததா?

எல்லைச்
சண்டையில்
மதச்சண்டையில்
நீங்கள் குவித்த
பிணங்களின்
நிலங்களில்
உங்கள்
சோறு
விளைந்ததா?

கொலைக்காரர்கள்
நிறைந்த பூமியில்
இன்னமும்
நீங்கள்
சாதிப்பெருமையும்
மதப்பெருமையும்
தூக்கிச்சுமக்கையில்
நீங்கள் உறிஞ்சிய
குருதியின்
நிறங்களில்
மாற்றம்
இருந்ததா?

பூ எதுவாக
இருந்தால் என்ன
அழிப்பதற்கு
உங்களுக்கு
யார் உரிமைத்தந்தது?

February 27, 2018No photo description available.

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...