Tuesday, 9 September 2014

கீச்சுக்கள்

ஒட்டுக் கேக்க வரும்போது மக்கள் கூட்டம் இருந்தா, சந்தோசம் வருது, அமைச்சர் ஆனப் பிறகு, மக்கள் கூட்டம் பார்த்தா எரிச்சல் வருது, பயமும் வருது!
அரசியல்வாதி vs அமைச்சர், சாலைப் பயண முஸ்தீபுகள்!'

-------------------------------------------------------
காதில் அலைபேசியை வைத்துப் பேசிக்கொண்டே சாலையைக் கடக்கும் பெண்களும், பைக்கில் இருந்தபடி, சாலையைக் கவனிக்காமல் சேலைகளைக் கவனித்துக்கொண்டே பயணிக்கும் ஆண்களும், பெரும்பாலும் படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்!
-------------------------------------------------------------------------------------------
வீட்டிற்கு விருந்தினர் வரும்போது மட்டும் சில பெண்களுக்கு உடம்பு சுகமில்லாமல் போய் விடுகிறது!
---------------------------------------------------------------------------------------------
அழுக்கான சீப்பை வைத்துக் கொண்டு, அத்தனை முறை, தலைமுடியைச் சீவி அழகூட்டுகிறார்கள்.
தலைக்கவசம் அணிந்தால் தலைமுடிக் கலைந்துவிடும், உதிர்ந்துவிடும் என்று, தலைகவசம் அணியாமல், தலைமுடியை மட்டும் பாதுகாக்கிறார்கள்.
வண்டியில் பொருத்தி இருக்கும் கண்ணாடியில் கூட, பின்னே வருவது எமனா, எருமையா என்று பார்க்காமல், வண்டி ஓட்டும்போதும், தலைமுடியைச் சிரத்தையாய்ச் சரிசெய்துக் கொள்கிறார்கள்.

#இதனால் அறியப்படும் நீதி யாதெனில், அழகுக்கு, சுத்தமோ, சுகாதாரமோ, ஏன் உயிரே கூட முக்கியமில்லை!

--------------------------------------------------------------------------------------------------
A starving stomach and an empty heart creates a turbulence within!
----------------------------------------------------------------------------------------------------
I never seen a target setting that's been done so strong to decrease the death rate, increase education rate, decrease crime rate, decrease accident rate and so on in any public welfare measures other than increasing the Tasmaac's sales turn over rate!
#go flat and raise the graphs!

-----------------------------------------------------------------------------------------------------
If love is a crime or sin than my lord marriage is the punishment!
#gazing at the stars with hilarious thoughts! 

------------------------------------------------------------------------------------------------------
ஒரு சலவையில் இந்தியாவின் கரையை நீக்கும் ஏரியல்! - விளம்பரம்

#2G, ஆதர்ஷ், எல்லாக் கரைகளையும் போக்குமா யுவர் ஆனர்?!

---------------------------------------------------------------------------------------------------------------
வீட்டில் பெற்றோர் சொல்படி, பள்ளியில் ஆசிரியர் சொல்படி என்று சொல்லிக் கொடுத்ததை மாற்றி, யாராய் இருந்தாலும் எச்சரிக்கையாய் இரு என்றே இப்போது உள்ளக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டி இருக்கிறது!
# பாலியல் வக்கிரங்கள்

-------------------------------------------------------------------------------------------------------------
Behind every success there is a failure and behind every failure there is someone shattered!
---------------------------------------------------------------------------------------------------
சென்னையில் இனி, (டாஸ்மாக் கடைகளில் கவிழ்ந்துக் கிடக்கும் குடிமகன்களைத் தவிர்த்து) நடமாடிக் கொண்டிருக்கும் மக்களின் நெற்றிகளே மிச்சமிருக்கின்றன போற்றிப் புகழ்ந்து விளம்பரம் செய்வதற்கு! — feeling exhausted.
-------------------------------------------------------------------------------------------------
எங்கோ ஓர் எதிர்ப்பார்ப்பில் தோற்கும் ஏதோ ஓர் இயலாமையே, ஆற்றாமையாய் மாறி, தாங்கிக் கொள்ளும் வேறொரு இடத்தில் கோபமாய், வெறுப்பாய் உமிழ்கிறது!
---------------------------------------------------------------------------------------------------------
கச்சத்தீவில் மீன் பிடிக்கத் தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை
# மத்திய அரசு

ஒருவேளை சீனாவும், பாகிஸ்தானும், பூகோள அமைப்பில் கொஞ்சம் மாறி தெற்கு பக்கமாய் நகர்ந்து, தமிழ்நாட்டுக்கு அருகில் இருந்திருந்தால், இவர்களுக்கு ராணுவம் கூடத் தேவைப்பட்டு இருக்காது!
----------------------------------------------------------------------------------------------------------
ஒரு பள்ளித் தீ விபத்துக்குப் பின், பள்ளிப் பாதுகாப்பைப் பற்றிய விவாதம், ஆழ்துளைக் கிணறுகளில் ஏற்படும் தொடர் மரணங்களைத் தொடர்ந்து அதைப் பற்றிய விவாதம், பள்ளிக்கே சென்று குழந்தையைக் கடத்தியப்பின் பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய விவாதம், அதைப்போல, அம்மாவின் புகழ் பாட ஆர்வக் கோளாறோ, இல்லை அக்கறை இன்மையோ, உயரத்தில் தொடங்கி, சாலை நடுவே தடுப்புகளில் தொடர்ந்து, நடைபாதைகளைக் கொஞ்சம் ஆக்கிரமித்து, ஏதோ ஒரு திருமண விழாவிற்கு வருகைத் தந்த முதல்வரை வரவேற்க நேற்று நடைபாதைகளே தெரியா வண்ணம் விளம்பரப் பலகைகளை அமைத்திருந்ததில், கடும் போக்குவரத்து நெரிசல், என்றோ ஒருநாள் இதனால் ஒரு பெரும் விபத்து நடக்காதிருக்கட்டும்...அது எப்போதும் போல ஒரு விவாதப் பொருள் ஆகாமல் இருக்கட்டும் இறைவா!
---------------------------------------------------------------------------------------------------------
சில வலிகளை மௌனமாய்தான் கடக்க வேண்டி இருக்கிறது!
--------------------------------------------------------------------------------------------------------------
When there is no mutual trust and respect for each other feeling/ opinion there exists no relationship!    
         

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!