Wednesday 8 January 2014

நல்மனம் மட்டுமே


பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தோழியின் கடைசித் தங்கையின் திருமணத்திற்குச் செல்ல நேர்ந்தது, உறவுகள் நிறைந்த சபையில், அவளின் மொழி எனக்குத் தெரியாது என்பதற்காக மொத்த உறவுகளும் எனக்குத் தெரிந்த மொழியில் பேசியதும், உறவுகளிடம் பேசினாலும், எனக்குத் தேவையில்லை என்றாலும் உடனே எனக்கு மொழிப்பெயர்த்துக் கூறிய பாங்கும், எனக்குப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்று நானே கூறாமல், நினைவு வைத்துக் கொண்டு மொத்த உறவுகள் செய்த விருந்தோம்பலும், நான்தான் பெரியம்மா, நான் சித்தி என்று தானே முன்வந்து அறிமுகம் செய்து கொண்டு குடும்ப நிகழ்வுகளைத் தங்கள் மகளின் நட்பை மதித்துப் பகிர்ந்து கொண்ட விதமும், பல வருடங்கள் ஆனாலும் சாதிகளையும், மதங்களையும் கடந்து நினைவில் நீக்கமற நிறைந்து விட்ட அன்பைப் பறைசாற்றியது!.

எல்லா எளிய மனிதர்களும் அன்பானவர்களே!
சாதியும் மதமும் பூசல்களும் சண்டைகளும் எளிய மனிதர்கள்
ஒன்று சேராமல் இருக்கவும், பதவிக்காகவும், பணத்திற்காகவும் ஏமாற்றுகாரர்கள் வலியவர்களாய், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட/படும் காட்சிப் பிழைகளே!

#மதம் இல்லை நல்மனம் மட்டுமே!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!