எதில் எதில் விழுகிறேனோ
அது அதுவெனவே ஆகுவேன்
அண்டம் விரிய பரந்து இருப்பேன்
மலைத்தொடர்ச்சியில் முகடாய் விரிவேன்
நீங்கள் கல்லை எறிந்தால் சிதறுவேன்
கையை குவித்தால் தளும்புவேன்
பாதைத் திறந்தால் பயணம் செய்வேன்
பச்சை வளர்த்தால் வளம் தருவேன்
தளர்ந்த பொழுதில் உங்கள் தாகம் தீர்ப்பேன்
விடுதலை தந்தால் நீண்டு வளர்வேன்
குடுவையில் அடைத்தால் சுருங்கிப்போவேன்
உங்களின் மனம்போலே காண்பீர் என் வடிவம்
நான் நீர்!
அது அதுவெனவே ஆகுவேன்
அண்டம் விரிய பரந்து இருப்பேன்
மலைத்தொடர்ச்சியில் முகடாய் விரிவேன்
நீங்கள் கல்லை எறிந்தால் சிதறுவேன்
கையை குவித்தால் தளும்புவேன்
பாதைத் திறந்தால் பயணம் செய்வேன்
பச்சை வளர்த்தால் வளம் தருவேன்
தளர்ந்த பொழுதில் உங்கள் தாகம் தீர்ப்பேன்
விடுதலை தந்தால் நீண்டு வளர்வேன்
குடுவையில் அடைத்தால் சுருங்கிப்போவேன்
உங்களின் மனம்போலே காண்பீர் என் வடிவம்
நான் நீர்!
No comments:
Post a Comment