கல் தடுக்கி விழவில்லை
உன் சொல் தடுக்கி விழுந்துவிட்டேன்
புயல் அடித்தும் சாயவில்லை
உன் சுயநலக் கூற்றில் சாய்ந்துவிட்டேன்
இந்த உப்புக் காற்றும் எரிக்கவில்லை
உன் இரக்கமிலா காய்தலில் எரிந்துவிட்டேன்
ஆர்பரிக்கும் கடலின் ஆழம் தெரியவில்லை
உன் அகத்தின் ஆழம் கண்டுக்கொண்டேன்
ஈயென இரக்கவில்லை
எனினும் அமிலம் ஈயப்பெற்று இறந்துவிட்டேன்
இனியென்ன இருக்கிறது என்னிடம்
அன்பில் ஈவதற்கு ?
என் தேய்ந்துவரும் இதயத்தின் ஓசையையும்
உனக்குப் போதுமென்ற
இந்த வெற்றுப் புன்னகையையும் தவிர !?
No comments:
Post a Comment