Monday 2 March 2015

மகள்


வெளியில் சென்றிருந்தபோது, மகனை தண்ணீர் பாட்டில் எடுத்து வர சொல்லி, கிளம்பினோம்.....பிறகு அவன் கொண்டு வரவில்லை....அதற்கு மகள் கேட்டது சொன்னது....
அம்மா தண்ணி வேணும்
இப்போதானே கிளினிக்ல வாங்கிக் குடிக்கக் கொடுத்தேன்....
அது அப்போ, எனக்கு இப்போ தண்ணி வேணும்...
இங்கே பாருடா செல்லம் வழியில் கடை இல்லை, பத்து நிமிஷத்தில் வீட்டுக்குப் போய்டுவோம், குடிச்சுக்கலாம் ....
நீ ஏன் தண்ணிப் பாட்டில் எடுக்கல...
அம்மா அண்ணனை எடுக்கச் சொன்னேன்மா, அவன் மறந்துட்டான்
நீ ஏன் அவன்கிட்டே சொன்னே, என்கிட்டே சொல்ல வேண்டியதுதானே ....
சரி, ஒருவேளை நீயும் மறந்துட்டா...?
சரி நானும் மறந்துட்டா, நீ எடுக்க வேண்டியதுதானே.....??
சரி நானும் மறந்துட்டா? அப்படி நினைச்சுக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க ?
ஹ்ம்ம் நீ மறக்கமாட்டே
எப்படிச் சொல்ற... ?
நீதான் புத்திசாலி ஆச்சே .... (சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு வேற!)
அடேய், புத்திக்கும் மறதிக்கும் என்ன சம்பந்தம்?
ம்ம்ம் எனக்குத் தெரியாது, எங்கம்மா புத்திசாலி அவ்வளவுதான் ....
(சமயத்தில் இந்த வாலுங்க நம்மைப் புகழ்றாங்களா, கிண்டல் பண்றாங்களான்னு ஒன்னுமே புரியல!)
தட் மிக்சட் பீலிங்க்ஸ் வந்த மொமென்ட்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!