நிதர்சனம் பழகு
--------------------------
அவசரத்துக்கு உதவாத செல்வமும்
துயரத்துக்கு உதவாத நட்பும்
பசிக்கும் போது கிடைக்காத உணவும்
கண்ணீரை துடைக்காத உறவும்
துவள்கையில் தேற்றிடாத கருணையும்
சூல் பொய்த்துக் கலையும் மேகங்கள் போல
மனப்பிம்பம் உடைத்து நிதர்சனம் உணர்த்திச் செல்லும் -
சில வேளைகளில்
உயிர் கொன்று வாய்க்கரிசியும் இட்டுச் செல்லும்!
Friday, 31 May 2013
Thursday, 30 May 2013
பெண்கள் தினம்
பெண்கள்
தின வாழ்த்துக்களால் குவிகிறது எல்லா தகவல் இணைக்கும், பரப்பும்
சாதனங்களும் இந்த ஒரு தினத்தில்...ஆனால் இந்த தினத்திற்கு முன்பும்,
இப்போதும், இனி எப்போதும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது/இருக்கும்!
உங்களின் தாய்க்கு என்ன பிடிக்கும் என்று கேட்டதுண்டா? உங்கள் சகோதரிக்கு முடிவெடுக்கும் உரிமையை தந்ததுண்டா? அதிக வரதட்சணை, சாதி, மதம் என்ற பேதம் துறந்து காதலித்த பெண்ணை மணந்ததுண்டா? மனைவியை தோழியாய் நடத்தியதுண்டா? தோழிக்கு ஒரு நல்ல தோழனாய் இருந்ததுண்டா? மேலாதிகாரி பெண் என்றால், பெண் என்ற இகழ்ச்சி மனதில் ஒருதினமேனும் இல்லாமல் இருந்த நிலை உண்டா? அழகை துறந்து, மன அழகை மட்டும் வியந்து ஒரு பெண்ணை நேசித்ததுண்டா? பிடிக்கவில்லை என்று உங்கள் காதலி விலகினால், அவளை தூற்றாமல் மரியாதையுடன் நடத்திய மனம் உண்டா? மனதில் கள்ளமில்லாமல் ஒரு பெண்ணைக் கண்டதுண்டா?பயணத்தில் அருகில் உள்ள பெண்ணை உரசாமல் விலகிய தருணமுண்டா? .....
தாய்மை உணர்வு கொண்ட தாயுமானவர்கள் மட்டுமே பெண்களை வாழ்த்தும் உரிமை பெற்றவர்கள்! மனிதாபிமானம் கொண்டு வாழும் ஆண்கள் அனைவருக்கும் என் நன்றி! என் வாழ்வில், வெவ்வேறு உறவு, நட்பு நிலையில் எனக்கு நல்ல துணையாய், வழிகாட்டியாய் இருக்கும் எல்லோருக்கும் என் நன்றி!
# மற்றபடி பெண்கள் தினம் என்பது, வணிகச்சந்தையில் இன்னுமொரு ஏமாற்று வேலை!

Gist
திரைக்காட்சியில்
காணும் சித்திகரிக்கப்பட்ட துயரத்துக்கு "உச்" கொட்டி, ஐயோ பாவம்! என்று
பரிதாபப்படும் நமக்கு வாசலில் பசியால் ஒலிக்கும் ஒரு ஏழையின் யாசகக் குரல்
ஒருபோதும் கேட்பதேயில்லை!
--------------------
இப்படி வெயில் கொளுத்துகிறது என்று குறைப்பட்ட அம்மாவிடம் சொன்னேன், வெகு நாள் கோபம் சட்டென்று தணிவது போல், சட்டென்று மழை வரும், பூமி குளிரும் என்று, இதோ மழை பொழிகிறது, சில்லென்று காற்று வீசுகிறது!
இயற்கையின் துணையே அலாதி!
--------------------
எப்போதும் அன்பாய் இருப்பவர்களின் ஒரு கணத்துக் கோபமும், எப்போதும் கோபமாய் இருப்பவர்களின் சில நேரத்தின் அன்பும், பாலைவனச் சோலை போல காட்சி பிழை புரிகிறது நெஞ்சில்!
----------------------
சலசலவென்ற குழந்தைகளின் ஓயாத பேச்சில், கடவுள் ஆழ்ந்த அமைதியில் நிறைந்திருக்கிறார்!
நாம் வாழ்வதற்கான சக்தி இங்கிருந்தே தொடங்குகிறது!

மனம்
நீர் தரும் கருமேகத்திற்கு
நிறைவைத் தருவது
நிலத்தின் பசுமை மட்டுமே!
மேகம் வற்றி போகையில்
பசுமை சாரல் வீசிடும்
மேகம் மீண்டும் சூல் கொள்ளும்!
சுழற்சி தவறினால் பூமி சுருங்கிடும்!
நிறைவைத் தருவது
நிலத்தின் பசுமை மட்டுமே!
மேகம் வற்றி போகையில்
பசுமை சாரல் வீசிடும்
மேகம் மீண்டும் சூல் கொள்ளும்!
சுழற்சி தவறினால் பூமி சுருங்கிடும்!
Life
பலரது வாழ்க்கை அவர்களுக்கேயான வரம், சிலரின் வாழ்க்கை பலர் வாழ்வதற்கான வரம், வாழ்வாதாரம்!
எல்லோர் வாழ்க்கையும் ஒரு வரம்தான்!
Life is a boon for few to cherish! The boons of
sacrificing souls are a blessing in disguise for
others to live!
Life is a boon for all!
எல்லோர் வாழ்க்கையும் ஒரு வரம்தான்!
Life is a boon for few to cherish! The boons of
sacrificing souls are a blessing in disguise for
others to live!
Life is a boon for all!
கடல்
நத்தையின் முத்தையோ
மூழ்கியோ செல்வத்தையோ
எதையும் அறியேன் நான்
பல்வேறு பாதங்களில்
ஒடிச் சென்று பணிவதை விட
# கடல்
மூழ்கியோ செல்வத்தையோ
எதையும் அறியேன் நான்
பல்வேறு பாதங்களில்
ஒடிச் சென்று பணிவதை விட
# கடல்
பொம்மலாட்டம்
கைக்கு கிடைத்த பொம்மை அது
கைக்கு அடக்கமான பொம்மை அது
உடை மாற்றி உடை கொடுத்து
சிகை கலைத்து வண்ணம் கொடுத்து
உறுப்புக்களை பிரித்து - பின் ஒன்று சேர்த்து
அவரவர்க்கு பிடித்த விளையாட்டு -
குழந்தைகள் ஆடி களைத்தனர்
பொம்மையுடன்!
வீசிச் சென்ற பொம்மையும் பிள்ளையாய்
ஆடிக் களித்திட ஏங்கி நின்றது - பின்
கனவு கலைத்து - மீண்டும் பொம்மையாய்
விழுந்த இடத்தில் உறங்கச் சென்றது!
விழித்தெழாத பொம்மைகள் வீடெங்கும்
வீழ்ந்து தேய்ந்த பொம்மைகள் நாடெங்கும்
நடக்கிறது பொம்மலாட்டம் வீதியெங்கும்!
Subscribe to:
Posts (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
God and religion, a humongous topic! Is there a God, might be or not, it depends upon the belief of people. God is one, and it’...