
கைக்கு கிடைத்த பொம்மை அது
கைக்கு அடக்கமான பொம்மை அது
உடை மாற்றி உடை கொடுத்து
சிகை கலைத்து வண்ணம் கொடுத்து
உறுப்புக்களை பிரித்து - பின் ஒன்று சேர்த்து
அவரவர்க்கு பிடித்த விளையாட்டு -
குழந்தைகள் ஆடி களைத்தனர்
பொம்மையுடன்!
வீசிச் சென்ற பொம்மையும் பிள்ளையாய்
ஆடிக் களித்திட ஏங்கி நின்றது - பின்
கனவு கலைத்து - மீண்டும் பொம்மையாய்
விழுந்த இடத்தில் உறங்கச் சென்றது!
விழித்தெழாத பொம்மைகள் வீடெங்கும்
வீழ்ந்து தேய்ந்த பொம்மைகள் நாடெங்கும்
நடக்கிறது பொம்மலாட்டம் வீதியெங்கும்!
No comments:
Post a Comment