Friday 3 March 2017

மஞ்சள் எனக்குப் பிடிப்பதில்லை

இருள் கவிழாத
மாலைக்கதிரவனின்
வெளிச்சப்பொழுதில்
விளையாட்டுத்திடலில்
பந்தெறிந்து கொண்டிருந்த
அவளுக்கு வயது
பத்துப் பனிரெண்டு இருக்கலாம்
பெற்றோர் உடனிருந்தனர்
அவள் கழுத்து முதல்
பாதம் வரை
சுடிதார் தழுவியிருந்தது
நேற்று முன்தினம்
பாலியல் குற்றவழக்கில்
ஐந்தாண்டாகக் குறைந்த
ஏழாண்டுச் சிறைத்தண்டனை
முடிந்து விடுதலையான நான்
அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்
அரசுக் கொடுத்த தையல் இயந்திரம்
வீட்டில் இருந்தது
தைப்பதா அல்லது தணிப்பதா
என்ற குழப்பத்தில்
தணிக்கும் வக்கிரமே மேலோங்க
காரணம் எதுவென்று யோசித்தேன்
அந்தக்குழந்தை
பளீரென்ற மஞ்சள் நிறத்தில்
சட்டை அணிந்திருந்தாள்
மஞ்சள் எனக்குப் பிடிப்பதில்லை

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!