Thursday 30 May 2013

Gist

திரைக்காட்சியில் காணும் சித்திகரிக்கப்பட்ட துயரத்துக்கு "உச்" கொட்டி, ஐயோ பாவம்! என்று பரிதாபப்படும் நமக்கு வாசலில் பசியால் ஒலிக்கும் ஒரு ஏழையின் யாசகக் குரல் ஒருபோதும் கேட்பதேயில்லை!
--------------------

இப்படி வெயில் கொளுத்துகிறது என்று குறைப்பட்ட அம்மாவிடம் சொன்னேன், வெகு நாள் கோபம் சட்டென்று தணிவது போல், சட்டென்று மழை வரும், பூமி குளிரும் என்று, இதோ மழை பொழிகிறது, சில்லென்று காற்று வீசுகிறது!

இயற்கையின் துணையே அலாதி!

--------------------

எப்போதும் அன்பாய் இருப்பவர்களின் ஒரு கணத்துக் கோபமும், எப்போதும் கோபமாய் இருப்பவர்களின் சில நேரத்தின் அன்பும், பாலைவனச் சோலை போல காட்சி பிழை புரிகிறது நெஞ்சில்!
----------------------

சலசலவென்ற குழந்தைகளின் ஓயாத பேச்சில், கடவுள் ஆழ்ந்த அமைதியில் நிறைந்திருக்கிறார்!
நாம் வாழ்வதற்கான சக்தி இங்கிருந்தே தொடங்குகிறது!
 
 

---------------------- 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!