Friday, 23 August 2013

பதுக்கல்

சூழும் கருமேகங்களைக்
காற்று கடத்தத் துடிக்க 

நீண்ட நெடு மரங்கள்
பாங்காய் அதனைச் சிறை பிடிக்க 

காற்றில் நெகிழ்ந்து,
மரங்களின் வருடலில் சிலிர்த்து
மேகம் உருகிடும்...
மழையாய்

தோட்டத்தில் துள்ளும் கன்று
ஆடிக் கலைத்திட
அம்மா என்ற குரலில்
பசுவின் அருகில் சென்றிட 
கன்று நாவால் மடி வருட,
தாய்மையில் நிறைந்து
பசு, அன்பை சுரந்திடும்
 பாலாய்

எந்திர உலகத்தில்
நாளை வரும் என்ற சோம்பலில்
அன்பைக் கூட அளவிட்டு
மனமில்லாமல் மடிந்த பின்
தரும் நம் பதுக்கல்
ஆற்றல் மட்டும் கைவரவில்லை
ஏனோ இயற்கைக்கு இயற்கையாய்

1 comment:

  1. /// அன்பைக் கூட அளவிட்டு .... ///

    இன்றைய நிலை அப்படித்தான் ஆகி விட்டது....!

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!