Monday 2 March 2015

முடியுமா‬?


1. ஒரு குடும்பத்தின் வறுமையைப்
போக்க நினைத்தால், அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைக்கு, சிறந்த கல்வியைக் கொடுங்கள்.
2. ஒரு குற்றவாளி உருவாவதைத் தடுக்க நினைத்தால் வறியவரோ, எளியவரோ, வலியவரோ பசி என்று வரும் வேளையில் வயிற்றுக்குச் சோறிடுங்கள்.
3. பஞ்சத்தை ஒழிக்க நினைத்தால்
பூமியில் வாழ்நாளில் ஒரு மரத்தையேனும் வளர்த்து விடுங்கள்.
4. ஊழலை ஒழிக்க நினைத்தால்
உங்கள் ஓட்டுரிமையை சரியாய் பயன்படுத்துங்கள், உங்கள் வேலைகளில்/தொழிலில் நேர்மையைக் கடைபிடியுங்கள்.
5. மனிதாபிமானம் தழைக்க விரும்பினால், குழந்தைகளிடம் வன்முறையைக் காட்டாதீர்கள்
அன்பையையும் அரவணைப்பையும் நீங்கள் அங்கே தர அது விருட்சமாகும்.
6. பிறரின் துயர் துடைக்க நினைத்தால், தானம் செய்யுங்கள்,
டாட்டா, பிர்லா, அம்பானி என்று ஆனபிறகு தான் தானம் செய்வேன் என்றால் அதற்குள் ஒரு தலைமுறை கருகிப் போகும், இல்லை வன்முறை ஏகும்.
7. மன்னிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்,
8. மகிழ்ச்சியாக இருக்க நினைத்தால்,
உங்கள் துயரங்களை உங்களுக்குள்ளும், மகிழ்ச்சியை, பந்தியிலும் வையுங்கள், பகிர ஆத்மார்த்தமான ஒரு மனம் இல்லையென்றால், துயரங்களை கடக்கப் பழகுங்கள்.
9. இங்கே பெரும்பாலும் அவரவர்க்கு வரும்போதோ, இல்லை
ஒருவர் மரணித்தப்பின்னரோ தான் துயரம் புரியும், அதுவும் சில காலமே! முகாரி வேண்டாம், சிரித்துக்கொண்டே வாழ்ந்து விட்டுப் போங்கள், வாழ்க்கையும் சின்னது, மனித மனமும் சின்னது!
10. இறுதியாக, நாம் எடுத்துப் போகப்போவது, ஏதுமில்லை என்றாலும் ஒரு சுதந்திர பூமியையும், சுத்தமானக் காற்றையும் , காழ்பற்ற ஒரு பூமியையும் விட்டுச் செல்வோம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!