Tuesday, 17 February 2015

வெறுமை!


ஓடும் ரயிலில் ஓடும் காட்சிகள்
 வேம்பின் அடியில்
 விரிந்திடும் நிழல் ஓவியங்கள்
 பால்யத்தில் இருந்தே
 தோள் சாயும் நட்புகள்
 திண்ணையில் வெற்றிலை
 இடிக்கும் வீட்டு முதியவர்கள்
 மடியில் தவழும் பூனைகள்
 வாலைக் குழைத்து வரும் நாய்கள்
 சுழித்தோடும் ஆறுகள்
 நீண்டிருந்த கடற்கரையில்
 நிறைந்திருந்த சிப்பிகள்
 கொல்லைப்புறத்துப் பசுக்கள்
 மோதி விளையாடும் கன்றுகளென
 அப்புறம்....அப்புறம்...பிடித்தது எது?
 என்ற உன் கேள்விக்கு
 பிடிக்கும் பிடிக்குமென்று நான்
 பட்டியலிட்ட எதுவும்
 உனக்குப் பிடித்தமில்லை.....

 உன்னை மட்டும் பிடிக்கும்,
 மலர்ந்து சிரிக்கையில்
 விரியும் உன் கன்னக்குழிபிடிக்கும்,
 இனி உனக்கு என்னை மட்டும்
 பிடித்தால் போதுமென்றுரைத்து
 நீ அணைத்த இம்மணநாள் இரவில்
 இனி எப்படிச் சொல்ல
 நெஞ்சத்தில் விழுந்த குழியை
 இக்கன்னக்குழி நிரப்பாதென்று?!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!