Tuesday, 28 January 2014

மனக் குழப்பம்

இதில்தான் துவங்கும் அறிவியல்!
இதில்தான் தெளியும் காதல்!
இதில்தான் முடியும் வாழ்க்கை!
#மனக் குழப்பம்!

தாகம்

மரங்கள் இல்லாமல்
பூமி வறண்டுப்போக
ஈரம் இல்லாமல்
மனிதர்களும் வறள்கிறார்கள்!
தாகம்! 

Thursday, 23 January 2014

தாய்மை

இங்கும் அங்கும்
தாவியது தனியே,
ஏதோ ஒரு கொட்டையை
கண்டெடுத்துக்
கையில் கொண்டது,
உறுத்து நோக்கும்
என் இருவிழிகள் கண்டது -
நானும் தனியே,
என்ன நினைத்ததோ?
அச்சிறுக் கொட்டையை
என்னிடம் வீசிச்
சென்றாள்
அந்த அணில் அம்மா!

கண்ணாமூச்சிக் காதல்!

தேய்ந்தும் வளர்ந்தும்
நிலவதன் காதலை
உணர்த்திக்கொண்டே இருக்க,

மறைந்து எழுந்து விளையாடும்
ஒரு நட்சத்திரம் - நேசத்துடன்
தன் காதலை
மௌனக் கூட்டில் அடைக்காக்கிறது!

அது மௌனம் கலையும் வேளையில்,
விண்ணில் மாற்றம் நிகழலாம்,
நிலவது பூமியின் பின்னே மறையலாம்
மீண்டும் அந் நட்சத்திரம்
தன் மௌனத்தவம் தொடரலாம்! 

வானமே எல்லை!

கூண்டுக்குள் கிளி
இருக்கும், அழகாய்!
திறந்து விடுங்கள்,
வாழ்ந்திடும் அது
உயிர்ப்போடு,
தான் நினைக்கும்
எல்லைக்குள்! 

விமர்சனங்கள்!

ஒரு வெள்ளுடுப்பில்,
நெற்றியில்
சிறு கீற்றுச் சந்தனத்துடன்
கேரளத்துக் குட்டியாகவும்,

கால்சராயில், கண்மறைக்கும்
கண்ணாடியில் -
கிறிஸ்தவப் பெண்ணாகவும்,

கோவிலின் வாசலில்
வியர்வையில் விழுந்து விட்ட
நெற்றிப் பொட்டினினால்,
முகமதியரின் மகளாகவும்,

குலம் அறிந்து
கொண்டவர்களுக்கு
அப்பனின் பெண்ணாகவும்,

சாதி அறிய
முடியாதவர்களுக்கு
வேற்றுக் கிரக வாசியாகவும்,

எடுத்த முடிவை
மாற்றிக்கொள்ள மறுக்கையில்
திமிர் பிடித்தவளாகவும்,

எதிர்த்துக் கொஞ்சம்
பேசுகையில்,
சம்பாதிக்கும்
தினவெடுத்தவளாகவும்,

நீங்கள் துயருரும்போது
நினைவில்
வரும் தோழியாகவும்,

ஏதோ ஒன்றில்
பெண்ணை உருவகப்படுத்தி,
என்னைக் கடக்கும் நீங்கள்,  
இனி எப்போதும்
அறியப்போவதில்லை - 
யாதொரு உள்ளத்தையும்,
உங்கள் ஆழ்மன
அடிமைக் கூட்டிலிருந்து 
முயன்று நீங்கள்,
வெளியேறும் நாள் வரை!

Tuesday, 21 January 2014

வெற்றிடம்

உருகி உருகி
இறைத்துக் கொண்டிருந்த
வெளிச்சம்
உணரவில்லை, நானும்!
கரைந்தோ, காற்றிலோ
அணைந்த வேளையில்,
இருட்டை மட்டும்
உடன் உணர்ந்தேன்
அம் மெழுகுவர்த்தி
அணைந்த போது! 

Sunday, 19 January 2014

அடப் போங்கடா!

எத்தனை முறை அழைப்பது?
நெஞ்சு நெகிழ அழுதாள்
முதியோர் இல்லத்தில் தாய்!
அழைக்காமல் வந்து நின்றான்,
அந்த இறுதி ஊர்வலத்தில் மகன்!
பிணங்களுக்குத் தெரிந்திடுமா
நீ தரும் மலர்களின் வாசனை?!

Saturday, 18 January 2014

இருளின் வெளிச்சம்!

 இருட்டைக் கண்டு
பயமில்லை அவளுக்கு

வெளிச்சத்தில் உழல்பவர்களுக்கு
இருட்டைப் பற்றித் தெரிந்திருக்காது

வெளிச்சத்தில் கூட மனிதர்களின்
இருட்டான பக்கங்களைப் பார்க்க
நேர்ந்தவளுக்கு - இருட்டின்
வரிவடிவங்களே தோழமை!

இருளின் அமைதியில்
ஆழ்ந்திருக்கும் மோனத்தை
இருளை நேசிக்கும் உள்ளத்தை -
ஓர் இருளைக் கடக்காதவரை
நீங்கள் உணர்ந்திடல் அரிது !

பொங்கல்

பள்ளியில் எழுதியது நட்புக்காக...இப்போது நட்புகளுக்காக; மீள்!

வாழ்வின் இன்னல்கள் பனிபோல் விலகி,
புதுமலர் போல் மலர்ந்து மணம் வீசி,
கண்களில் நம்பிக்கை ஒளி பொங்கி
உள்ளத்தில் ஊக்கம் நிறைந்தோங்கி
என்றும் மகிழ்வுடன், மனம் நிறைந்து நீ வாழ
இத் தைத் திருநாளில்,
உழவர்களின் மகிழ்ச்சிப் பெருநாளில்
தமிழர்களின் வாழ்வில் ஒளிக்கூட்டும் இந்நாளில்
"பொங்கலோ பொங்கல்" என்று உரத்துக் கூவி
கதிரவனை வரவேற்று மகிழும் நன்னாளில்
இவளின் மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

வேதனை

வீசியெறிப்பட்ட கல்லும்
வெளிப்படுத்திய கடுஞ் சொல்லும்
தவறாது செய்துவிடுகின்றன
ஓர் உயிர் கொலையை!
# வேதனை

விலைமாது

அவள் வலிகளையும்
விழுங்கி விடும் வறுமை!
# விலைமாது

லஞ்சம்/கையூட்டு

Photo: இந்தப் பிச்சையில், 
கொடுப்பவர் வயிறு எரிந்தும், 
பெறுபவர் அதிகாரத்தோடும், 
இந்தப் பரிவர்த்தனையில் 
கொடுப்பவன் தாழ்ந்தும் 
பெறுபவன் வளர்ந்தும்! 
வெட்கமே இல்லாமல் 
நடக்குது வியாபாரம்! 

#லஞ்சம்/கையூட்டு
இந்தப் பிச்சையில்,
கொடுப்பவர் வயிறு எரிந்தும்,
பெறுபவர் அதிகாரத்தோடும்,
இந்தப் பரிவர்த்தனையில்
கொடுப்பவன் தாழ்ந்தும்
பெறுபவன் வளர்ந்தும்!
வெட்கமே இல்லாமல்
நடக்குது வியாபாரம்!

#லஞ்சம்/கையூட்டு

தினக் கூத்து

கீச்சுக்கள்

To those politicians who proclaim t

he release of TN fishermen as their self victory, "do you have the courage to accept your failure tomorrow, if the TN fishermen gets harassed by the Srilankan once again? And can you take or at least reacts against SL Govt, like the way you have reacted and acted upon for Devayani against U.S?
# The problem of TN people will come to politicians memory only during elections!

---------------------------------------------------------------------
 
BJP will call out Congress's Corruptions and we will elect BJP, then Congress will call out BJP's corruptions and we will elect Congress, so on and so forth in TN, here the DMK or AIADMK or new parties gets merged and no remedy for TN or India in the political arena!
----------------------------------------------------------------
1.The parties or the respective politician should be banned in the elections till the corruption charges or cleared in the court of law or else...........
2. Put one ruling (time) table and let's allow each party to rule and loot the country as long as and as much as they wish....bcoz....
# Man, we got used to corruptions!

------------------------------------------------------------------------

You pay them tax, you give them job, you pay their salary, you give them the right to decide on you.
But still, you need to pay more for what you have employed them and they will give a small portion of your money in penny and kind as a gift to you for your foolishness!
# Tax is rightful, paying more is bribe, decision makers are rulers, penny is free and all these comprises the qualities of 'DEMOCRACY'!

------------------------------------------------------------------------------

ஒருநாளில் முடிந்துவிடும் வாழ்க்கை என்றால்
இங்கே எல்லாமே மாறிவிடும்!
#இன்றே வாழ்தல் அறம்!
--------------------------------------------------------------------------
யாருக்காவும் எதற்காகவும்
மரணம் மட்டும் காத்திருப்பதில்லை!

மரணிக்கும் தேதி தெரிந்துவிட்ட பின்
காத்திருப்பதிலும் அர்த்தம் இல்லை!
----------------------------------------------------------------------------
எளிதில் கிடைத்துவிடும்
எதற்கும் மதிப்பே இல்லை!
# அலட்சியம்
-------------------------------------------------------------------
Photo: தினம் ஒரு கதை எழுதுவான் மகன், தினம் ஒரு கதை சொல்கிறாள் மகள்.... 

ஒருநாள் இப்படி ஒரு கதை சொன்னாள்....
 
"அம்மா, எ வெரி பிக் பாரெஸ்ட், வெரி வெரி நைஸ் யு நோ? " 
"ஒகே, அப்புறம்?"
"அது ஒரு பெரிய காடு...அங்கே ஒரு ஹன்ட்டர் போயிட்டு இருந்தான்...."
" சரி.....அப்புறம்... "
"யு நோ, இட்ஸ் வெரி வெரி ப்யூட்டிஃபுள்.....ஹன்டர் போய்க் கிட்டே இருந்தான்..."

இதையே மேலும் இரண்டு முறை சொல்ல, கொஞ்சம் பொறுமை இழந்து நான், "சரி எவ்வளவு நேரம் போய்கிட்டே இருப்பான்....?" 

"அம்மா, அது ஒரு பெரிய காடுன்னு சொன்னேன் இல்ல....சீக்கிரம் போக முடியுமா? இது கூடத் தெரியலை அம்மாவுக்கு..." 
#ஞே!
அந்தப் பெரிய காட்டில் இன்னும் பயணித்துக் கொண்டே இருக்கிறேன்! :-) 
 
தினம் ஒரு கதை எழுதுவான் மகன், தினம் ஒரு கதை சொல்கிறாள் மகள்....

ஒருநாள் இப்படி ஒரு கதை சொன்னாள்....

"அம்மா, எ வெரி பிக் பாரெஸ்ட், வெரி வெரி நைஸ் யு நோ? "
"ஒகே, அப்புறம்?"
"அது ஒரு பெரிய காடு...அங்கே ஒரு ஹன்ட்டர் போயிட்டு இருந்தான்...."
" சரி.....அப்புறம்... "
"யு நோ, இட்ஸ் வெரி வெரி ப்யூட்டிஃபுள்.....ஹன்டர் போய்க் கிட்டே இருந்தான்..."

இதையே மேலும் இரண்டு முறை சொல்ல, கொஞ்சம் பொறுமை இழந்து நான், "சரி எவ்வளவு நேரம் போய்கிட்டே இருப்பான்....?"

"அம்மா, அது ஒரு பெரிய காடுன்னு சொன்னேன் இல்ல....சீக்கிரம் போக முடியுமா? இது கூடத் தெரியலை அம்மாவுக்கு..."
#ஞே!
அந்தப் பெரிய காட்டில் இன்னும் பயணித்துக் கொண்டே இருக்கிறேன்!
feeling blessed.
-------------------------------------------------------------------------------------------
 
கீச்சுக்கள்

தவறான ஒரு பழக்கத்தைக் கைவிடுவதற்கும், புதிதாய் ஒரு நல்ல பழக்கத்தை மேற்கொள்வதற்கும் வயதோ, நேரமோ, தகுதியோ ஒருபோதும் தடையில்லை, முரண்டுப் பிடிக்கும் நம் மனமே ஒற்றைக் காரணம்!
 --------------------------------------------------------
People start thinking about their beloved only during their absence and the world is ready to forego your mistakes and to praise your contributions only when you die!
------------------------------------------------------------
நிழலைக் கூடக் கேள்வி கேட்காமல் இருந்தால் தான்
நிதர்சனதுக்கும் நிம்மதி!

-----------------------------------------------------------------
பிடிக்கும்போது கிடைக்கிறது
பிடிக்காதபோது கிடைப்பதில்லை
#நேரம்
 
-------------------------------------------------------
பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தோழியின் கடைசித் தங்கையின் திருமணத்திற்குச் செல்ல நேர்ந்தது, உறவுகள் நிறைந்த சபையில், அவளின் மொழி எனக்குத் தெரியாது என்பதற்காக மொத்த உறவுகளும் எனக்குத் தெரிந்த மொழியில் பேசியதும், உறவுகளிடம் பேசினாலும், எனக்குத் தேவையில்லை என்றாலும் உடனே எனக்கு மொழிப்பெயர்த்துக் கூறிய பாங்கும், எனக்குப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்று நானே கூறாமல், நினைவு வைத்துக் கொண்டு மொத்த உறவுகள் செய்த விருந்தோம்பலும், நான்தான் பெரியம்மா, நான் சித்தி என்று தானே முன்வந்து அறிமுகம் செய்து கொண்டு குடும்ப நிகழ்வுகளைத் தங்கள் மகளின் நட்பை மதித்துப் பகிர்ந்து கொண்ட விதமும், பல வருடங்கள் ஆனாலும் சாதிகளையும், மதங்களையும் கடந்து நினைவில் நீக்கமற நிறைந்து விட்ட அன்பைப் பறைசாற்றியது!.

எல்லா எளிய மனிதர்களும் அன்பானவர்களே!
சாதியும் மதமும் பூசல்களும் சண்டைகளும் எளிய மனிதர்கள்
ஒன்று சேராமல் இருக்கவும், பதவிக்காகவும், பணத்திற்காகவும் ஏமாற்றுகாரர்கள் வலியவர்களாய், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட/படும் காட்சிப் பிழைகளே!

#மதம் இல்லை நல்மனம் மட்டுமே!

Photo: பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தோழியின் கடைசித் தங்கையின் திருமணத்திற்குச் செல்ல நேர்ந்தது, உறவுகள் நிறைந்த சபையில், அவளின் மொழி எனக்குத் தெரியாது என்பதற்காக மொத்த உறவுகளும் எனக்குத் தெரிந்த மொழியில் பேசியதும், உறவுகளிடம் பேசினாலும், எனக்குத் தேவையில்லை என்றாலும் உடனே எனக்கு மொழிப்பெயர்த்துக் கூறிய பாங்கும், எனக்குப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்று நானே கூறாமல், நினைவு வைத்துக் கொண்டு மொத்த உறவுகள் செய்த விருந்தோம்பலும், நான்தான் பெரியம்மா, நான் சித்தி என்று தானே முன்வந்து அறிமுகம் செய்து கொண்டு குடும்ப நிகழ்வுகளைத் தங்கள் மகளின் நட்பை மதித்துப் பகிர்ந்து கொண்ட விதமும், பல வருடங்கள் ஆனாலும் சாதிகளையும், மதங்களையும் கடந்து நினைவில் நீக்கமற நிறைந்து விட்ட அன்பைப் பறைசாற்றியது!. 

எல்லா எளிய மனிதர்களும் அன்பானவர்களே! 
சாதியும் மதமும் பூசல்களும் சண்டைகளும் எளிய மனிதர்கள் 
ஒன்று சேராமல் இருக்கவும், பதவிக்காகவும், பணத்திற்காகவும் ஏமாற்றுகாரர்கள் வலியவர்களாய், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட/படும் காட்சிப் பிழைகளே!

#மதம் இல்லை நல்மனம் மட்டுமே! 
------------------------------------------------------------------------------------
எல்லாம் கிடைக்கப் பெற்றவர்களுக்கு
ஏதோ ஒன்று இல்லாதவர்களின்
தேவை என்பது நகைப்புக்குரியதாகவே தோன்றும்!
#சோறு இல்லைனா பிரட் சாப்பிடுங்க!(இப்பவும் அப்படிதான்!)
feeling இங்கே எல்லாமே அப்படிதான்!
----------------------------------------------------------------------------------------
மனம் புரியா நேரத்தில்
மௌனத்தில் அர்த்தம் இல்லை!
--------------------------------------------------------------------------------------------
பசிக்கு உணவை நாள் நட்சத்திரம் பார்த்துதான்
தரவேண்டும் என்றால் - குறித்த முஹுர்த்தத்தில்
பால் மற்றுமே ஊற்ற முடியும்!
#அன்னதான அலம்பல்கள்
--------------------------------------------------------------------------
Photo: வெறுப்பை 
யார் வேண்டுமானாலும் விதைக்கட்டும், 
எதிர்கொள்ளும் நிலம் 
அன்புடையதாய் இருக்கட்டும்-அதில் 
நிறைந்திருக்கும் 
அன்பின் விதைகள் மட்டுமே முளைக்கட்டும்! 
  
வெறுப்பை
யார் வேண்டுமானாலும் விதைக்கட்டும்,
எதிர்கொள்ளும் நிலம்
அன்புடையதாய் இருக்கட்டும்-அதில்
நிறைந்திருக்கும்
அன்பின் விதைகள் மட்டுமே முளைக்கட்டும்!

------------------------------------------------------------------------------------------------
Photo: எச்சரிக்கை: 
இது பேக் (Fake) "ஐ.டி" களுக்கு மட்டும்! நண்பர்களுக்கும், இதயம் பலகீனமானவர்களுக்கும் அல்ல! :-)
---------------------------------------------------------------------------------
எதிரே இருக்கும் பெண்ணைப் பார்த்தப் போது, இந்தக் குழந்தை பொண்ணா (பின்னாளில் சொல்லக் கேட்டது) அந்தப் பிசாசோட சண்டைப்  போட  போகுது? எதிராளின் உயரம் கூட இல்லையே, "மாஸ்டர் நீங்க உண்மையாத்தான் சொல்றீங்களா?", அவனுக்குப் பலத்த சந்தேகம், "இங்கே பாரும்மா, மூக்கு உடையலாம், அங்கே இங்கே அடிபடலாம், அப்புறம் இப்படி ஆயிடுச்சுன்னு வருத்தப்படக் கூடாது, சரியா? 
"அண்ணா நீங்க பயப்படாதீங்க, அவங்களுக்கு எதுவும் ஆகமா நான் பார்த்துக்குறேன்" என்று சொல்லி ஈயென்று இளித்த பெண்ணை, பார்த்துச் சிரித்துக்கொண்டே அவன், கலையைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான்.... 

கொஞ்ச நேரத்தில் அண்ணனுடைய மூக்கு உடைந்து, வயிற்றில் அடிபட்டு, அந்தப் பெண்ணின் கைகளில் ரத்தம்...... 
உடையில் ஆங்கங்கே சிந்திய ரத்தத்தோடு, களம் இறங்கி, இங்கேயும் அங்கேயும் போக்குக் காட்டி, எதிரே பிசாசு என்று வர்ணிக்கப்பட்ட ஒரு மலை மங்கை, போட்டியில் தடை செய்யப்பட்ட ஓர் உதையை அந்தப் பெண்ணின் வயிற்றில் ஆழமாய் இறக்க?! 

....அப்புறம் என்ன?.....தங்கச்சிக்கு கராத்தேவோடு, தெருச் சண்டை, அண்ணனோட இட்ட சண்டை, தோழியோடு நடந்த குடுமிப்புடிச் சண்டை எல்லாம் நினைவில் வந்து...கொஞ்ச நேரத்தில் டண்டனக்கா டனக்குனக்கா தான்.... பிசாசின் மூக்கு உடைந்து, உதடு கிழிபட்டு, கீழே சாய்ந்தவள் ரொம்ப நேரம் எழுந்திருக்கவே இல்லை.... 

வாங்கிய கோப்பையோடு, கட்டுகளோடு படுத்திருந்த சீனியரிடம் போய், "அண்ணா உங்க மூக்கு ரொம்ப ராசியான மூக்குன்னா.....இது உங்களுக்குதான்னா என்று பவ்வியமாய் நீட்ட...." அண்ணனின் முகம் கவுண்டமணியின் பாவனையில் போனது.....மாஸ்டர் இடி இடியென்று சிரிக்க ஆரம்பித்தார் அன்றிலிருந்து! 

பயபுள்ளைகள எதெல்லாம் சொல்லி பயமுறுத்த வேண்டி இருக்கு! இதுக்கும் அடங்கலைனா அப்புறம் டெக்னாலஜிய யூஸ் பண்ண வேண்டியதுதான்   

எச்சரிக்கை:
இது பேக் (Fake) "ஐ.டி" களுக்கு மட்டும்! நண்பர்களுக்கும், இதயம் பலகீனமானவர்களுக்கும் அல்ல!

feeling determined. 
------------------------------------------------------------------------------------
 
Wednesday, 15 January 2014

காணவில்லை!

நன்றி! தி ஹிந்து!

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article5577900.ece

வருடந்தோறும் குழந்தைகள் காணாமல் போகிறார்கள், பெற்றவர்களைத் தவிரத் துடிப்பவர் யாருமில்லை இங்கே. 

நம்முடைய உறவு ஒன்று இறந்து விட்டால், சிறிது காலத் துயரத்திற்குப் பின் மனம் ஒரு வகையில் அந்த இழப்பில் இருந்து மீண்டுவிடும். ஆனால், நம்மைச் சேர்ந்தவர் ஒருவர் காணாமல் போய்விட்டால், அதுவும் நம் குழந்தைக் காணாமல் போய்விட்டால், அந்தத் துடிப்பு, அந்தச் சோகம் வாழ்நாள் முழுமைக்கும் ஆறாது, வாழ்நாள் என்று பெற்றோருக்கு மிச்சம் இருந்தால்... 

சிறு வயதில் படித்திருக்கிறேன், 'சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம், துரோகத்தில் பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம்' என்று. அந்தப் புத்திர சோகத்தை, இருபத்தைந்து வயதில் மனநிலைத் தவறிக் காணாமல் போய்விட்டத் தன் மகனை எண்ணி இன்று வரை கண்ணீர் விடும் ஒரு தாயிடம் கண்டிருக்கிறேன். 

ஓர் ஐந்து வயது குழந்தையோ ஐம்பது வயது குழந்தையோ, மறைந்து விட்டாலோ, காணாமல் போய்விட்டாலோ, பெற்றவர் படும் வேதனை மற்றவருக்குப் புரியாது, என் குழந்தை இந்த மடியில்தான் உறங்கியது, இங்கேதான் விளையாடியது, இப்படித்தான் என்னிடம் கொஞ்சியது, உணவுக் கிடைத்ததோ, இல்லையோ, அதன் உறுப்புக்கள் நன்றாய் இருக்கிறதோ, இல்லையோ, பால் குடித்ததோ, பசியால் அழுகிறதோ, விபச்சாரத் தொழிலில் விட்டனரோ, இல்லை கொன்றுப் புதைத்தனரோ என்று ஒரு பெற்றவளின், தந்தையின் மனம் படும் பாடு திருடுபவனுக்கும், தேடும் கடமையில் இருக்கும் சிலருக்கும் புரிவதேயில்லை. 

இந்தச் சோகத்தைக் கண்டும் காணாமல், புகார் பதியாமல், அல்லது இதுபோல் எத்தனையோ? இதில், இது வேறா என்று சில அதிகாரிகள் காட்டும் அலட்சியம், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு, மக்கள் வேதனையைப் புரிந்துகொள்ளாமல் பிச்சைகாரர்களைப் போல் துரத்தியடிக்கும் சிலரின் அலட்சியம் இவைகள்தான் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது. 

1,17,480 குழந்தைகள், 352 மாவட்டங்களில் இருந்து, கடந்த ஜனவரி 2008 முதல், ஜனவரி 2010 வரை, காணாமல் போய் இருக்கிறார்கள். அவர்களில் 41,546 குழந்தைகள் இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பச்பன் பச்சாவ் அந்தோலன் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது, அது நீதிக் கேட்டுப் போராட்டம் தொடங்கியபிறகும், தமிழ்நாடு, குஜராத், மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலர்கள் இன்னும் வழக்குக்காக நேரில் செல்லவில்லை என்பதுதான் வேதனையான செய்தி. அட இங்குதான் ஒரு பசுவின் கன்றைக் கொன்றக் குற்றத்திற்கு, தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்திருக்கிறான். 

நாட்டில் முக்கியமான அறிக்கை விடும் செயல்கள் பல இருக்க, குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவது அந்தக் குழந்தைக்கும் தாய்க்கும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நடக்கும். முக்கியஸ்தர்கள் வீட்டில் இதுபோல் நிகழ்வுகள் நடப்பதில்லை, காரணம் திருடுபவனுக்கு ஒரு பயம் இருக்கலாம், செய்தால், கண்டுபிடித்துக் கழுத்தைத் திருகிவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். யாரைக் கொலை செய்தாலும், எந்தக் குழந்தையைத் திருடினாலும் நாட்டில் நீதி எல்லோருக்கும் பொது என்ற நிலை இருந்தால், இங்கே குற்றங்களும் குறைந்து விடுமே. 

இருக்கும் நீதியை நிலைநாட்டுவதில், நினைவுப்படுத்துவதில் உள்ள போராட்டம், குழந்தையைத் தேடி அலையும் அலைச்சலை விட மிகக் கொடுமையானது. 

நம் நாட்டில் இருக்கும் சட்டத்தைத் தட்டி எழுப்ப, குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்க நீதிமன்றத்தை நாடி இருக்கும் ஒரு போராட்டம், வேறொரு நாட்டில், அநீதியான ஒரு சட்டத் தீர்ப்புக் கண்டு ஆரம்பித்திருக்கிறது. 

ஐந்து வயதான பெண் குழந்தை 'லாமியா காம்தி'யைக் கற்பழித்துக் கொலை செய்த 'ஃபையான் காம்தி' என்ற சவூதியரேபிய மத குரு. இவன் பெற்ற தண்டனை, "குருதிப் பணம்" என்று சொல்லப்படுகிற வெறும் அபராதம் மட்டுமே, அதுவும் அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்க்கு. 

அந்தக் குழந்தைப் பெரும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறது, பாலூட்டும்போது இறந்த குழந்தைக்காக ஒரு சிறுமியைக் கொன்ற சட்டம், பெற்ற பெண் குழந்தையை வன்புணர்ச்சி செய்து கொன்று விட்டு, தாய்க்குப் பணம் கொடுத்தால் போதும் என்கிறது! திரைப்படத்தில் காட்டும் நிழலுக்காய் பொங்கியவர்கள், இந்த உண்மை சுடுகிறது என்று ஒளிந்து கொண்டனரோ? 

நீதி கேட்டுப் போகும் இடத்திலும், பெண்ணைப் புணர்ந்து வதை செய்கின்றன சில காவல் நிலையங்கள். ஆந்திராவில், சித்தூரில், விசாரணை என்ற பெயரில் ஒரு சிறுமியை வன்புணர்ச்சி செய்திருக்கிறான் ஒரு வெறிப் பிடித்த காவலன். இன்னும் எத்தனை எத்தனையோ வேதனை தரும் நிகழ்வுகள் உண்டு. பெண்ணென்றால் புணர்ச்சி, ஆண் குழந்தை என்றால் பணம், குழந்தையைக் கடத்தி வதைக்கும், பெண்களை நாசமாக்கும் ஒருவனுக்கு, அவனின் தாயோ அவன் வீட்டுப் பெண்களோ நினைவிற்கே வரமாட்டார்களா? 

சில நிமிடங்களில் அடங்கிப் போகும் உணர்விற்கு இத்தனை மிருகத்தனமா?
குழந்தைகளிடம் வன்முறையைக் காட்டுபவர்கள் யாரும் வாழத் தகுதி இல்லாத, முதுகெலும்பில்லாத கோழைகளே. 

இப்படிப்பட்ட மிருகங்கள் வாழும் நாட்டில், தாய்மை உணர்வு மதிக்கப்படாத நாட்டில், ஒரு குழந்தைக் காணாமல் போனால், அந்தத் தாய்ப் படும் பாடு, எந்தப் பண, உடல் வெறிபிடித்த எந்த அயோக்கியர்களுக்கும் தெரியாது. 

எந்த மதமோ, எந்த இனமோ, எந்த மொழியோ, எந்த நாடோ, குழந்தைகள் எல்லோரும் பறிக்கும் பூக்கள் இல்லை, முகர்வதற்கும், பின் வாடவிட்டுக் கொல்வதற்கும்! எத்தனையோ பந்தங்களை உடையாமல் காத்து, ஒரு புதிய உலகை படைக்கவிருக்கும் அழகான சிற்பிகள் அவர்கள்! 

ஒருவரிடம் இருந்து அவர் சொத்தைக் களவாடினால், அவரின் சோகம் இழந்தப் பொருளின் மீது சிறிது காலத்திற்கே, மீண்டும் உழைத்துச் செல்வத்தைச் சேர்த்திடுவார். ஆனால் ஒருவரின் குழந்தையைக் களவாடினால், அவர் உயிரையே களவாடுவது போலத்தான், அந்தக் குழந்தைக் கிடைக்கும்வரை அங்கே உயிரே இருக்காது. 

நிச்சயமாய் நாம் மனு நீதிச் சோழனைக் கேட்கவில்லை, மனசாட்சி கொண்ட மனிதர்களைத்தான் வேண்டுகிறோம். குழந்தையைத் தின்னும் நாகரிக மிருகங்கள் நாசமாய்ப் போகட்டும், இனியேனும் இங்கே தாய்மையும் மனிதமும் மலரட்டும்! 

உணர்வே இல்லாதவர்களிடம் நீதிக் கிடைக்காது, தன் வீட்டில் நெருப்பெரியும் வரை தீயின் கருகும் வாசம் அவர்களைச் சேராது. ஆள்பவர்களும், சட்ட அமைப்புகளும் நீதியை எல்லோருக்கும் சமமாய் வழங்கினால், பணத்தை விட உயிர் பெரிது என்று நினைத்தால், இழந்தவர் நிலையில் தன்னை நிறுத்திப் பார்த்தால், இங்கே குற்றம் குறையும், கண்ணீர் குறையும், இல்லையென்றால் இது போன்ற சட்டப் போராட்டங்களே நம் வாழ்க்கையாய் மாறிப்போகும், போராடுவோம், நாளை சந்ததியேனும் நிம்மதியாய் வாழட்டும்!
மு. அமுதாவின் வலைப்பதிவுத் தளம் http://amudhamanna.blogspot.in

Friday, 10 January 2014

நாங்க இப்படிதான்!

இன்று ஜில்லாவின் வீரம்
நாளை சுவற்றில் ஒட்டையிடும் கொள்ளை
நேற்றையது ஒரு கற்பழிப்பு
போக்குவரத்து நெரிசலில் சிதைந்த ஒரு பூனை
வாகனங்கள் நின்ற அவகாசத்தில்
வயிற்றைத் தொட்டுக் கேட்ட பிச்சை
பள்ளியில் சில உயிர்கள் தின்ற நெருப்பு
சாதிக்குத் தாரை வார்த்த ஏதோ ஒரு காதல்
வீதிக்கு வீதி வழிந்தோடும் சாராயம்
நுரையீரல் கருக்கிடும் புகை
மலிவு விலையில் சோதனை எலிகள்
தினம் சாகும் மனித உயிர்கள்
நாளையும் தொடரும் காட்சிகள்
நாயகர்கள் நாயகிகளின் ஆட்சியில்
நம்பிக்கை இழக்க வேண்டாம்
உங்கள் வீட்டுக்கும் வரும்
ஓட்டுக்கு ஒரு பணக்கட்டு!

Thursday, 9 January 2014

உளவியல்

மாசுபட்ட நீரில்,
தோன்றும் பிம்பங்களிலும்
தெரியும் கறை!

அறியாமையின் பிடிவாதத்தில்
காணும் உள்ளங்களிலும்
காண்போம் குறை!
 
Wednesday, 8 January 2014

கீச்சுக்கள்

Photo: மாத சம்பளம் வாங்குவோரின் சலுகைகளை இறுக்கிப் பிடித்து, ஒரு ரூபாய் கூட விடாமல் வரி வாங்கி, எல்லா வழிகளிலும் மக்களிடம் யோசித்துப் பிடுங்கும் புத்திசாலி அமைச்சரவைக்கு, ஒரு குழந்தையின் மாத படிப்புச் செலவு வெறும் நூறு ரூபாய்தான் என்பது முதல், மக்களின் பல்வேறு செலவினங்களை ஆதிகால நினைப்பிலேயே, நிர்ணயித்து வைத்திருக்கும் அளவுக்கோளை மாற்ற என்றுதான் மனம்வருமோ? 
முப்பத்து மூன்று ரூபாயில் வாழ்க்கை நடத்திடலாம் என்று சொன்ன மேதவிகள் நிறைந்ததல்லவா இந்த அரசாங்கம்!? 
# வாய் பேசா தாத்தா, தன் நிதிப் பெருக்கும் பழைய நிதி தாத்தா.....போதும் இந்தக் காங்கிரஸ் படுத்தும் பாடு, போங்கப்பா எல்லாம் வீட்டுக்கு! முடியல!
மாத சம்பளம் வாங்குவோரின் சலுகைகளை இறுக்கிப் பிடித்து, ஒரு ரூபாய் கூட விடாமல் வரி வாங்கி, எல்லா வழிகளிலும் மக்களிடம் யோசித்துப் பிடுங்கும் புத்திசாலி அமைச்சரவைக்கு, ஒரு குழந்தையின் மாத படிப்புச் செலவு வெறும் நூறு ரூபாய்தான் என்பது முதல், மக்களின் பல்வேறு செலவினங்களை ஆதிகால நினைப்பிலேயே, நிர்ணயித்து வைத்திருக்கும் அளவுக்கோளை மாற்ற என்றுதான் மனம்வருமோ?
முப்பத்து மூன்று ரூபாயில் வாழ்க்கை நடத்திடலாம் என்று சொன்ன மேதவிகள் நிறைந்ததல்லவா இந்த அரசாங்கம்!?
# வாய் பேசா தாத்தா, தன் நிதிப் பெருக்கும் பழைய நிதி தாத்தா.....போதும் இந்தக் காங்கிரஸ் படுத்தும் பாடு, போங்கப்பா எல்லாம் வீட்டுக்கு! முடியல!
— feeling angry.
--------------------------------------------------------------------------------------------
Intelligence is a cumulative factor of experience, and it doesn't necessitates age as the only determinant!
-----------------------------------------------------------------------------------------------
திறந்த செவிகளும், ஆர்வம் மிளிரும் கண்களும், உள்வாங்கும் மனமும் இருந்துவிட்டால், வாழும் வரை நம்மை ஆசான்கள் பின் தொடர்ந்து, முன்னடத்தி செல்வார்கள்!
# அனுபவம்
Photo: திறந்த செவிகளும், ஆர்வம் மிளிரும் கண்களும், உள்வாங்கும் மனமும் இருந்துவிட்டால், வாழும் வரை நம்மை ஆசான்கள் பின் தொடர்ந்து, முன்னடத்தி செல்வார்கள்!  
# அனுபவம்  
-------------------------------------------------------------------------------------------------------------------
சில மொழிகளைத் தெரியாது என்று சொல்லி வைப்பது சிலரின் மனங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது! — feeling amused.
----------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கிலம் என்பது ஒரு பொது மொழி, பல்வேறு மொழிப் பேசும் அனைவரையும் இணைக்கும் ஒரு மொழி, மற்றபடி ஏதோ சந்தேகம் கேட்கும் ஆங்கிலம் தெரியாத ஒருவரை இகழ்ந்து, கேலி செய்து, நம்முடைய அரைகுறை மொழிப்புலமையைக் காட்டப் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி அல்ல!
# எந்த மொழியும் கருத்துப் பரிமாற்றத்திற்கே அன்றி மற்றவரின் அகத்தைக் கொல்வதற்கு அல்ல!
--------------------------------------------------------------------------------------------------------------------
Photo: உங்கள் பணத்தில் கோடியில் நாங்கள் புரள்வோம், தெருக்கோடியில் உங்களை விடுவோம்! 
ஒவ்வொன்றுக்கும் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும், வரிச் செலுத்த வேண்டும்! 
கல்வி இல்லாமல்,வேலை இல்லாமல், ஆரோக்கியம் இல்லாமல், 
தங்குவதற்கு நிழல் இல்லாமல், பணம் இல்லாமல், அல்லது ஏதோ ஒன்று இல்லாமல் நீங்கள் மனக்கவலைக் கொண்டு வாடுவதால், உங்கள் மிச்ச சொச்ச சில்லறையையும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து நீங்கள் மன சாந்தி அடையலாம்!
போனால் போகட்டும் வறுமையில் வாடுகிறீர்கள், நூறோ இருநூறோ தருகிறோம், கொஞ்சம் காய்கறிகளும், அரிசியும் தருகிறோம், சந்தோசமாய்க் கஞ்சிக்  குடியுங்கள்.......அடுத்த தேர்தல் வரும்போது குடித்த சாராயத்திற்கும், கஞ்சிக்கும் நன்றி மறவாமால் ஓட்டளியுங்கள்! 
இந்தப் புத்தாண்டிலும் நீங்கள் மந்தைகளைப் பெருக்கி, மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்.... 

இப்படிக்கு உங்கள் தொகுதிதான்...உங்கள் ஊர்தான்.... 
ஹி ஹி ஹி அரசியல்வாதி 
உங்கள் பணத்தில் கோடியில் நாங்கள் புரள்வோம், தெருக்கோடியில் உங்களை விடுவோம்!
ஒவ்வொன்றுக்கும் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும், வரிச் செலுத்த வேண்டும்!
கல்வி இல்லாமல்,வேலை இல்லாமல், ஆரோக்கியம் இல்லாமல்,
தங்குவதற்கு நிழல் இல்லாமல், பணம் இல்லாமல், அல்லது ஏதோ ஒன்று இல்லாமல் நீங்கள் மனக்கவலைக் கொண்டு வாடுவதால், உங்கள் மிச்ச சொச்ச சில்லறையையும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து நீங்கள் மன சாந்தி அடையலாம்!
போனால் போகட்டும் வறுமையில் வாடுகிறீர்கள், நூறோ இருநூறோ தருகிறோம், கொஞ்சம் காய்கறிகளும், அரிசியும் தருகிறோம், சந்தோசமாய்க் கஞ்சிக் குடியுங்கள்.......அடுத்த தேர்தல் வரும்போது குடித்த சாராயத்திற்கும், கஞ்சிக்கும் நன்றி மறவாமால் ஓட்டளியுங்கள்!
இந்தப் புத்தாண்டிலும் நீங்கள் மந்தைகளைப் பெருக்கி, மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்....

இப்படிக்கு உங்கள் தொகுதிதான்...உங்கள் ஊர்தான்....
ஹி ஹி ஹி அரசியல்வாதி
------------------------------------------------------------------------------------------------------------
1. எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் கடமைகளை நேர்மையாகச் செய்யும் காவல்துறை அதிகாரிகள்

2. வாங்குகிற ஊதியமும், சலுகைகளுமே போதும் என்று, செய்ய வேண்டிய வேலைகளைச் செவ்வனே விரைந்து முடிக்கும் அரசாங்க அலுவலர்கள்.

3. மதங்களில் சொல்லப்பட்டுள்ள நல்லுணர்வை, மனிதாபிமானத்தை மட்டும் போதிக்கும் ஆன்மிகவாதிகள்.

4. பதவி என்பது, மக்களின் கடமையை நிறைவேற்ற, மக்கள் தந்தது, தன் வளத்தைப் பெருக்கிடக் கிடைத்த குறுக்குவழி அல்ல என்று உணர்ந்து, நாட்டு மக்களுக்காகச் சிந்தித்துச் செயல்படும் அரசியல்வாதிகள்.

5. ஆக்கபூர்வமான கண்டுப்பிடிப்புகளை அஃது எல்லோருக்கும் பயன்தரும் வகையில் கண்டுபிடித்துப் பணியாற்றும் விஞ்ஞானிகள்.

6. குடியை மறந்து, தெளிவுறக் கல்விக் கற்று, இலவசங்களுக்கு விலைபோகாமல் யாரையும் கேள்விக் கேட்டும் உறுதிக் கொண்ட மக்கள்.

7. மக்கள் மனதில் நம்பிக்கையை விளைவிக்கும் வண்ணம் செய்திகளை, செய்திகள் போலவே தரும் பத்திரிக்கைகள்.

8. மொழிக் கடந்து, மதம் கடந்து, செல்வ நிலைக் கடந்து, மக்களை ஒன்றுபோலவே கருதிப் பாதுகாக்கும் அரசாங்கம்.

9. பதுக்கலைத் தவிர்த்து நேர்மையாய் தொழில் செய்யும் வணிகர்கள்!

10. காடு நிறைந்து, மும்மாரிப் பொழிந்து, விவசாயத்தில் தன்னிறைவு அடையும் நாடு!

11. அத்தியாவசியப் பொருட்களைப் பங்குசந்தையில் இருந்து விடுவிக்கும் நாள்.

12. கல்வி, ஆரோக்கியம், அத்தியாவசியப் பொருட்கள் என அரசாங்கம் இயங்கும் அனைத்துத் துறைகளிலும் சிறந்த தரமான சேவை.

#குறைந்தது இவையெல்லாம் நடந்தால், வல்லரசு ஆவதற்கு நமக்கு அணுகுண்டுத் தேவையில்லை!

ஏதோ ஒரு வருடத்தில் இவையெல்லாம் நடக்கலாம், எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Photo: 1. எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் கடமைகளை நேர்மையாகச் செய்யும் காவல்துறை அதிகாரிகள் 

When everyone neglects you, tears you apart, belittle you and make a mockery of your feelings, believe me there is always one who loves you, who is no better than you, your life!
----------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாளடைவில் பெரும் மனச்சிதைவு வந்துவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு இருக்கிறது கதையும் அதன் போக்கும்.....குழந்தைகளையும் கூட்டுச் சேர்த்துப் பார்ப்பது பெரும் கொடுமை!

உறவுகள் அனைத்தும் பகைக் கொண்டவர்கள், ஒவ்வொருவரும், ஒவ்வொருவர் வீழக் காத்திருக்கிறார்கள், உண்ணும் உணவில் விஷம் இருக்கலாம், எச்சரிக்கை!

# சாராயம், கஞ்சா, புகை, மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்!
— feeling sick. 
------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வெறிபிடித்த நாய் மனிதரை கடித்து விட்டால், உடனே அதைக் கொல்கிறோம்.
காட்டை அழித்தால், தடம் மாறி வரும் விலங்குகளையும் ஆபத்தெனப் பிடித்துக் கூண்டில் அடைக்கிறோம்! ஆனால், பெண்களை வேட்டையாடும் மனித விலங்குகளை மட்டும் சாதி என்றும், அரசியல் என்றும் இல்லாத காரணக்காரியங்களை முன்னிருத்தி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று, எல்லோரும் சாகும் வரை வேடிக்கை பார்க்கிறோம்!

அடக்க முடியாமல் திரியும் ஆண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துவிடுங்கள், பெண்ணைப் போகப்பொருளாய் இழிவு படுத்திக் காட்டும் பத்திரிக்கைகளை, தொலைக்காட்சித் தொடர்களை, விளம்பரங்களை, திரைப்படங்களை எல்லாம் தடைச் செய்யுங்கள்.....

#அடிப்படையில் மாற்றம் காணாத வரை, தம்மை வேட்டையாட வரும் மிருகங்களைப் பெண்களே வேட்டையாட வேண்டும்! தற்காப்பு!
----------------------------------------------------------------------------------------------------------------
"சரி, முதலில் நான்தானே அந்த ஐடியா சொன்னேன்....... "

"அடக் கேளேன்..... "

"சரி, நீ பேசினதை நான் கேட்டேன், இப்போ நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு ....ஒரே ஒரு நிமிஷம் பா...."

"ஐயோ, சரி, இன்னைக்குப் பேசினா சரியா இருக்காது, நீ கேட்க மாட்டே, நீ நாளைக்கு வா, நான் பேசுறேன்!"

நான்கரை வயது மகள் ஓர் எட்டு வயது தோழியுடன் யார் முதலில் விளையாடுவது என்ற விவாத்தில் கூறியதுதான் மேற்கூறியே வாக்கியங்கள்.....
அம்மாவிடத்தில் விட்டுகொடுக்காமல் குறும்பு செய்யும் குழந்தை, தோழியுடன் ஒரு பெரிய மனுஷத் தோரணையில் பேசும்போது புரிகிறது, இந்தக் காலக் குழந்தைகள் ரொம்பத் தெளிவாய் இருக்கிறார்கள்!
feeling blessed.
Photo: "சரி, முதலில் நான்தானே அந்த ஐடியா சொன்னேன்....... "

"அடக் கேளேன்..... "

"சரி, நீ பேசினதை நான் கேட்டேன், இப்போ நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு ....ஒரே ஒரு நிமிஷம் பா...." 

"ஐயோ, சரி, இன்னைக்குப் பேசினா சரியா இருக்காது, நீ கேட்க மாட்டே, நீ நாளைக்கு வா, நான் பேசுறேன்!" 

நான்கரை வயது மகள் ஓர் எட்டு வயது தோழியுடன் யார் முதலில் விளையாடுவது என்ற விவாத்தில் கூறியதுதான் மேற்கூறியே வாக்கியங்கள்.....
அம்மாவிடத்தில் விட்டுகொடுக்காமல் குறும்பு செய்யும் குழந்தை, தோழியுடன் ஒரு பெரிய மனுஷத் தோரணையில் பேசும்போது புரிகிறது, இந்தக் காலக் குழந்தைகள் ரொம்பத் தெளிவாய் இருக்கிறார்கள்! 
-----------------------------------------------------------------------------------------------------------------
ஊக்கபடுத்தும் வார்த்தைகள் குழந்தைகளின் முகத்தையும், உலகத்தையும் இன்னும் சற்று அதிகமாகப் பிரகாசிக்கச் செய்கிறது! 
---------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவரின் சோம்பலை இன்னொருவரின் உழைப்பு ஈடு செய்யும்!
-------------------------------------------------------------------------------------------------------------------
எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஒருவருக்குக் கடைசியில் கிடைப்பதென்னவோ தனிமையும், ஏமாளி பட்டமும் தான்!
--------------------------------------------------------------------------------------------------------------------
ஓர் அரசு அலுவலகம், வரிசையில் மக்கள், கௌண்டரின் அருகே இரண்டு கண்காணிப்புக் காமெராக்கள்....ஒருவர் வருகிறார், "சார் நான் கிளம்பறேன்" என்று நகர, ஒரு கௌண்டரில் இருந்தவர் அவசரமாக இன்னொரு ஊழியரை அழைத்து, சென்றவர் பின்னே அனுப்புகிறார். விடைப்பெற்றுச் சென்றவர் மீண்டும் வருகிறார், ஒரு புத்தகத்தைக் கௌண்டரில் இருப்பவரிடம் கொடுத்து, "அப்புறம் படிங்க சார், நான் வரேன்!" என்கிறார்! மேட்டர் ஓவர்!

#2G, 3G எல்லாம் கடந்தாச்சு, யார்கிட்ட?! 
---------------------------------------------------------------------------------------------------------------------
சுட்டுவிடுவான் என்று தெரிந்தும் வெள்ளையனை வீரத்துடன் எதிர்த்தவர்களின் வாரிசுகளா (நாம்) இந்தியர்கள்?
#பணம், பதவி என்று சொன்னவுடன் நிறையப் பேரைக் காணோம், யார் காலில் யாரோ!
— feeling amused அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
------------------------------------------------------------------------------------------------------------------------
ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற அறிவிப்பு/சலுகைத் தாங்கி வரும் பெரும்பாலான பொருட்கள் யாவும், இரண்டின் விலையை ஒன்றில் தாங்கியே வருகிறது!
# வியாபாரத் தந்திரம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------
 
நல்மனம் மட்டுமே

பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தோழியின் கடைசித் தங்கையின் திருமணத்திற்குச் செல்ல நேர்ந்தது, உறவுகள் நிறைந்த சபையில், அவளின் மொழி எனக்குத் தெரியாது என்பதற்காக மொத்த உறவுகளும் எனக்குத் தெரிந்த மொழியில் பேசியதும், உறவுகளிடம் பேசினாலும், எனக்குத் தேவையில்லை என்றாலும் உடனே எனக்கு மொழிப்பெயர்த்துக் கூறிய பாங்கும், எனக்குப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்று நானே கூறாமல், நினைவு வைத்துக் கொண்டு மொத்த உறவுகள் செய்த விருந்தோம்பலும், நான்தான் பெரியம்மா, நான் சித்தி என்று தானே முன்வந்து அறிமுகம் செய்து கொண்டு குடும்ப நிகழ்வுகளைத் தங்கள் மகளின் நட்பை மதித்துப் பகிர்ந்து கொண்ட விதமும், பல வருடங்கள் ஆனாலும் சாதிகளையும், மதங்களையும் கடந்து நினைவில் நீக்கமற நிறைந்து விட்ட அன்பைப் பறைசாற்றியது!.

எல்லா எளிய மனிதர்களும் அன்பானவர்களே!
சாதியும் மதமும் பூசல்களும் சண்டைகளும் எளிய மனிதர்கள்
ஒன்று சேராமல் இருக்கவும், பதவிக்காகவும், பணத்திற்காகவும் ஏமாற்றுகாரர்கள் வலியவர்களாய், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட/படும் காட்சிப் பிழைகளே!

#மதம் இல்லை நல்மனம் மட்டுமே!

வாழ்க்கைக் கோல்கள்

ஆர்வம் மட்டுமே திறவுகோல்,
நம்பிக்கை என்பது நெம்புகோல்,
தேவை என்பது ஊன்றுகோல்
எதையும் புதிதாய்க் கற்றிட!

மூன்று கோல்களில்
எது பழுதடைந்தாலும்
கற்றல் பயணம் முடிந்துவிடும்!
 
Tuesday, 7 January 2014

புன்னகை

மறதி என்பது
இல்லாமல்
போயிருந்தால் - இந்த
புன்னகையும் இல்லாமல்
போயிருக்கும்

அந்தப் புன்னகை
இல்லாமல்
போயிருந்தால் - இந்த
வாழ்க்கை ஒன்றும்
வறண்டு போயிருக்கும்

அந்த வாழ்க்கை என்பது
வறண்டு போயிருந்தால் - இந்த
நம்பிக்கை என்பது
துவண்டு போயிருக்கும்

இந்த நம்பிக்கை ஒருநாள்
துவண்டு சாய்கையில் - அந்த
வாழ்க்கையும் முடிந்துபோகும்
பெரும் புன்னகையின் விதைகளை
மண்ணில் ஈந்து!

Saturday, 4 January 2014

தாய்மை

இரண்டு சம்பவங்கள்:

1. படிக்காத ஒரு கிராமத்துப் பெண், தன் இரண்டு வயது குழந்தையைக் கவனக்குறைவால் கவனிக்காமல் விட, குழந்தைச்  சாலையின் அந்தப் பக்கம் ஒரு கடையில் நின்று கொண்டிருந்த தந்தையை நோக்கி ஓடி, ஒரு காரின் குறுக்கே விழுந்து, எப்படியோ ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் வண்டியில் அடிபடாமல் தப்பியது.....

2. ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், சென்சார் சரிவர வேலை செய்யாத ஒரு லிப்டில், ஒரு படித்த நகரத்துத் தாய், இரண்டு குழந்தைகளை (இரண்டு மற்றும் ஐந்து வயது இருக்கலாம்) அழைத்துக் கொண்டு லிப்டின் உள்ளே வரும்போதும், வெளியில் செல்லும்போதும் குழந்தைகளைப் பின்னே விட்டு விட்டு, அந்தப் பெண் மட்டும் பொருட்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே முன்னே சென்றார். குழந்தைகளின் பாதுகாப்புக்காக அந்த லிப்டின் கதவை அவர்கள் வெளியேறும் வரை நான் பிடித்துக்கொண்டு நிற்க, அந்தத் தாயின் அக்கறையின்மை எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இந்த இருவேறு சம்பவங்களிலும், அந்த இரண்டு பெண்களிடமும் பேசுகையில், கிராமத்துப் பெண் தன் தவறை சரி செய்யக் குழந்தையை அடித்தார், நகரத்துப் பெண் தன் தவறையே உணராமல், பெரும் அலட்சியத்தோடு சென்று விட்டார்.

இருவேறு சம்பவங்களில் என்னுடன் இருந்த உறவும் நட்பும், இவங்க எல்லாம் இப்படிதான், நீ உன்னுடைய வேலையைப் பாரு என்றே  அறிவுறுத்தினார்கள்.
அட, என்னதான் நடக்குது இங்கே, ஒன்பது மாதங்கள் சுமந்துப் பெற்று, அதன் ஒவ்வொரு அசைவுக்கும், அழுகைக்கும் காரணம் தேடி, ஈ, எறும்பு அண்டாமல், கொசு கடிக்காமல் பாதுகாத்து, பிரசவத்திற்கு முன்பும், பால் கொடுக்கும் போதும் குழந்தைக்கு எது சேரும் எது சேராது என்று தன் விருப்பத்தை மறந்து, குழந்தை நலம் ஒன்றே பேணி, பார்த்துப் பார்த்துப் பெற்று வளர்க்கும் போது, எல்லாத் தாய்மையும் இப்படிதானே என்று ஒரு தாயாய் நான் எப்போதும் நினைத்துக் கொள்வது உண்டு. ஆனால் நாகரிகம் வளர வளர குழந்தைகள் என்பதும் இங்கே ஏதோ ஒரு தேவைக்காக ஆகிவிட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

திருமணம் ஆகிவிட்டால் மட்டுமே குழந்தைப் பெற்றுக் கொள்ளும் தகுதி வந்துவிடாது, தாய்மை உணர்ந்து, மனம் முழுக்கத் தாய்மை நிறைந்து, தன்னையும் தன் குழந்தைகளையும் நல்லபடி வளர்க்கும் மனப்பக்குவமும், உழைப்பிற்குச் சுணங்காத உடல் வலிமையையும், தெளிவான சிந்தனையும் இப்போதுள்ள சூழலில் எந்தத் தாய்க்கும் அவசியம்.

சுயநலம் மிகுந்த பெண்கள், தன் அழகை மட்டுமே போற்றிப் பாதுகாக்கும் பெண்கள், உழைக்க மறுக்கும் பெண்கள், வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் நம்பும் பெண்கள், படிப்பறிவே இல்லாமலும், தெளிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லாத பெண்கள், கொடுமைப்படுத்தப்படும் பெண்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள், சரியான வழிக்காட்டுதல் இல்லாத பெண்கள் என நீண்டு செல்லும் இந்த வரிசையில், இவர்கள் சுமந்துப் பெரும் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது எப்போதும் கேள்விக்குறிதான்.

இப்படிகூட அம்மாக்கள் இருக்க முடியுமா என்ற கேள்வியில் இருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.....ஒன்று மட்டும் தெரிகிறது, இப்பெண்களுக்குத் ஏதோ ஒரு குறை இருக்கிறது, அவர்களுக்குத்  தேவையான ஒரு வழிகாட்டுதலை, நல்ல முறையில் அந்த வீட்டில் உள்ள பெரியவர்களோ, அல்லது கணவன் எனும் உறவோ காட்டுதல் அவசியம்! அல்லது தன்னை மட்டுமே மையப்படுத்திக்கொள்ளும் பெண், இன்னொரு உயிரைப் பிரசவிக்காமல் இருத்தல் நலம்!

பெண்மையைப் போற்றுங்கள், நாளை சந்ததி நல்லபடி வாழ! 

Friday, 3 January 2014

வெட்டி விமர்சனம்!

வேர்வையில் நலிந்து,
மஞ்சளில் மிளிர்ந்து,
ஒப்பனையில் ஒளிர்ந்து,
உழைக்கும் மகளிர்க்குண்டு  
எத்தனையோ முகங்கள்
அந்த முகங்களின் பின்னே
உள்ள மனம் தெரியாமல்,
அவர்களின் தோற்றத்தையே
நடத்தையாக உருவகித்து
விமர்சிக்கிறீர் 
அழுக்கடைந்த மனங்களை
மறைத்துக் கொண்டு!
# வெட்டி விமர்சனம்

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!