அயர்ந்துக் கிடக்கும்
நிலக்காதலனின் மேல்
விரவிக்கிடக்கிறாள்
வேம்பு மகள்,
கனியாக, பூக்களாக
தன் கரம் நிறைத்த இலைகளாக
அவன் மேனியெங்கும்
நிழல் உடுத்தி!
வேம்பும் நிலமும்
வேறு சாதி என,
நிரவிக்கிடந்தவளை,
குப்பையென
அவசரமாய் ஒதுக்கி
தள்ளி,
அதிக மகசூலெனும்
வம்ச விருத்திக்காக,
இறக்குமதி ரசாயனத்தை
அள்ளித் தெளித்தது,
கண்ணைவிற்று
ஓவியம் வாங்கிய
கலாரசிகனைப்போல,
ஒரு மனிதகுலம்!
No comments:
Post a Comment