Thursday, 30 May 2013

பெண்கள் தினம்

பெண்கள் தின வாழ்த்துக்களால் குவிகிறது எல்லா தகவல் இணைக்கும், பரப்பும் சாதனங்களும் இந்த ஒரு தினத்தில்...ஆனால் இந்த தினத்திற்கு முன்பும், இப்போதும், இனி எப்போதும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது/இருக்கும்!

உங்களின் தாய்க்கு என்ன பிடிக்கும் என்று கேட்டதுண்டா? உங்கள் சகோதரிக்கு முடிவெடுக்கும் உரிமையை தந்ததுண்டா? அதிக வரதட்சணை, சாதி, மதம் என்ற பேதம் துறந்து காதலித்த பெண்ணை மணந்ததுண்டா? மனைவியை தோழியாய் நடத்தியதுண்டா? தோழிக்கு ஒரு நல்ல தோழனாய் இருந்ததுண்டா? மேலாதிகாரி பெண் என்றால், பெண் என்ற இகழ்ச்சி மனதில் ஒருதினமேனும் இல்லாமல் இருந்த நிலை உண்டா? அழகை துறந்து, மன அழகை மட்டும் வியந்து ஒரு பெண்ணை நேசித்ததுண்டா? பிடிக்கவில்லை என்று உங்கள் காதலி விலகினால், அவளை தூற்றாமல் மரியாதையுடன் நடத்திய மனம் உண்டா? மனதில் கள்ளமில்லாமல் ஒரு பெண்ணைக் கண்டதுண்டா?பயணத்தில் அருகில் உள்ள பெண்ணை உரசாமல் விலகிய தருணமுண்டா? .....

தாய்மை உணர்வு கொண்ட தாயுமானவர்கள் மட்டுமே பெண்களை வாழ்த்தும் உரிமை பெற்றவர்கள்! மனிதாபிமானம் கொண்டு வாழும் ஆண்கள் அனைவருக்கும் என் நன்றி! என் வாழ்வில், வெவ்வேறு உறவு, நட்பு நிலையில் எனக்கு நல்ல துணையாய், வழிகாட்டியாய் இருக்கும் எல்லோருக்கும் என் நன்றி!

# மற்றபடி பெண்கள் தினம் என்பது, வணிகச்சந்தையில் இன்னுமொரு ஏமாற்று வேலை!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...