சென்னையில்
இனி, (டாஸ்மாக் கடைகளில் கவிழ்ந்துக் கிடக்கும் குடிமகன்களைத் தவிர்த்து)
நடமாடிக் கொண்டிருக்கும் மக்களின் நெற்றிகளே மிச்சமிருக்கின்றன போற்றிப்
புகழ்ந்து விளம்பரம் செய்வதற்கு! — feeling exhausted.
-------------------------------------------------------------------------------------------------
எங்கோ
ஓர் எதிர்ப்பார்ப்பில் தோற்கும் ஏதோ ஓர் இயலாமையே, ஆற்றாமையாய் மாறி,
தாங்கிக் கொள்ளும் வேறொரு இடத்தில் கோபமாய், வெறுப்பாய் உமிழ்கிறது!
---------------------------------------------------------------------------------------------------------
கச்சத்தீவில் மீன் பிடிக்கத் தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை
# மத்திய அரசு
ஒருவேளை சீனாவும், பாகிஸ்தானும், பூகோள அமைப்பில் கொஞ்சம் மாறி தெற்கு
பக்கமாய் நகர்ந்து, தமிழ்நாட்டுக்கு அருகில் இருந்திருந்தால், இவர்களுக்கு
ராணுவம் கூடத் தேவைப்பட்டு இருக்காது!
----------------------------------------------------------------------------------------------------------
ஒரு
பள்ளித் தீ விபத்துக்குப் பின், பள்ளிப் பாதுகாப்பைப் பற்றிய விவாதம்,
ஆழ்துளைக் கிணறுகளில் ஏற்படும் தொடர் மரணங்களைத் தொடர்ந்து அதைப் பற்றிய
விவாதம், பள்ளிக்கே சென்று குழந்தையைக் கடத்தியப்பின் பள்ளிகளில்
குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய விவாதம், அதைப்போல, அம்மாவின் புகழ் பாட
ஆர்வக் கோளாறோ, இல்லை அக்கறை இன்மையோ, உயரத்தில் தொடங்கி, சாலை நடுவே
தடுப்புகளில் தொடர்ந்து, நடைபாதைகளைக் கொஞ்சம் ஆக்கிரமித்து, ஏதோ ஒரு
திருமண விழாவிற்கு வருகைத் தந்த முதல்வரை வரவேற்க நேற்று நடைபாதைகளே தெரியா
வண்ணம் விளம்பரப் பலகைகளை அமைத்திருந்ததில், கடும் போக்குவரத்து நெரிசல்,
என்றோ ஒருநாள் இதனால் ஒரு பெரும் விபத்து நடக்காதிருக்கட்டும்...அது
எப்போதும் போல ஒரு விவாதப் பொருள் ஆகாமல் இருக்கட்டும் இறைவா!
---------------------------------------------------------------------------------------------------------
சில வலிகளை மௌனமாய்தான் கடக்க வேண்டி இருக்கிறது!
--------------------------------------------------------------------------------------------------------------
When there is no mutual trust and respect for each other feeling/ opinion there exists no relationship!