Monday, 2 March 2015

உலகச்_சினிமா_அபத்தங்கள்‬

குழந்தைகள் காதலித்து ஓடிப்போனபின்னர் என்ன நடக்கும் என்று காட்டுவதில்லை, மாமன் மகனும் அத்தை மகளும் திருமணம் செய்து, மனநிலைப் பிறழ்ந்த குழந்தையைப் பெற்று அதைச் சபித்து, வெந்து நொந்து மாய்வதையும் நீங்கள் காட்டுவதில்லை........
மனநிலை பிறழ்வு, குருடு, உடல் ஊனம் என எத்தனையோ குறைபாடுகள் சொந்தத்தில் திருமணம் செய்பவர்களின் வாரிசுகளுக்கு வரும் (வருகிறது) என்று அறிவியல் உணர்த்தினாலும், இன்னமும் மாமன் மகன், அத்தை மகளென்று காதல் வளர்க்க சொல்லிக்கொடுத்து, உலகச் சினிமா எடுக்கிறார்கள் தமிழ் திரையுலகினர்!
உங்களின் காட்சிப்படுத்தலுக்கு, கவர்ச்சிக் காரணிகளுக்கு, வசூலுக்கு, புகழுக்கு, அறிவியல் உண்மைகளையும், குழந்தைகளையும் கேலிப்பொருளாக்க வேண்டாமே?!
திருந்துங்கப்பா! 
------------------------------------------------------------------

ஏழைகளின் வாழ்க்கையெல்லாம்
உலகச் சினிமா ஆகிறது,
ஏழைகளின் உலகம் என்னவோ
அப்படியேத்தான் இருக்கிறது!!
(போஸ்டர் அடிக்கும்போது, பாலபிஷேகம் செய்யும்போது, வீட்டில் திருடி டிக்கெட் வாங்கிப் பார்க்கும்போது, தல, தளபதி, சூப்பர் ஸ்டார், சூப்பர் இல்லாத ஸ்டார்ன்னு சட்டையைக் கிழிச்சிட்டுத் திரியும்போதெல்லாம்....இதெல்லாம் உங்களுக்குத் தோணவே தோணாதா?! )

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!