Monday 2 March 2015

பிச்சைக்காரர்கள்‬



ஆயிரம் ரூபாய் முதியோர் உதவித் தொகை கொடுக்கும் போது, அதில் இருநூறு ரூபாய் எடுத்துக் கொள்ளும் தபால் ஊழியர், எரிவாயு உருளையைக் கொண்டு வந்து தந்து,அரசு ஏற்றிய விலை போதாதென்று, இருபத்தைந்து ரூபாய் அதிகமாய் வாங்கிச் செல்லும் ஊழியன், சாக்கடை அடைப்பெடுக்க, தொலைபேசிப் பழுதை சரி செய்ய என்று கடைநிலை ஊழியர் தொடங்கி, கோப்புக்களுக்குக் கையெழுத்திடும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் வரை, அவரவர் வேலைக்கு ஊதியமும் வாங்கி, கையூட்டும் வாங்கும் இவர்களிடம் கேட்க முடியாத கேள்விகளை, காட்ட முடியாத இயலாமையைத் தான், ஒன்றுமில்லாமல், பசியென்று கையேந்தும் இவர்களிடம் நாம் கேட்கிறோம்.......
"ச்சே, உழைச்சு சாப்பிடக் கூடாது, கையும் காலும் நல்லாதானே இருக்கு? / "மூட்டைத் தூக்கியோ, குப்பைப் பொறுக்கியோ பொழைக்கலாம் ?! / வந்துட்டாங்க.. பிச்சை எடுக்க, போ போ...."
‪#‎பிச்சைக்காரர்கள்‬
(இந்தப் பதிவு பிச்சைக்கரார்களின் நலன் கருதி வெளியிடப்படுகிறது!)

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!